உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும் திருமா பேரணிக்கு கிருஷ்ணசாமி பதிலடி

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும் திருமா பேரணிக்கு கிருஷ்ணசாமி பதிலடி

சென்னை: திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின், 'மதச்சார்பின்மை காப்போம்' பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு பதிலடி தரும் வகையில், 'இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும்' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.கடந்த 14ம் தேதி, திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், 'மதச்சார்பின்மை காப்போம்' என்ற பெயரில் பேரணி நடத்தப்பட்டது. அதில், 'இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக பாதுகாப்போம்'என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அந்த தீர்மானத்திற்கு பதிலடி தரும் வகையில், டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய அரசியல் சாசனத்தில் ஜம்மு -- காஷ்மீரை தவிர, இந்தியாவில் எவரும் சொத்து வாங்கலாம் என்ற ஷரத்தும் இருந்துள்ளது; ஆனால், அனைவரும் சொத்து வாங்குவதற்கான வழிமுறைகள் அதில் சொல்லப்படவில்லை. ஒரு மிகப் பெரிய பிரதேசம் மதரீதியாக பிளவுபட்டபின், அதே மத ரீதியான மக்களையும் உள்ளடக்கி, எப்படி மதச்சார்பற்ற தேசமாக விளங்க முடியும் என்பதை பற்றி சிறிதும் சிந்தித்து பார்த்து, அரசியல் வடிவம் கொடுக்கவில்லை. பிரிவினைக்கு பின்னர் இந்தியா, ஹிந்து நாடாகத்தான் அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்தியாவில் ஜாதி பிரிவினைகள் உண்டு என்பதை அனைவரும் அறிவர். மொழி ரீதியான மாநில பிரிவினைகளால், இந்தியாவின் பிரதான பிரச்னைகளுக்கு தீர்வு காண இயலவில்லை. மேலும், மொழிவாரி மாநில பிரச்னைகளே, இந்தியாவின் இன்றைய பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரணமாக உள்ளன.மதச்சார்பின்மை என்பது, ஒரு சில குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் கோஷமே தவிர, 140 கோடி இந்திய மக்களின் உள்ளக் கிடங்கை வெளிப்படுத்தக்கூடியது அல்ல.குறிப்பிட்ட ஒரு சில நபர்கள், அரசியல் கட்சிகள், சில மதங்களின் மடிகளில் சாய்ந்து கொண்டு பேசுகிற போலி தத்துவமாக மதச்சார்பின்மை இருக்கக்கூடாது.எந்த மதத்தையும் உண்மையில் சாராமல் நின்று பேசுவது தான் உண்மையான மதச்சார்பின்மை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஜாதியும் ஒரு தேசிய இனம். எனவே, ஜாதிகளை தேசிய இனமாக அங்கீகரித்துவிட்டு, இந்தியாவை ஹிந்து தேசமாக அறிவிப்பதே, இந்தியாவிற்கும் பாதுகாப்பு; இந்திய மக்களுக்கும் பாதுகாப்பு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Chandru
ஜூன் 20, 2025 21:06

Dr Krishnaswamy has spoken something which is absolutely relevant. Bharath should be d as a HINDU NATION


Vijayakumar Vijay
ஜூன் 20, 2025 14:08

இதற்கு கிருஷ்ணசாமி டாக்டருக்கு படிக்க வேண்டியதில்லை. எங்காவது மடத்தில் சேர்ந்து இருக்கலாம். அங்கு நிறையவே எடுபிடி வேலை இருக்கும். மற்ற சமய மக்களை என்ன செய்வதாக உத்தேசம்


kumar nathan
ஜூன் 20, 2025 12:41

உயர்ந்த சாதிக்கும் மட்டும் கல்வியை, கல்வி அனைவருக்கும் பொதுவானது என்று கல்வி நிறுவனங்களை நிறுவி கற்று கொடுத்தவர்கள் கிறிஸ்தவர்கள். தீண்டாமை, சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக போராடி வெற்றி பெற்று கொடுத்தவர்கள் கிறிஸ்தவர்கள். அதற்கு பின்பு வந்தவர்கள், அதன் பெருமையை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டார்கள்.


krishna
ஜூன் 21, 2025 22:22

Classification என்பது வேறு. Discrimination என்பது வேறு. Go and read the book The beautiful tree


Delhi Balaraman
ஜூன் 19, 2025 19:21

இன்றைக்கு, படித்து பட்டம் பெற்று ஒரு ஆளுமையான நிலையில் இருப்பதற்கு காரணம் என்ன என்பதை நினைவில் கொள்ளுங்கள். அன்றைக்கு ஒரு பகுத்தறிவு பகலவன் இல்லையேல் நானும் சரி நீங்களும் சரி நமது பாட்டன் முப்பாட்டன் செய்த குலத் தொழிலைத் தான் செய்தே ஆகவேண்டும் என்ற நிலையில் தான் இருக்க வைத்திருப்பார்கள்.


RAMESH
ஜூன் 18, 2025 10:07

வரவேற்பு


ஆரூர் ரங்
ஜூன் 17, 2025 21:47

பைபிளில் கூட ஹிந்து தேசம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


kumar nathan
ஜூன் 20, 2025 12:43

இந்துஸ்தான் என்பது சுருக்கமாக இந்து தேசம்என குறிப்பிட பட்டுள்ளது. இந்துகுஷ் மலையை தாண்டி உள்ள தேசம். இந்துஸ்தானம் என்பது பொருள். இருப்பிடம் அடிபடையில் வந்ததுதவிர மதத்தின்அடிபடையில் இல்லை.


Saai Sundharamurthy AVK
ஜூன் 17, 2025 19:40

சரியான பேச்சு. நிச்சயம் வரவேற்கப்படும்.


பாபு
ஜூன் 17, 2025 18:51

சரியாக சொன்னீர்கள்


paul. mahesh
ஜூன் 17, 2025 17:17

வரவேற்கிறேன்


venkatesan
ஜூன் 17, 2025 15:55

Correct... congrats


முக்கிய வீடியோ