உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கரூர் சம்பவம்; செந்தில் பாலாஜிக்கு சம்மன்?

கரூர் சம்பவம்; செந்தில் பாலாஜிக்கு சம்மன்?

பல வழக்குகளில் சிக்கி சிறை சென்று வந்தவர், முன்னாள் தி.மு.க., அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் மீண்டும் ஒரு வழக்கில் சிக்குவாரா? இந்த கேள்வி டில்லி அரசியல் வட்டாரங்களில் அலசப்படுகிறது. அது என்ன புது வழக்கு?கரூர் சம்பவம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணித்து வருகிறது. விரைவில் இந்த குழு கரூருக்கு வந்து, சம்பவ இடத்தைப் பார்வையிட உள்ளது. அத்துடன், இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட பலரையும் சந்திக்க உள்ளதாம்.'நீதிபதி அஜய் ரஸ்தோகியை த.வெ.க., நிறுவனர் நடிகர் விஜய் சந்தித்து, தன் தரப்பு வாதங்களை முன் வைப்பதுடன், வேறொரு விஷயத்தையும் அவர் சொல்வார்' என்கின்றனர்.'கரூர் சம்பவம் ஒரு சதி; இதில் தி.மு.க., சம்பந்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, செந்தில் பாலாஜி தான் காரணம். எங்களுக்கு, அவப்பெயர் ஏற்படுத்த செந்தில் பாலாஜி செய்த கீழ்த்தரமான செயல்' என, நீதிபதி குழுவிடம் விஜய் சொல்ல வாய்ப்பிருக்கிறதாம்.'ஏற்கனவே விஜய் வாகன ஓட்டி உட்பட பலரையும், சி.பி.ஐ., விசாரித்து வருகிறது; ஒரு சிலருக்கு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் பெயரை விஜய் எடுத்தால், நிச்சயம் அவருக்கும் சம்மன் அனுப்பப்படும்; அவரும் விசாரிக்கப்படுவார்' என, சொல்லப்படுகிறது.இன்னொரு பக்கம், கரூர் விசாரணை சம்பந்தப்பட்ட விஷயங்களில், டில்லியில் உள்ள ஹிந்தி மீடியாக்கள் ஆர்வமாக செய்தி வெளியிட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Gowrishankar
நவ 09, 2025 14:08

விஜய் சம்மன் என்னவாயிற்று தவேக நிர்வாகிகள் அனைவரும் உத்தமர்களா


ஆரூர் ரங்
நவ 09, 2025 11:22

அய்யோ நெஞ்சு வலிக்குது சீன் நம்பர் 2.


Sun
நவ 09, 2025 09:52

சி.பி.ஐ விசாரணைக் குழுவை சந்தித்துப் பேச நடிகர் விஜய் என்ன இந்த நாட்டின் ஜனாதிபதியா? அல்லது இந்த நாட்டின் ஒரு உயர் அதிகாரியா? இந்த நடிகரைப் பார்க்க வந்ததால்தான் அப்பாவி பொதுமக்கள் 41 பேரும் தங்கள் உயிரை இழந்தனர். அந்த நடிகர் விஜய்க்கு முதலில் சம்மன் அனுப்பி அலுவலகத்திற்கு வரவழைத்து தீவிர விசாரணையை அவரிடமிருந்தே முதலில் ஆரம்பியுங்கள். அதை விட்டு, விட்டு விசாரணைக் குழு அவருக்கு அப்பாய்ண்மென்ட் கொடுத்து அவர் வந்து சந்திப்பது எல்லாம் விசாரணை சரியான கோணத்தில் செல்வதற்கான சிக்னலாகத் தெரியவில்லை.


முருகன்
நவ 09, 2025 07:58

முதலில் விஜய்க்கு எப்போது சம்மன் அனுப்ப வேண்டும்


vivek
நவ 09, 2025 09:43

சதி செய்தவர்கள் முதலில். சம்மன்...குற்றம் செய்யாதவர்களுக்கு எதுக்கு சம்மன் அறிவிலி


புதிய வீடியோ