உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கர்நாடகா பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கு ரூ.50,000 திருமண நிதி: ஹலால் பட்ஜெட் என பா.ஜ., விமர்சனம்

கர்நாடகா பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கு ரூ.50,000 திருமண நிதி: ஹலால் பட்ஜெட் என பா.ஜ., விமர்சனம்

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா, 4.09 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மாநில அரசின் பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இதில் சிறுபான்மையினரை, 'தாஜா' செய்வதற்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி உள்ளார்.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. நிதி துறையை நிர்வகிக்கும் சித்தராமையா நேற்று சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.காங்கிரஸ் அரசின் ஐந்து இலவச திட்டங்களுக்கு இந்தாண்டு 51,034 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை போலவே இந்தாண்டும் மதுபான விலை மீண்டும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.காங்கிரசின் ஓட்டு வங்கியான சிறுபான்மையினரை கவரும் வகையில், சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளை மேம்படுத்த, 1,000 கோடி ரூபாய்க்கு திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை சமூகத்தினர் இடையே எளிய திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஜோடிக்கும் திருமண செலவாக தலா 50,000 ரூபாய் வழங்கப்படும்.சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் உயர்கல்வியை ஆதரிக்கும் வகையில், வக்பு வாரியத்திற்கு சொந்தமான காலியிடங்களில் இந்த நிதி ஆண்டில் 16 பெண்கள் கல்லுாரிகள் துவங்கப்படும். ஜெயின், புத்த, சீக்கிய சமூகங்களின் வளர்ச்சிக்கு 100 கோடி ரூபாய்; கிறிஸ்துவ சமூக வளர்ச்சிக்கு 250 கோடி ரூபாய், ஜெயின் கோவில் அர்ச்சகர், சீக்கிய தலைமை கிராண்டிஸ், மசூதியின் இமாம்களுக்கு மாதம் 6,000 ரூபாய் கவுரவ தொகை வழங்கப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹலால் பட்ஜெட்: இந்த பட்ஜெட் சிறுபான்மையினரை தாஜா செய்யும் வகையில் உள்ளது. அந்த வகையில் இது ஹலால் பட்ஜெட் என்று கர்நாடகா பா.ஜ., விமர்சனம் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தேவராஜன்
மார் 08, 2025 19:30

காங்கிரஸ் தனக்கு தானே சவக்குழியைத் தோண்டிக் கொள்கிறது.


Prabu
மார் 08, 2025 14:23

, 70 வருஷம் கழிச்சி இப்போதான் ஹிந்துக்கள் ஓரளவு மேன்மை அடைந்து வருகிறார்கள் பாஜக மோடிஜி மூலம், இப்போ நீங்க முஸ்லிம்களுக்கு கல்யாணம் செய்வதற்கு 50 ஆயிரம் குடுப்பது எந்த விதத்தில் நியாயம்


ஆரூர் ரங்
மார் 08, 2025 14:09

இமாம்களுக்கு மாதம் 6000 ஹிந்துக்களின் வரிப்பணத்தில் ? ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தை இவர்களில் எத்தனை பேர் கண்டித்தார்கள்?.


naranam
மார் 08, 2025 13:26

களவாணி கான்கிரஸ்


V வைகுண்டேஸ்வரன்,Chennai
மார் 08, 2025 12:53

சிறுபான்மையினரா ? அப்டினா...? யாரு? எவ்ளோ சதவீதம்? சும்மா கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு ஒடச்ச மாதிரியா. ஓட்டுக்கு எங்கள் வரிப்பணத்தை வீணடித்து சமூகத்த சீரழிக்கும்


ஆசாமி
மார் 08, 2025 12:53

எவன் காசில்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை