உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காலமுறை ஊதியம் வழங்க தி.மு.க., அரசுக்கு கசக்கிறதா? பா.ஜ., நாகேந்திரன் கேள்வி

காலமுறை ஊதியம் வழங்க தி.மு.க., அரசுக்கு கசக்கிறதா? பா.ஜ., நாகேந்திரன் கேள்வி

சென்னை: 'வீண் செலவுகளுக்கு, பணத்தை வாரி இறைக்கும் தி.மு.க., அரசுக்கு, சத்துணவு ஊழியர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்குவதற்கு மட்டும் கசக்கிறதா' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை

முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது, 'சத்துணவு , அங்கன்வாடி ஊழியர்களை, அரசு பணியாளர்களாக பணியமர்த்தி காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படும்' என, தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆளுங்கட்சியானதும் அவர்களுக்கு ஏமாற்றத்தை மட்டும் பரிசளிப்பது தான் பொற்கால ஆட்சியா.வீண் செலவுகளுக்கும், வெற்று விளம்பரங்களுக்கும், பணத்தை வாரி இறைக்கும் தி.மு.க., அரசுக்கு, மழலைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும்.சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதற்கு மட்டும் கசக்கிறதா. அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை வழங்காமல், அரசு கஜானாவை மட்டும் காலி செய்து, தமிழகத்தை நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கும் தி.மு. க., அரசை, தேர்தலில் , மக்கள் துரத்தியடிப்பது நிச்சயம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அக்., 1 முதல் யாத்திரை

தமிழகத்தில் மக்களை சந்தித்து, பா.ஜ.,வை பலப்படுத்த, அக்கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அக்., 1 முதல் தமிழகம் முழுதும் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். யாத்திரை பணிகளை ஒருங்கிணைக்க, மாநில பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம் தலைமையில், தனி குழுவை, தமிழக பா.ஜ., அலுவலக செயலர் சந்திரன் நியமித்துள்ளார். குழுவில், மாநில துணைத் தலைவர் ம.வெங்கடேசன், மாநில செயலர்கள் மீனாட்சி நித்யசுந்தர், கே.வெங்கடேசன் உட்பட ஒன்பது பேர் உள்ளனர். இக்குழுவினர், நயினார் நாகேந்திரனின் யாத்திரை செல்லும் இடங்களில், மாவட்டத் தலைவர்களுடன் ஆலோசித்து, ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

duruvasar
செப் 20, 2025 15:14

ஸ்டார்ட் சொல்லியாச்சு , கேமெராவும் ஆன் செய்தாகிவிட்டது ஆக்ஸ்ன் தான் பாக்கி. சீக்கிரம் குதியுங்க.


அஜய் இந்தியன் தெற்கு தமிழகம்
செப் 20, 2025 12:28

இவர் தனது தோல்வியை ஏற்று கொண்டு இவர் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் உடனடியாக


Barakat Ali
செப் 20, 2025 11:39

நயினார் அண்ணாச்சி ....... உங்க கூட்டணி ஆட்சியைப் பிடிச்சா கொடுப்பீர்களா ????


T.sthivinayagam
செப் 20, 2025 14:05

டாஸ்மாக் கடைகளை மூடுவோம் மது விலக்கை அமல்படுத்துவோம் என்று சொல்ல கூட மாட்டார்கள் எல்லாம் சுயநல பேச்சு மட்டும் தான் என்று மக்கள் கூறுகின்றனர்


ManiK
செப் 20, 2025 10:05

நல்ல கேள்வி, இன்னும் பல கசப்பான கேள்விகளை இந்த திமுக அரசிடம் கேட்கவேண்டும்.


pakalavan
செப் 20, 2025 09:16

உங்களுக்கு தெரியாதா ? யாரு அந்த சாருன்னு ?


vbs manian
செப் 20, 2025 08:55

உரிமை தொகை அன்பு கரங்கள் மாணவர் உதவி எல்லாவற்றுக்கும் நிதி இருக்கிறது. ஒய்வு ஊதியம் செவிலியர் தற்காலிக பணியில் உள்ளோருக்கு சம்பளம் நிதி இல்லை


பாலாஜி
செப் 20, 2025 08:11

தமிழ்நாடு அரசுக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு ஆட்சி செய்யும் பாஜக பல ஆண்டுகளாக தராமல் இருப்பது கசப்பின் காரணமாகவாக தான்


pakalavan
செப் 20, 2025 06:22

சார் அந்த 4 க்ரோர்


raja
செப் 20, 2025 07:58

மொதல்ல இதைவிட பெரிய விசயமான யார் அந்த சாருண்ணு விடியலிடம் கேள்ளுங்க...


Vasan
செப் 20, 2025 08:05

No, its Rs 3.99 crore only. 399 lakhs divided by 3 equal to 133 lakhs. Its a sheer coincidence, that Thirukural has 133 headings.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை