உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் சேருங்கள்: விஜய்க்கு ஆந்திர துணை முதல்வர் அட்வைஸ்

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் சேருங்கள்: விஜய்க்கு ஆந்திர துணை முதல்வர் அட்வைஸ்

'தி.மு.க., ஆட்சியை வீழ்த்த, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் சேருங்கள்' என, த.வெ.க., தலைவர் விஜய்க்கு, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவுரை வழங்கியதாக, தகவல் வெளியாகி உள்ளது. த.வெ.க., கட்சியை துவக்கி, வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை இலக்காக வைத்து, விஜய் பணியாற்றி வருகிறார். கட்சி துவக்கிய பின் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், த.வெ.க., போட்டியிடவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=55y2bhyp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தன் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பும் கட்சிகளுக்கு, ஆட்சியில் பங்கு உண்டு என, மாநாடுகளில் விஜய் அறிவித்தார். ஆனால், த.வெ.க.,வில் இதுவரைக்கும் எந்த ஒரு கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை. திரைமறைவில் அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன், த.வெ.க., பேச்சு நடத்தி வருகிறது. முதல் தேர்தல் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரெட்டி சமூக பிரமுகர் ஒருவர், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனி சாமியின் மகன் மிதுனுடன் கூட்டணி தொடர்பாக பேசி வருகிறார். இதற்கிடையில், பா.ஜ., தரப்பிலும் விஜயிடம் பேசப்பட்டு வருகிறது. ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் வாயிலாக, அ.தி.மு.க., - பா.ஜ., - த.வெ.க., கூட்டணி முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. விஜயிடம் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசிய பவன் கல்யாண், தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அப்போது, அவர்கள் பேசியது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: இருவரும் பரஸ்பரம் தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக, விஜய் எடுக்கிற முடிவு, தி.மு.க., ஆட்சியை அகற்றுவதாக இருக்க வேண்டும். தமிழகத்தில் ஏழு முறை அ.தி.மு.க., ஆட்சி அமைத்துள்ளது. பா.ஜ.,வும் மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. எனவே, இந்த கட்சிகளுடன் த.வெ.க., இணையும் போது அமோக வெற்றி கிடைக்கும். இது, நீங்கள் சந்திக்க போகும் முதல் தேர்தல். எனவே, துணை முதல்வர் பதவியை, பெற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு இன்னும் வயது இருக்கிறது. கட்சி, ஆட்சியை நடத்த, அனுபவம் பெறுவதற்கு, துணை முதல்வர் பதவி முக்கிய பங்கு வகிக்கும்.

ஆலோசனைக்கு நன்றி

என் அண்ணன் சிரஞ்சீவி, கடந்த 2008ல் அரசியலில் நுழைந்தார். உங்களை போல அவரும் சூப்பர் ஸ்டார் தான். அதே ஆண்டில் திருப்பதியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், அவர் 'பிரஜா ராஜ்யம்' என்ற பெயரில் கட்சியை துவக்கினார். அரசியல் ஆய்வாளர்கள், தேர்தலுக்கு எட்டு மாதங்களுக்கு முன்பே கட்சியை சிரஞ்சீவி அறிவித்ததால், கட்சி துவங்கி, ஒன்பது மாதங்களில் முதல்வராவார் என கணித்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரஜா ராஜ்யம் கட்சி தோல்வி அடைந்தது. கடந்த 2009 பொதுத்தேர்தலில், பிரஜா ராஜ்யம் கட்சி வெறும் 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாலகொல்லு, திருப்பதி என, இரண்டு தொகுதிகளில் சிரஞ்சீவி போட்டியிட்டார். ஆனால், திருப்பதியில் மட்டுமே வெற்றி பெற்றார். பின், கட்சியை காங்கிரசில் இணைத்தார். அங்கு ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்ட சிரஞ்சீவி, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தார். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பின், அரசியலில் இருந்து சிரஞ்சீவி விலகி விட்டார். நான் 'ஜன சேனா' கட்சியின் தலைவரானதும், தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் துணை முதல்வராக முடிந்தது. எனவே, நீங்களும் என்னை பின்பற்றி முடிவெடுக்க வேண்டும் என, பவன் கல்யாண் வேண்டுகோள் விடுத்தார். விஜயும், 'உங்கள் ஆலோசனைக்கு ரொம்ப நன்றி. நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நல்ல முடிவு எடுக்கும் போது உங்களிடம் தெரிவிப்பேன்' என்று கூறியிருக்கிறார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

ராஜா
அக் 20, 2025 20:58

ஆக எந்த கட்சியில் சேர்ந்தாலும் உங்கள் கட்சியை விலாசம் இல்லாமல் செஞ்சு புடுவாங்க


Venugopal S
அக் 20, 2025 20:52

நீண்ட கால அரசியலுக்கு கட்சியை எடுத்துச் செல்லும் எண்ணம் இல்லை என்றால் விஜய் பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம்!


V pravin
அக் 20, 2025 19:04

அதிமுகவும் விஜயின் கட்சியும் கூட்டணி அமைந்தால் தமிழகத்தில் வெற்றி நிச்சயம் ஒருவேளை விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காவிட்டால் திமுக வெற்றி அடையும் திமுக வெற்றி பெறும் பட்சத்தில் விஜய் கட்சியை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள் எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விஜயையும் அதிமுக கூட்டணி அமைப்பது தமிழகத்திற்கும் விஜயின் எதிர்காலத்திற்கும் தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் மிகவும் நல்லது


pakalavan
அக் 20, 2025 10:52

தனியாக நின்னு களம்கானுவார்


vivek
அக் 20, 2025 12:44

திமுக தனியா நிக்குமா...டெபாசிட் கூட வராதே


kjpkh
அக் 20, 2025 10:32

பயத்தின் உச்சத்திற்கே திமுகவினரும் திமுக முட்டுகளும் வந்துவிட்டனர். இனி கதறல் அதிகமாக இருக்கும்.


முருகன்
அக் 20, 2025 13:10

விஜய் உடன் கூட்டணிக்காக நீங்கள் கதறுவதை விடவா


Indian
அக் 20, 2025 10:14

பா ஜா வுடன் கூட்டணி சேர்ந்தால், தா வே கா காணாமல் போய்விடும் ...


Haja Kuthubdeen
அக் 20, 2025 10:43

அவர் கூட்டணி அமைக்கப்போவது அஇஅதிமுகவிடம்.அதில் பிஜெபியும் இடம் பிடித்துள்ளது.


Indian
அக் 20, 2025 12:40

அப்போ தா வே கா, கு டெபாசிட் கிடைக்காது ..


vivek
அக் 20, 2025 12:45

திமுக சேர்ந்தால் தமிழ்நாடு காணாமல் போய்விடும்


kjpkh
அக் 20, 2025 13:43

அதிமுகவோ பிஜேபியோ விஜய் கூட்டணி பற்றி ஒன்றும் பேசவில்லை. திமுக முட்டுகள் தான் கதறுகின்றன. எங்கே கூட்டணி அமைந்து விடுமோ என்ற பயம். ஆக மொத்தத்தில் இந்த தேர்தல் திமுகவுக்கு ஆனது அல்ல.


முருகன்
அக் 20, 2025 17:57

அறிவாளி அறிவாளி இனி மக்கள் காதில் பூ சுற்ற முடியாது


kjpkh
அக் 20, 2025 08:54

பவன் கல்யாண் கருத்துக்கள் மிகவும் முக்கியம்.. அதிமுக பாஜக கூட்டணியில் சேர்ந்தால் தான் தமிழக மக்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 20, 2025 09:22

குடுகுடுப்பைக்காரன் சொல்லிட்டாரையா


Indian
அக் 20, 2025 10:11

கிளி ஜோசியக் காரர் சொல்லிடறப்ப


Vasan
அக் 20, 2025 08:48

மெய்யாலுமே நல்ல அறிவுரை வழங்கியுள்ளார் பவன் கல்யாண். விஜய் வயதில் மிக இளையவர். பிஜேபி+அதிமுக கூட்டணியில் இனைந்து, சட்ட சபையில் ஒரு சில இடம் பிடிக்க முடிவு எடுப்பதே நல்ல தொடக்கமாக இருக்கும். வறட்டு கெளரவம் ஒன்றித்திற்கும் உதவாது.


அப்பாவி
அக் 20, 2025 08:20

இண்ணும் பிரச்சனையில்லை. விஜய்தான் முதல்வர் வேட்பாளர். ஓக்கேவா?


Haja Kuthubdeen
அக் 20, 2025 10:49

திமுக கூட்டணியில் செல்வ பெருந்தகைக்கு முதல்வர் பதவி ஒதுக்கினால் விஜய்க்கு அஇஅதிமுக முதல்வர் பதவி விட்டு கொடுக்கும்.டீல் ஓகேயா


kjpkh
அக் 20, 2025 13:39

ஆந்திர துணை முதல்வர் சொன்ன கருத்தை நன்றாக படித்துப் பார்க்கவும். விஜயை துணை முதல்வராகத்தான் இருக்கச் சொல்லி இருக்கிறார்.


subramanian s
அக் 20, 2025 08:04

சனாதன சக்திகளை முன்னிருத்தி ஏமாற்றி பிழைப்பு நடத்தும் திராவிட கும்பலுக்கு 2026 தேர்தலில் விரட்டி அடிப்போம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை