உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்குமாறு என்னை களம் இறக்கியது பா.ஜ., தான்: சொல்கிறார் செங்கோட்டையன்

அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்குமாறு என்னை களம் இறக்கியது பா.ஜ., தான்: சொல்கிறார் செங்கோட்டையன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''என்னை டில்லிக்கு அழைத்து, அ.தி.மு.க .,வை ஒருங்கிணைக்க சொன்னது பா.ஜ., தான்,'' என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்குமாறு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், 'கெடு' விதித்திருந்தார். மேலும், டில்லி சென்று பா.ஜ., மூத்த தலைவர்களையும் சந்தித்தார். பின்னர், சசிகலா, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோரை சந்தித்ததால், அ.தி.மு.க.,வில் இருந்து அவரை நீக்கி, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டார். நம்பிக்கையானவர் இந்நிலையில், கோபிச்செட்டிப்பாளையத்தில், நேற்று செங்கோட்டையன், அளித்த பேட்டி: ஜெயலலிதா இருந்தபோதும், மறைவுக்குப் பின்பும் மூன்று முறை பன்னீர்செல்வமே முதல்வராக்கப்பட்டார். தகுதி உள்ளவர் என்றால், பழனிசாமி ஏன் முதல்வர் ஆக்கப்படவில்லை? அந்தளவுக்கு நம்பிக்கையானவர் பழனிசாமி. அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும் என குரல் எழுப்பிய என்னை, கட்சியில் இருந்து நீக்கிஉள்ளார் பழனிசாமி. என்னையெல்லாம் கட்சியில் இருந்து நீக்கும் பழனிசாமியை ஜெயலலிதா நீக்கினார். கடந்த 2012ல் ஜெயலலிதா என்னையும் நீக்கினார். அ.தி.மு.க.,வில் அனைவரையும் அரவணைத்துச் சென்றவர் ஜெயலலிதா. இப்போது அந்த நிலை இல்லை. இது கட்சியை பலவீனப்படுத்தும். என்னை டில்லிக்கு அழைத்தது பா.ஜ., தான். அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்க சொன்னதும், பா.ஜ.,தான். நானும் அதைத்தான் சொன்னேன். அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கவும், ஆட்சியை பிடிக்கவும் உதவ வேண்டும் என, பா.ஜ., தலைமையிடம் வேண்டுகோள் விடுத்தேன். தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி வீட்டு பணியாளரின் பிரச்னைக்காக, தமிழகம் முழுதும் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தி, சி.பி.ஐ., விசாரணை கோரியது. ஆனால், ஜெயலலிதா வாழ்ந்த, கோடநாடு இல்லத்தில் நடந்த கொலையில், சி.பி.ஐ., விசாரணை கேட்கவில்லை. இதற்கான காரணத்தை, பழனிசாமியிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கொச்சைப்படுத்தியவர் என்னை அமைச்சராக்கியதாக பழனிசாமி கூறுகிறார். ஆனால், என்னைப் போன்றவர்கள் முன்மொழியவில்லை என்றால், அவர் முதல்வராகி இருக்க முடியாது. கொல்லைப்புறமாக முதல்வர் ஆனவர் பழனிசாமி. தன்னை முதல்வராக்கிய சசிகலாவையே கொச்சைப் படுத்தியவர். 'கோபி தொகுதியில், 45 ஆண்டுகள் சிற்றரசர் போல வாழ்ந்தார். தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை' என, என் மீது பழனிசாமி குற்றஞ்சாட்டியிருக்கிறார். 'ஆனால், 'எடப்பாடியில் இல்லாத அளவுக்கு, கோபியில் சாலைகள் சிறப்பாக அமைத்துள்ளீர்கள்' என, அவரே என்னை பாராட்டியுள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில், கட்சிக்காக உழைத்தவர்களை மறந்து விட்டு, வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள், பணக்காரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் பழனிசாமி. நாமக்கல் பிரசாரத்தில் பேசிய பழனிசாமி, 'கொடி பறக்குது. பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது' என்றார். ஆனால், த.வெ.க., பொதுக்குழுவில் விஜய் என்ன பேசினார் என்பதை, அனைவரும் அறிவோம். ஒற்றுமை உணர்வுடன் வலிமையாக இருந்தால், நம்மை தேடி மற்றவர் வருவர். ஒருவர் முன்னேற வேண்டுமானால், தன் காலில் நடந்து செல்ல வேண்டும். பிறர் முதுகில் ஏறி சவாரி செய்யக் கூடாது. அப்படி செய்தால், இந்த நிலைதான் ஏற்படும். பழனிசாமியின் மகன், மருமகன், மைத்துனர் ஆகியோர் தான் கட்சியை நடத்துகின்றனர். அவரது அக்கா மகன் தான் எல்லாம். கட்சிக்காக உழைத்தவர்கள், அவர்களிடம் மண்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முழுநிலவு தேய்ந்து அமாவாசையாகும் என்னை தி.மு.க.,வின், 'பி' டீம் என பழனிசாமி சொல்கிறார். இதை சொல்ல, அவருக்கு தகுதியில்லை. நான் எந்தக் கட்சி மீதும், எந்த நபர் மீதும் கடுமையான விமர்சனத்தை எப்போதும் செய்ததில்லை. சட்டசபையில், பட்ஜெட் கூட்டத் தொடரில், 40 நாட்கள், பழனிசாமிக்கு பின் இருக்கையில்தான் அமர்ந்திருந்தேன். ஒரு நாள் கூட பின்னால் திரும்பி, என்னிடம் பேசவில்லை. கருத்து தெரிவிப்பது ஜனநாயக உரிமை. அ.தி.மு.க., வலிமையாக இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். இப்போது, 14 பேரை நீக்கியிருக்கிறார். இப்படியே நீக்கிக் கொண்டிருந்தால், முழுநிலவு தேய்ந்து, அமாவாசை ஆகிவிடும். - செங்கோட்டையன் முன்னாள் அமைச்சர்

முன்னாள் எம்.பி., உட்பட 14 பேர் நீக்கம்

கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதால், முன்னாள் எம்.பி., சத்தியபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், நம்பியூர் வடக்கு ஒன்றியம் தம்பி சுப்பிரமணியன், கோபி குறிஞ்சிநாதன், செந்தில் என்கிற கோடீஸ்வரன், அருள் ராமச்சந்திரா, கந்தவேல்முருகன், முத்துசாமி, ரமேஷ், அந்தியூர் மோகன்குமார், ராயணன், கோட்டுபுள்ளாம்பாளையம் மவுதீஸ்வரன், சத்தியமங்கலம் செல்வம், தமிழ்ச்செல்வி, காமேஷ் ஆகியோர், அ.தி.மு.க., அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர். அ.தி.மு.க.,வினர் யாரும், இவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. - பழனிசாமி பொதுச்செயலர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

RADHAKRISHNAN
நவ 09, 2025 19:21

அது சரிங்க செங்கொட்டையன, அந்த அம்மா எப்படி இறந்தார்கள, ஓபிஎஸ் மூன்னுமுறை முதல்வர் ஆனார் ஏன் அவர் ஒரு டம்மி, சரி ஏன் தினகரன் திவாகரன், ஓபிஎஸ் எல்லாம் தனித்தனியாக கட்சி ஆரம்பித்தனர் ஜெயித்து. விடலாம் என்றுதானே, நீங்கள் எல்லாம் அயல் என்று மக்களுக்கு தெரியும், சரியான சகுனிகள் முடிந்தமட்டும் பார்த்துவிட்டு ஒன்றும் ஆகவில்லை என்றதும் இணைப்பு என்ற ஒன்றைக்கொண்டு பிரச்சணை செய்கிறீர்கள், அம்மாவின் சொத்துக்களெல்லாம் எப்படி எப்பொழுது சசி பெயருக்கு மாறியது, பேசாமல் வேறுகட்சியில் சேருங்கள் இல்லை என்றால் நீங்கள் தினகரன் திவாகரன் ஓபிஸ், சசியம்மா சேரந்து தனித்து நின்று ஜெயிக்கலாமே, அதிமுக என்பது ஒரு ஜாதிக்கட்சியல்ல அதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள், எப்படியோ ஒரு வியாபாரச்சந்தையில் தோல்விதான் உங்களுக்கு


Sun
நவ 08, 2025 20:15

போதும்பா சாமி! உங்கள நான் நம்பி வந்ததுக்கு ஒன்னு மட்டும்தான் மிச்சம். எடப்பாடி பழனிச்சாமியை இ.பி.எஸ் ன்னு சொல்ற மாதிரி ஒ .பன்னீர் செல்வத்தை ஓ.பி.எஸ் ன்னு சொல்ற மாதிரி இந்த செங்கோட்டையனையும் இ.ஏ.எஸ் னு சொல்ல வச்சீங்களே ! ரொம்ப பெருமையா இருக்கு! ரொம்ப பெருமையா இருக்கு!


Sampath
நவ 08, 2025 14:52

தவெக பஜாக‌ கூட்டணி சேர்ந்தால் அறுதி பெரும்பான்மை பெரும்


Madras Madra
நவ 08, 2025 11:12

பாஜக அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என்று இதை சொல்லி இருக்கும் செங்கோட்டையன் சொன்னால் EPS கேட்பாரோ என்று நினைத்து இருக்கும் ஆனால் எவ்வளவு சீனியாரா இருந்தாலும் அவமதிக்க தயங்காதவர் EPS தன்னை தவிர யாருக்கும் கட்சி நடத்த துப்பு இல்லை என்றே நினைக்கின்றார் இது எப்படி அதிமுக வுக்கு நல்லது ஆகும் தொடர்ந்து அதிமுக பலவீன படும் EPS தான் காரணம்


Anand
நவ 08, 2025 10:39

சரி சரி, திமுகவில் எப்போ ஐக்கியம் மனோஜ் பாண்டியனை போல் சட்டுபுட்டுனு பந்திக்கு முந்திக்கொள்ளலாம்


Natchimuthu Chithiraisamy
நவ 08, 2025 10:38

என்னைப் போன்றவர்கள் முன்மொழியவில்லை என்றால், அவர் முதல்வராகி இருக்க முடியாது. கொல்லைப்புறமாக முதல்வர் ஆனவர் பழனிசாமி. தன்னை முதல்வராக்கிய சசிகலாவையே கொச்சைப் படுத்தியவர். அந்த 4 ஆண்டுகால பதவியில் நானும் அமைச்சர் நானும் சசிகலாவை மதிக்கவில்லை. கொல்லைப்புறமாக முதல்வர் ஆவதற்கு நான் முன்மொழிந்தேன். இப்ப கொஞ்சம் காசுக்கு சசிகலாவுக்கு வேலை பார்த்து பிஜேபி யை வசைபாட வேண்டும் என்று சொன்னார்கள் செய்கிறேன்


Sun
நவ 08, 2025 09:12

அ.தி.மு.க வில் இருந்து கொண்டே இன்னொரு கட்சி சொல்வதை இந்தக் கட்சியில் செயல் படுத்த நினைப்பவர் எப்படி அ.தி.மு.க விசுவாசியாக இருக்க முடியும்?


பேசும் தமிழன்
நவ 08, 2025 16:54

கெடுதல் தான் செய்ய கூடாது ..... நல்லதை யார் சொன்னாலும் .... அதுவும் கட்சிக்கு நல்லதை சொன்னதை எப்படி தவறு என்று கூற முடியும் ??


Appan
நவ 08, 2025 09:11

அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்குமாறு என்னை களம் இறக்கியது பா.ஜ., தான்: சொல்கிறார் செங்கோட்டையன்... கட்சியை ஓருங்கிணைப்பது என்பது தலைமையின் வேலை. யாரோ சொன்னாங்கோ என்று செய்தால் இது தான் கிடக்கும். அதிமுக தொண்டன் அதிமுகாவுக்குத்தான் விசுவாசியாக இருக்கணும். பாஜகவுக்கு விசுவாசிகய இருந்தால் பாஜக வுக்கு சொல்லணும். ஆசை யாரை விட்டது ...?.


kjpkh
நவ 08, 2025 09:03

எடப்பாடிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்தியதில் இருந்தே நீங்கள் உள்குத்து வேலையை யாரும் வைத்து விட்டீர்கள். இப்போ எதற்கு சப்ப கட்டு.


duruvasar
நவ 08, 2025 09:03

சொந்த ஒருத்தியே இல்லாததால்தான் ஜெயலலிதா இவரை அமைச்சரவையில் சேர்க்கவில்லை .