உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருச்சி கிழக்கில் விஜய் போட்டியா?

திருச்சி கிழக்கில் விஜய் போட்டியா?

சட்டசபை தேர்தலில், த.வெ.க., தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில், போட்டியிட வாய்ப்பு உள்ளது என, அவரது கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r8tmz5fi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அடுத்த ஆண்டு தேர்தலில், முதன்முறையாக, த.வெ.க. போட்டியிடுவதால், த.வெ.க.வுக்கு என்ன சின்னம் கிடைக்கும், எந்த தொகுதியில் விஜய் போட்டியிடுவார் என்று அக்கட்சியினர் ஆர்வமாக விவாதிக்கின்றனர். வரும் 13ம் தேதி, திருச்சியில் பிரசார சுற்றுப்பயணத்தை விஜய் துவக்க உள்ளார். திருச்சி கிழக்கு, திருவாடானை, மதுரை மேற்கு என மூன்று சாதகமான தொகுதிகளை கட்சியினர் கண்டறிந்துள்ளனர். திருச்சி கிழக்கு தொகுதியில், ஆதிதிராவிடர் ஓட்டுகளும், கிறிஸ்துவ, முஸ்லிம் ஓட்டுகளும், வெள்ளாளர் ஓட்டுகளும், அதிகம் உள்ளன. எனவே, விஜய் அங்கு போட்டியிட்டால், வெற்றி நிச்சயம் என அவர்களின் சர்வேயில் தெரிய வந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், திருச்சி கிழக்கு தொகுதியில், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை விட, 50 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். வரும் தேர்தலில், அத்தொகுதியில் போட்டியிட, அமைச்சர் மகேஷ் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனால் திருச்சி கிழக்கு தற்போதே முக்கியத்துவம் பெற துவங்கி உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
செப் 10, 2025 14:33

லயோலா நிர்வாகம் முடிவு செய்யும்?


viki raman
செப் 10, 2025 12:27

Lottery adhibar mr. martin sponcer, Mr. Vijay Raja veetu kannukutti nee shooting la nalla performance pannureenga.


Kulandai kannan
செப் 10, 2025 11:43

தற்போதைய திமுக எம்.எல்.ஏ இனி கோ இருதயராஜுக்கு சீட் கிடைத்ததே அவர் கிறித்தவர் என்பதால்தான். எனவே ஜோசப் விஜயின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கும்.


sasidharan
செப் 10, 2025 09:51

டெபாசிட் கூட கிடைக்காது


சந்திரன்
செப் 10, 2025 08:41

இவன் டெபாசிட் கூட வாங்க விடக்கூடாது. இதன் மூலம் இன்னொரு கோமாளியின் அரசியலை முடிச்சிடலாம். பல ஆயிரம் கோடிகளை கூத்தாடி கூத்தாடி மக்களிடம் சம்பாதிச்சவன் ஒத்த ரூவா கூட இதுவரை மக்களுக்காக கிள்ளி தெளிக்கல வந்துட்டான் மதம் மாறி பெத்த தாய் தந்தைய கவனிக்காதவன் பெண்டாட்டி இருந்தும் நடிகை கூட கும்மாளம் போடுறவன்லாம் நாட்டை ஆளனும்ங்கிற கொழுப்பு


நிமலன்
செப் 10, 2025 07:32

கிழக்கில் மட்டுமல்ல, மேற்கே சோமரசம்பேட்டையில் விஜய், வடக்கே ஶ்ரீரங்கத்தில் விஜய், தெற்கே கேகேநகரில் விஜய், எங்கும் விஜய் விஜய் விஜய்..


BHARATH
செப் 10, 2025 12:39

போஸ்டர் மட்டும்தான் இருக்கும் அதுவும் கொஞ்ச நாளைக்கு . அவன் தி மு கா அடிமையா போயிடுவான்


subramanian
செப் 10, 2025 06:45

அமைச்சர் கே என் நேரு கோட்டையில் விஜய் நிற்க முடியாது . வேட்புமனு தாக்கல் செய்துவிட முடியுமா? வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும்.


முக்கிய வீடியோ