உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜாக்டோ - ஜியோ போராட்டம்: சமரசம் செய்ய அரசு முயற்சி

ஜாக்டோ - ஜியோ போராட்டம்: சமரசம் செய்ய அரசு முயற்சி

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினர் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அவர்களை சமரசம் செய்வதற்கான முயற்சிகள் அரசு தரப்பில் துவங்கியுள்ளன. 'தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, ஜாக்டோ - ஜியோ வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசு, புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. 'ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ஆய்வு செய்த பின், அதை தமிழகத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என, சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.இதற்கு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சரண் விடுப்பு நிலுவை தொகையும் வழங்கப்படவில்லை. உயர் கல்விக்கான ஊக்க ஊதியமும் நிறுத்தப்பட்டு உள்ளதால் அதிருப்தி அடைந்துள்ள ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்த முடிவெடுத்துள்ளனர். இதுதொடர்பாக, அதன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பொன்னிவளவன், பொன் செல்வராஜ், மயில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிப்ரவரி, 4ம் தேதி திருச்சியில் உயர்மட்ட குழு கூட்டம், 6ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், அடுத்த மாதம் 14ம் தேதி மாலை நேர போராட்டம், 25ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜாக்டோ - ஜியோ போராட்ட அறிவிப்பால், அரசுக்கு நெருக்கடி அதிகரித்து உள்ளது. எனவே, சுமூக பேச்சு வாயிலாக, போராட்ட அறிவிப்பை திரும்ப பெற வைக்க, அரசு தரப்பில் ரகசிய முயற்சிகள் துவங்கியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

முருகன்
ஜன 29, 2025 22:24

வேலை நிரந்தரமாக இருக்கிறது என்ற தைரியத்தில் நடக்கும் கூத்து இது சம்பளம் வருவதே நாட்டில் பலருக்கு பிரச்சனையாக இருக்கிறது


kulandai kannan
ஜன 29, 2025 19:36

வேலையில் சேரும்போதே புதிய ஓய்வூதிய திட்டம் என்று தெரிந்து தானே சேர்ந்தார்கள்.


ராமகிருஷ்ணன்
ஜன 29, 2025 14:19

திமுகவை பொருத்தவரை ஜாக்டோ ஜியோ எல்லாம் கறிவேப்பிலை மாதிரி. தேர்தல் நேரத்தில் அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என்று தண்ணீ காண்பித்து விட்டு ஜெயித்த பிறகு தூக்கி எறிந்து விட்டு சுருட்ட போய்விடுவார்கள். திமுகவின் அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் சுருட்டி முழுங்கி ஏப்பம் விடுகிறார்கள் என்று A to Z உங்களுக்கும் தெரியும். ஏன்னா கூட சேர்ந்து சுருட்டுவது நீங்கள் தான். அதனால் திமுகவினர் செய்துள்ள ஊழல்களை மத்திய அரசுக்கு ஆதாரங்களுடன் கொடுத்து விடுவோம் என்று மிரட்டி பணிய வைக்க வேண்டும். நீங்கள் அப்புரூவர் ஆகி செய்ய முடியுமா. எல்லா இடங்களிலும் இது நடந்தால் அரசு பணிந்து தான் ஆக வேண்டும். கூட இருந்து கொள்ளை அடித்ததால் நீங்கள் அதை செய்ய மாட்டேன் என்கிறீர்களா.


Prabakaran J
ஜன 29, 2025 12:19

JACTO GEO - Educated stupids managed by DMK Model.


Narayanan
ஜன 29, 2025 06:12

பல வருட கோரிக்கை, கழக ஆட்சி வந்தவுடன் அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை முழுவதும் நிறைவேற்றப்படும் என்று கூறினார். அரசு ஊழியர்கள் இன்று ஆனாதையாக விடப்பட்டுள்ளனர். புதிய பென்சன் தட்டதில் உள்ள பல பேர் ஒய்வு பெற்று உள்ளனர், ஆணால் அவர்களுக்கு ஒரு ரூபாய் கூட தரப்படவில்லை, பலர் ஒய்வு பெற்று வாழ்வாதாரத்திற்கு வேறு வேலைக்கு செல்கின்றனர்.


Subburamu Krishnasamy
ஜன 29, 2025 05:59

actor geo leaders will enact drama to fool the government staff


Kali
ஜன 29, 2025 11:29

ALREADY WELL PAID. Unemployed and 5 crore common man suffering. No justification for more pay to Govt staff.


சமீபத்திய செய்தி