வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கோடி கோடியா கொள்ளை அடித்தவனை பேரணி போக விட்டுவிட்டு, வைத்து பிழைப்புக்கு திருடியவனுக்கு கொடூரமான தண்டனையா?
it is nice to see navarathri celebrated in Pakistan
பாகிஸ்தானின் கராச்சியில் ஸ்ரீ ரத்னேஸ்வர் மஹாதேவர் கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடிய வீடியோ, இன்ஸ்டாகிராமில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் பேசும் பெண், 'இது, இந்தியா அல்ல; பாகிஸ்தானில் நடக்கும் நவராத்திரி விழா' என்று கூறுகிறார்.அழகு மிளிரும் அந்தமான்; அசந்து போன கொரிய பெண்
இந்தியாவில் இரண்டு ஆண்டுகளாக வசிக்கிறார் தென்கொரிய பெண் ஜங் ஏ உம். தான் சுற்றுலா சென்ற இடங்களில், அந்தமான் தான் மிகவும் அழகானது என்கிறார். கண்ணாடி பளிங்கு போன்ற கடல் நீர், இன்முகத்துடன் வரவேற்கும் உள்ளூர் மக்கள், பார்க்கத்துாண்டும் சுற்றுலா மையங்கள் தன்னை கவர்ந்து விட்டதாக கூறுகிறார், அவர்.கொள்ளையர்களின் வில்லத்தனம்
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் நகரின் பிஜ்லி கர் சந்திப்பில் இருக்கிறது அந்த ஏ.டி.எம்., மையம். அதில் இரவு நேரத்தில் புகுந்த முகமூடி கொள்ளையன் ஒருவன், 'சிசிடிவி' கேமராவில் கருப்பு பெயின்ட் ஸ்பிரே செய்கிறான். ஏ.டி.எம்., இயந்திரத்தை சுற்றி கயிறு கட்டிய அவன், வெளியில் நிறுத்தப்பட்டுள்ள காருடன் சேர்த்து கட்டுகிறான்.ரயில் திருடர்களுக்கு பயணிகள் சொன்ன பாடம்
பீஹார் மாநிலம் ஷிவ்நாராயண்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்றிருந்தது. ஜன்னலோர பயணி ஒருவர், போனை பார்த்துக் கொண்டிருந்தார். ரயில் புறப்பட்டு மெதுவாக நகரத் தொடங்கி விட்டது. அதை கவனித்த பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஒருவன், ஜன்னல் வழியாக கையை விட்டு, பயணியின் போனை பறித்தான்.'ரயில் புறப்பட்டு விட்டால், நம்மை பிடிக்க முடியாது' என்பது அவன் எண்ணம். ஆனால், ரயிலுக்குள் இருந்த பயணியர், அவன் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டனர். அதற்குள் ரயில் வேகமாக செல்ல தொடங்கி விட்டது.ரயில் ஜன்னலில் தொங்கியபடி, கதறிக்கொண்டே வந்தான் திருடன். பிளாட்பாரம் முடியும் இடத்தில், பயணியர் கையை விட்டுவிட, ரயிலில் இருந்து விழுந்தான் அந்த திருடன். வீடியோவை பார்த்த வலைதள பிரியர்கள், 'ரயில் ஜன்னல் வழியாக திருட நினைப்பவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடம்' என, தெரிவித்துள்ளனர்.உழைப்பெல்லாம் வீண்; ம.பி., மாணவர் வேதனை
மத்திய பிரதேச மாநிலத்தில், அஜ்னார் நதியை சுத்தம் செய்து வலைதளங்களில் உலகப்புகழ் பெற்ற மாணவர் பிட்டு தபாஹி, நாடு முழுதும் இப்போது துாய்மைப்பணியை மேற்கொண்டு வருகிறார். டில்லி, பெங்களூரு என சென்றவர், மீண்டும் தன் சொந்த ஊருக்கு சென்றபோது, தான் துாய்மை செய்த நதியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கோடி கோடியா கொள்ளை அடித்தவனை பேரணி போக விட்டுவிட்டு, வைத்து பிழைப்புக்கு திருடியவனுக்கு கொடூரமான தண்டனையா?
it is nice to see navarathri celebrated in Pakistan