உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 14 வயது முதல் பயங்கரம் தான் 59 வயதிலும் பழக்கத்தை விட்டபாடில்லை

14 வயது முதல் பயங்கரம் தான் 59 வயதிலும் பழக்கத்தை விட்டபாடில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆந்திராவில் பதுங்கி இருந்த பயங்கரவாதி அபுபக்கர் சித்திக், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு கோடிகளை குவித்துள்ள நிலையில், அவரின் வங்கி கணக்கு மற்றும் சொத்து விபரங்களை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக், 59; கோவை தொடர் குண்டுவெடிப்பு, ஹிந்து தலைவர்கள் கொலை என, பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்; 30 ஆண்டுகளுக்கு பின், ஆந்திர மாநிலத்தில், தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஜிகாதியாக அறிவிப்பு

இவர், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு, கோடிக்கணக்கில் சம்பாதித்து இருப்பது தெரியவந்துள்ளது. இவரின் வங்கி கணக்கு, சொத்து விபரம் உள்ளிட்டவற்றை, தமிழகம் மற்றும் ஆந்திர மாநில போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து, தமிழக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

கோவை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியான பாஷாவால் மூளைச்சலவை செய்யப்பட்ட அபுபக்கர் சித்திக், தன், 14வது வயதில் பயங்கரவாத செயலில் ஈடுபட துவங்கி உள்ளார். தன்னை புனித போர்புரியும் ஜிகாதியாக அறிவித்து, தொடர்ந்து பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்; புத்தக வெடிகுண்டு தயாரிப்பதில் கெட்டிக்காரர். கடந்த 1995ல், தன் சொந்த ஊரில், ஹிந்து முன்னணி பிரமுகர் தங்க முத்துகிருஷ்ணனை கொலை செய்ய, பார்சலில் புத்தக வெடிகுண்டுகளை அனுப்பினார். அதை பிரித்து பார்த்த போது, வெடிகுண்டுகள் வெடித்து தங்க முத்துகிருஷ்ணனின் மனைவி உயிரிழந்தார்.

புத்தக வெடிகுண்டு

அதேபோல, மயிலாடுதுறையை சேர்ந்த ஹிந்து அமைப்பு நிர்வாகி ஜெகவீரபாண்டியன் என்பவரை கொலை செய்ய, பார்சலில் புத்தக வெடிகுண்டுகளை அனுப்பினார். ஆனால், தபால் நிலையத்திலேயே கண்டறியப்பட்டு, செயலிழப்பு செய்யப்பட்டது. இதனால், ஜெகவீரபாண்டியன் உயிர் பிழைத்தார்.கோவை மற்றும் மதுரையிலும் பெட்ரோல் குண்டுகளை வீசி, சிறைத்துறை அதிகாரிகள் இருவரை கொலை செய்துள்ளார். 1998ம் ஆண்டு கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடத்திய பின், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு தப்பிச் சென்றுள்ளார். அங்குள்ள பயங்கரவாதிகள் தான் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.அடிக்கடி, 'கெட்அப்' மாற்றிக்கொள்ளும் அபுபக்கர் சித்திக், தன் பெயரை அமானுல்லா என மாற்றி, போலி ஆவணங்கள் வாயிலாக ஆதார், ரேஷன் கார்டு, காஸ் இணைப்பு பெற்றுள்ளார். போலி பாஸ்போர்ட்டில் சவுதி அரேபியாவும் சென்று வந்துள்ளார். ஒருமுறை திருப்பூருக்கும், கைதாவதற்கு சில மாதங்களுக்கு முன், கோவைக்கும் வந்து சென்றது தெரியவந்துள்ளது. துவக்கத்தில் ஜவுளி வியாபாரி போல வலம் வந்த அபுபக்கர் சித்திக், மும்பையில் இருந்து இடம்பெயர்ந்து ஆந்திரா வந்துள்ளார். மனைவி சாய்ரா பானுவுடன் வசித்தவர், ரியல் எஸ்டேட் தொழிலில் பல கோடிகளை குவித்துஉள்ளார்.

மூளைச்சலவை

இதனால், அவரின் வங்கி கணக்கு, சொத்து விபரங்களை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. அபுபக்கர் சித்திக், முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் வேலையிலும் ஈடுபட்டு வந்துஉள்ளார். ஆனால், தான் எதிர்பார்த்த அளவுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என, வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Natarajan Ramanathan
ஜூலை 15, 2025 22:57

முதலில் இவனது சொத்து அனைத்தையும் முழுமையாக பறிமுதல் செய்து இவனது வீட்டையும் இடிக்கவேண்டும் அதன்பிறகு மூன்று மாதத்தில் விசாரணை நடத்தி கடுமையான தண்டனை அளிக்கவேண்டும்.


Natchimuthu Chithiraisamy
ஜூலை 15, 2025 20:42

கொலை செய்துகொண்டு ஜவுளி வியாபாரம் செய்து கொண்டு மனைவியுடன் வாழ்ந்து கொண்டு ரியல் எஸ்டேட் செய்து கொண்டு பணம் சம்பாதித்துக்கொண்டு 30 ஆண்டு தலைமறைவாக வாழ்ந்து கொண்டு ....................... விவசாயிகள் தான் விளைவித்த காய்கறிகளை மறைவாக வாழப்பவர்களிடம் கால் வாசி விலைக்கு விற்று உயிர் வாழ வேண்டி இருக்கிறது மறைவான ஆள் கொள்ளை லாபம் பார்ப்பது அனைத்து விவசாயிக்கும் தெரியும் என்ன செய்யமுடியும்


Ramesh Sargam
ஜூலை 15, 2025 19:50

பயங்கரவாதி என்று தெரிந்தபின்பும் ஏன் உயிருடன் வைத்திருக்கவேண்டும். ஓடவிட்டு என்கவுண்டர் செய்யவேண்டியதுதானே... ஒரு சிறு தவறு செய்த காவலனை திருப்புவனம் காவல்நிலைத்த்தில் விசாரணை என்கிற பெயரில் கொடுமையாக தாக்கி கொன்றீர்களே, இந்த பயங்கரவாதியை அதேபோல செய்ய தைரியமிருக்கா?


R K Raman
ஜூலை 18, 2025 05:54

அந்த காவலன் தவறு செய்தானா என்று இன்னும் நிரூபிக்க வில்லை


என்றும் இந்தியன்
ஜூலை 15, 2025 17:22

30 ஆண்டுகளுக்கு பின், ஆந்திர மாநிலத்தில், தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.??????கொல்லப்பட்டார் என்று இருக்கவேண்டும் டாஸ்மாக்நாடு திராவிட ஏவல் துறையே


Ganesun Iyer
ஜூலை 15, 2025 16:43

வெள்ளை தொப்பி போட்ட கான்கிரஸ்காரர் மாதிரியே இருக்கிறார்.


Nandakumar Naidu.
ஜூலை 15, 2025 16:23

இவனை ஏன் இன்னும் உயிருடன் வைக்க வேண்டும். மரண தண்டனை கொடுத்து கழுவில் ஏற்ற வேண்டும் உடனடியாக.


venugopal s
ஜூலை 15, 2025 11:42

ஏப்பசாப்பையான குற்றவாளிகளை மட்டும் பிடித்து விட்டு மார் தட்டிக் கொள்ளும் மத்திய அரசின் என் ஐ ஏ கடந்த பதினோரு ஆண்டுகளாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள் போல் இருக்கிறது!


N Sasikumar Yadhav
ஜூலை 15, 2025 13:50

தின்கிற பிரியாணிக்கு விசுவாசமாக இருக்கிற உங்களுக்கு. தமிழக காவால்தொறைக்கு தகவல் சொன்னது மத்திய உளவுத்துறை. தமிழக காவால்தொறையின் வேலை பாஜக விசுவாசி ஏதாவது சமூக ஊடகத்தில் பதிவு போட்டால் அவனை துரத்தி துரத்தி கைது செய்வது மட்டுமே


krishna
ஜூலை 15, 2025 20:50

UNNAI PONDRA DESA VIRODHA MAFIA DRAVIDA MODEL KUMBAL IDHAI PONDRA KODURA THEEVIRAVAADHIKKU MUTTU KODUTHU KAAPAATRINAAL 11 VARUDAM AGUM MIRUGAME.


Muralidharan S
ஜூலை 15, 2025 11:36

1947 இல் சில தேசத்தலைவர்கள் செய்த வரலாற்று பிழை, நமது நாட்டிற்கு தீராத என்றும் தீர்க்கமுடியாத தலைவலியாக / பிரச்சினையாக இருக்கிறது..


Bahurudeen Ali Ahamed
ஜூலை 15, 2025 11:15

குற்றம் நிரூபிக்கப்பட்டால் காலம் கடத்தாமல் கடுமையான தண்டனை தரப்படவேண்டும், கொலைகாரனாக நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை கொடுக்கப்படவேண்டும் மதத்தை காரணம் காட்டி கொலையை ஆதரிக்கமுடியாது திட்டமிட்ட கொலைக்கு மரணதண்டனைதான் சரியானது


ஆரூர் ரங்
ஜூலை 15, 2025 10:51

அடுத்து சீமான் இந்த ஆளை விடுவிக்க போராட்டம் நடத்தி அயலக அணியில் பதவி குடுப்பாரு.


JANA VEL
ஜூலை 15, 2025 16:18

இவனை விடுவிக்க சொல்லி தமிழ்நாட்டு முதலமைச்சர் அறிக்கை விட்டு, டெல்லிக்கு கடிதம் எழுதி, விடுவிக்கும் நாளில் தோளில் கைபோட்டு வரவேற்று குல்லா அணிந்து நமஸ் செய்து கஞ்சி குடிப்பார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை