உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காமராஜர் சர்ச்சை முடிந்து போன விவகாரம்: செல்வப்பெருந்தகை

காமராஜர் சர்ச்சை முடிந்து போன விவகாரம்: செல்வப்பெருந்தகை

சென்னை: முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பின், காமராஜர் சர்ச்சை விவகாரம் முடிந்து விட்டதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். ஆனால், “முற்றுப்புள்ளி வைப்பதற்கு அது ஒன்றும் வர்த்தகம் அல்ல; உணர்வுபூர்வமானது,” என, த.மா.கா., பொதுச்செயலர் யுவராஜா பதிலடி கொடுத்துள்ளார்.காமராஜரை பற்றி தவறாக பேசிய தி.மு.க., - எம்.பி., சிவா மன்னிப்பு கேட்க வேண்டும் என, தமிழகம் முழுதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சிவாவை கைது செய்யக்கோரி, முன்னாள் எம்.எல்.ஏ., அருள் அன்பரசு தலைமையில் காங்கிரசார், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேற்று மறியல் போராட்டம் நடத்தினர்.இதுகுறித்து, அருள் அன்பரசு கூறுகையில், ''காங்கிரஸ் கட்சியின் தேசிய அடையாளம் காமராஜர். அவர் மீது சேற்றை வீசிய சிவா மீது, தி.மு.க., நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வரிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளோம்.''நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. தொண்டர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தான் போராட்டமே தவிர, அரசுக்கு எதிராக அல்ல,'' என்றார்.இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில் நேற்று, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தி.மு.க., - எம்.பி., பாலு ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.

பின், செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி:

காமராஜர் சர்ச்சை விவகாரம் முடிந்து போனது. 17ம் தேதி காலையில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்பட வேண்டாம். காங்கிரஸ் கட்சி மீது, அண்ணாமலைக்கு எவ்வளவு கவலை? டில்லியில், காமராஜரை கொலை செய்ய முயன்ற ஆர்.எஸ்.எஸ்., இப்போது வேடம் போடுகிறது.தற்போது, ஓட்டுக்காக காமராஜருக்கு பிறந்த நாள் விழா எடுப்பது, நினைவு நாளை அனுசரிப்பது என, வேடம் போடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.செல்வப்பெருந்தகைக்கு பதிலடி தரும் வகையில், த.மா.கா., பொதுச்செயலர் யுவராஜா அளித்த பேட்டி:காமராஜரை தவறாக பேசிய விவகாரத்தில், ஒரே இரவில் முற்றுப்புள்ளி வைக்க அது வர்த்தகம் அல்ல. செல்வப்பெருந்தகை தலைவராக அமர்ந்திருக்கும் இடம் காமராஜர் சொத்து.அவர் வாங்கிய நிலத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு காங்கிரசார் திட்டமிட்டுகின்றனர். ஆனால், காமராஜரை இழிவாக பேசியவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த, காங்கிரசார் முன்வராதது ஏன்?தி.மு.க., தரும் 15, 20 சீட்டுகளுக்காக, காங்கிரஸ் கட்சியையும், காமராஜரின் புகழையும் அடகு வைக்க துணிந்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

சிவா உருவபொம்மை எரிப்பு

 காமராஜர் குறித்து அவதுாறாக பேசிய சிவாவை கண்டித்து, சேலம் மேற்கு மாவட்ட த.மா.கா., சார்பில், ஓமலுாரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சிவாவின் உருவபொம்மையை எரித்து, கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் புறநகர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஐ.டி., அணி மாநில ஒருங்கிணைப்பாளர் ரகுநந்தகுமார் உட்பட 30 பேர் பங்கேற்றனர் சிவா மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தமிழக நாடார் சங்கத் தலைவர் முத்துரமேஷ் மனு அளித்தார். அவர் கூறுகையில், “எளிமையின் சிகரமாக விளங்கிய காமராஜர் குறித்து பொய் தகவல்களை சிவா கூறியது, ஒட்டுமொத்த தமிழக மக்கள் மனதிலும் மிகப்பெரிய கொந்தளிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. கட்சி பதவி மட்டுமின்றி, எம்.பி., பதவியிலிருந்தும் சிவா நீக்கப்பட வேண்டும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Minimole P C
ஜூலை 20, 2025 09:24

shameless Perunthagai


எவர்கிங
ஜூலை 20, 2025 06:48

நீ பிள்ளை பெத்த விவகாரமும் முடிஞ்சு போன கதையாடா


ManiK
ஜூலை 19, 2025 21:12

மிஸ்டர் பெருந்தொகை கர்மவீரர் வகித்த தமிழக காங்கிரஸ தலைவராக இருக்க சிறிதும் தகுதியில்லாதவர். உண்மையான தொண்டர் யாரும் இந்த ஆள் சொல்லுவதை நம்பவே மாட்டார்கள்.


Shiva
ஜூலை 19, 2025 20:31

Siva who have spoken bad about Kamarajar Aiya has not apologised.


rama adhavan
ஜூலை 19, 2025 20:00

இவருக்கு இல்லாத கடுப்பும் இரத்தக் கொதிப்பும் வாசகர்களுக்கு எதற்கு. துப்பினாலும் துடைத்துக் கொள்ளும் மானஸ்தன் இவர். கட்சி மாறி இணைந்தவர்.


hari
ஜூலை 19, 2025 19:29

how come it is settled. who spoken has not apologised. rather the public ready to accept. who is this person. kamaraj is beyond Congress. he is people leader


ஈசன்
ஜூலை 19, 2025 19:26

இவர்களுக்கு வேண்டுமென்றால் அண்ணாமலையை ஆடு என்று பழிப்பார்கள். வேண்டாமென்றால் ஆட்டை மாற்றி ஓநாய் என்பார்கள். ஆடு பெருந்தலைவருக்கு போய்விடும். விடுங்கள் இந்த விவகாரத்தை மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். அதன் பின்பு பெருந்தகை பெருந்தலைவர் பற்றிய விவகாரத்திற்கு முற்று புள்ளி வைத்தால் என்ன வைக்கவில்லை என்றால் என்ன. பெருந்தலைவரை தோற்கடித்த மக்களின் சந்ததிகள் மூலம் திமுகவை தோற்கடிப்பார்கள்.


ஆரூர் ரங்
ஜூலை 19, 2025 18:39

PETTY TALKS.


kamal 00
ஜூலை 19, 2025 18:04

கொடுமை.... பேசாம அவரை தாய் கட்சிக்கே தள்ளிரலாம்


KRISHNAVEL
ஜூலை 19, 2025 16:26

இவர்களை பொறுத்தமட்டில் காமராஜரே முடிந்துபோன தலைவர் , தற்பொழுதைய இவர்கள் தலைவர் ஸ்டாலின் தான் , பிறகு காமராஜர் சர்ச்சை முடிந்து போகாமலா இருக்கும் இவர்களின் அரசியல் தரம் இவ்வளவுதான்


சமீபத்திய செய்தி