உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பள்ளிகளில் ப வடிவ இருக்கையில் பாதகமான அம்சங்களும் உள்ளன: அரசுக்கு தலைவர்கள் எச்சரிக்கை

பள்ளிகளில் ப வடிவ இருக்கையில் பாதகமான அம்சங்களும் உள்ளன: அரசுக்கு தலைவர்கள் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில், 'ப' வடிவில் மாணவர்கள் இருக்கையை அமைக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்ட நிலையில், இவ்வாறு இருக்கை அமைப்பதில், பாதகமான அம்சங்களும் உள்ளன என, அரசியல் தலைவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அதன் விபரம்:பா.ம.க., தலைவர் அன்புமணி: 'வகுப்பறைகளில் மாணவர் இருக்கைகள், 'ப' வடிவில் அமைக்கப்பட வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.இதில் சாதகமான அம்சம் இருப்பதை போல், பாதகமான அம்சங்களும் உள்ளன. பெரும்பாலான வகுப்பறைகள், 20 அடி நீளம், 20 அடி அகலம் கொண்டவையாக உள்ளன. இவற்றில், 'ப' வடிவில் 20 முதல் 24 மாணவர்களை மட்டுமே அமர வைக்க முடியும். இருபுறமும் அமரும் மாணவர்கள், கரும்பலகையை பார்த்து எழுத, கழுத்தை ஒருபுறமாக திருப்பி வைத்திருக்க வேண்டும். இதனால் கழுத்து வலி ஏற்படும். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க, ஆசிரியர்களும், வகுப்பறைகளும் அடிப்படை தேவை.எனவே, அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், குறைந்தது ஒரு லட்சம் வகுப்பறைகள் கட்ட வேண்டும். ஒரு லட்சம் ஆசிரியர்களை புதிதாக நியமிக்க வேண்டும்.முன்னாள் கவர்னர் தமிழிசை: தமிழக கிராமப்புற பள்ளிகளில், கட்டடம், கழிப்பறை, போதுமான ஆசிரியர்கள் இல்லை. குடிக்க தண்ணீர் இல்லை. தமிழக அரசு, இவற்றை முதலில் சரிசெய்ய வேண்டும்.மாணவர்களை 'ப' வடிவில் அமர வைக்கும்போது, அவர்களுக்கு கழுத்து வலி, கண் பார்வை கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவர்களுக்கு, மருத்துவ ரீதியாக உடல்நல பாதிப்பு ஏற்படும் என, மருத்துவத் துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கேரள சினிமாவில் காட்டப்பட்டதை இங்கே காப்பியடிப்பதை விட்டு விட்டு, அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அ.தி.மு.க., -- ஐ.டி., அணி பதிவு: 'ப' வடிவத்தில், பள்ளிகளில் பெஞ்சுகளை வைத்தால், கடைசி பெஞ்ச் ஒழிந்து விடுமாம். இது, ஸ்டாலின் அரசின் கண்டுபிடிப்பு. உங்கள் 'லாஜிக்'படியே பார்த்தாலும், 'ப' வடிவத்தில் வைத்தால், எல்லா பெஞ்சும் கடைசி பெஞ்சுதானே.இந்த வடிவத்தால், இடது, வலது பக்கம் உட்காரும் மாணவர்களுக்கு, கழுத்து வலி, கண் வலி ஏற்படும் என்ற அடிப்படை அறிவுகூட அரசுக்கு இல்லையா.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

krishnan
ஜூலை 14, 2025 21:05

துக்ளக் தர்பார். எளிதாக செயல்படுத்த நமது சட்டமன்றத்தை ப வடிவில் மாற்றி முதல்வரை, எதிர்க்கட்சித் தலைவரை நடுவிலும் அமர வைத்து விடுவோம். ப வடிவம் என்று சொன்னது ப மாதிரியா இருக்க வேண்டும். அரை வட்டம் அல்ல. யாரும் எட்டு மணி நேரம் எழுந்து செல்லக்கூடாது அனைவருக்கும் நாட்டில் நடக்கும் ஏதாவது ஒரு நிகழ்வை பட்டியல் இட்டுக் கொண்டே இருக்க வேண்டும் அனைத்து எம்எல்ஏக்களும் அதை படிக்க வேண்டும். 200 ரூபாய் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றி நன்றி இதே மாதிரி நிறைய திட்டங்களை கொண்டு வர இந்த துக்ளக் தர்பாரை வாழ்த்துகிறோம்


Sivasankaran Kannan
ஜூலை 14, 2025 17:36

படிப்பு அறிவு என்று எதுவும் இல்லாத புலிகேசி கூட்டத்திடம் 500 ரூபாய்க்கும், பிரியாணிக்கும் பொன்னான வாக்குகளை விற்று தமிழ் மக்கள் வேறு என்ன பெற முடியும்..


ram
ஜூலை 14, 2025 12:51

கிராமத்தில் இருக்கும் பள்ளிகள் மரத்தடியில் தான் நடக்கிறது அதுபோல பள்ளிகளுக்கு முதலில் கட்டிடம் கட்டாமல் ப வாம் ஆ வாம் டிசைன் டிசைனாக மக்களை ஏமாத்தும் இந்த திமுக ஆட்கள்.


மூர்க்கன்
ஜூலை 14, 2025 12:28

சமூகநீதி போற்றும் திராவிட மாடல் அரசு இதனை வரவேற்கும் சனாதனிகள் வழக்கம் போல நால்வர்ண நான்கு பென்ச் அமைப்பையே வரவேற்பார்கள். இதிலென்ன சந்தேகம்.


panneer selvam
ஜூலை 14, 2025 17:01

This seating arrangement is not good for students since they could not face the blackboard in straight . Just try at your house by turning the neck for an half hour . Then you know the pain of it .


Muralidharan S
ஜூலை 14, 2025 11:39

கல்வி அறிவும், அனுபவம்அறிவும் , செயல் அறிவும், சிந்தனை திறனும் வாய்ந்த, திறமையும் மிக்க கல்வியாளர்கள் இருந்தால், இதுபோல சினிமா பார்த்து எல்லாம் துக்ளக் தர்பார் நடத்த வேண்டிய அவசியம் இருக்காது.. எல்லாம் திராவிஷ அரசியல் ??


கா. ரவிச்சந்திரன், புதுக்கோட்டை
ஜூலை 14, 2025 11:24

மாணவர்கள் வகுப்பறையில் ஆசிரியர்கள் மற்றும் கரும்பலகையை நேரில் பார்ப்பதே நல்லது. மாணவர்கள் சைடாக பார்க்கும் சூழல் இப்புதிய ப வடிவ முறையில் உள்ளது. இது மாணவர்களுக்கு கழுத்து வலி, மற்றும் தலைவலியை உண்டாக்கும்.


சிந்தனை
ஜூலை 14, 2025 10:15

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் விளையாட வேண்டிய குழந்தைகளை... பள்ளிக்குள் கோழிகளை கூண்டில் அடைப்பது போல் அறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதை பற்றி கேட்க ஆள் இல்லை...


KRISHNAN R
ஜூலை 14, 2025 09:47

உடல் ரீதியாக பாதிப்பு யோசிக்க வேண்டும். ரெண்டாவது.. கடைசி பெஞ்ச் மாணவர்கள். சாதித்த கதைகள் உண்டு...முன்னோர்கள்.... உயர வரிசை படி அமரவைத்தனர்.... காத்திருப்போம்


vbs manian
ஜூலை 14, 2025 09:15

மரத்தடி மொட்டை மாடிகளில் வகுப்புகள். போதுமான ஆசிரியர் இல்லை. கழிப்பறை குடிநீர் வசதி இல்லை. காலம் கழிந்த பாடத்திட்டம். மொத ஈரலும் கேட்டு விட்டது. முதலில் அடிப்படையை சரி செய்யுங்கள்.


Padmasridharan
ஜூலை 14, 2025 07:40

சாமியோவ், மொதல்ல employment office ல பதித்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணம் வாங்கி வேலை கொடுப்பதை நிறுத்த வேண்டும். இது வெளி வராமல் இருக்க பலருடைய registration & renewal காணாமல் போய்விட்டது. புதிதாக பதிவிட வேண்டுமென்று மரியாதை இல்லாமல் மரியாதையுடன் சொல்கிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை