உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமலாக்கத்துறை குறி உதயநிதிக்கா?

அமலாக்கத்துறை குறி உதயநிதிக்கா?

அ.தி.மு.க., நேற்று வெளியிட்ட அறிக்கை:

'டாஸ்மாக்' நிர்வாக இயக்குநர் வீட்டின் அருகே, கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முக்கிய விபரங்கள் குறித்த 'வாட்ஸாப்' உரையாடல் பதிவுகள் கிடைத்ததாகவும், இவை, துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது என்றும் செய்திகள் வருகின்றன.டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு உத்தரவிட இந்த ரத்தீஷ் யார்? டாஸ்மாக் ஏலம் வெளிப்படையாக நடந்தால், தி.மு.க., நிர்வாகிகளுக்கு பாதிப்பு என்று, அதன் நிர்வாக இயக்குநரிடம் ரத்தீஷ் கூறுவது ஏன்? யாருக்கான குரலாக அவர் பேசுகிறார்?உதயநிதியுடன் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எடுத்த புகைப்படத்தை, அவருக்கே அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்தவரா இவர்? டாஸ்மாக்கில் வாங்க வேண்டிய மதுபானங்கள் பட்டியலை, அதன் நிர்வாக இயக்குநருக்கு அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்த இந்த ரத்தீஷ் தான், தி.மு.க.,வின் புதிய அதிகார மையமா?'லாஜிக்'காக பார்த்தால், ரத்தீஷ் என்ற தனி நபரின் மெசேஜிக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு துளியும் இல்லை. இவர், துணை முதல்வருக்கு இணை முதல்வராக இருப்பதனாலோ என்னவோ, அனைத்து அதிகாரிகளும் பணிந்தனரா? ரத்தீஷை நெருங்கும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையம். இந்த குறி உதயநிதிக்கா?'யார் இந்த தியாகி' எனவும், இந்த தியாகியின் பின்புலத்தில் உள்ள, 'அந்த சார் யார்' எனவும் கேள்விகள் எழுகின்றன. கேள்விகளுக்கான பதிலும், அதற்கான தண்டனைகளும் விரைவில் கிடைக்கும் என நம்புவோம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venkates
மே 18, 2025 08:38

உதயநிதி பங்கு என்ன? எழுதுங்கள் ...


reghupathy umashankar
மே 17, 2025 18:53

டாஸ்மாக் ஊழலின் அளவு பல ஆயிரம் கோடிகளை தொடும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்த பணம் பெரிய பெரிய ஆட்களுக்கு எப்படி , யார் மூலமாக எந்த வழியில் சென்றது என்பதுதான் கண்டுபிடிக்கப்பட வேண்டிய ஓன்று.. அமலாக்கத்துறை அதைசெய்யுமா ?


திருட்டு திராவிடன்
மே 17, 2025 17:28

ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டவர்கள் மண்ணுக்குள்ளே போன கதை உனக்குத் தெரியுமா. நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன.


venugopal s
மே 17, 2025 17:00

சும்மா அடிச்சு விடுங்க, காசா பணமா?


முருகன்
மே 17, 2025 15:52

இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்


பாரத புதல்வன் தமிழக குன்றியம்
மே 17, 2025 12:12

இவனுடைய போட்டோவை போட்டு ஏன் அவனை விளம்பர படுத்துறீங்க தினமலர் ...!!!


ஆரூர் ரங்
மே 17, 2025 09:26

யார் அந்த சார்? ரதீஸ் சார்?.


V S Narayanan
மே 17, 2025 06:46

Hang all concerned in public as being done in gulf countries.


sridhar
மே 17, 2025 14:16

Instead, let us vote for the right party and right candidates. DMK+ is pure poison.


சாமானியன்
மே 17, 2025 05:39

அந்த ₹50000 கோடி ஊழல் பணத்தை எண்ணி முடிச்சாச்சா சின்னவரே ! எல்லாம் பழைய கச்சடா நோட்டுக்களாமே! சளி பிடிக்கப் போகுது. விதம் விதமா கொள்ளை அடித்தா விதம் விதமா பிரச்னை வரத்தானே செய்யும். ?


நிக்கோல்தாம்சன்
மே 17, 2025 01:45

சர்வாதிகாரியின் ஆட்சியில் ஊழல் மன்னர்கள் சகஜம்தானே அமைச்சரே


புதிய வீடியோ