அதிகார மமதையை தகர்த்தெறிவோம்: தினமலர் கார்ட்டூனுக்கு அழகிரி விளக்கம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை தகர்த்தெறிவோம் என, நான் கூறவில்லை. அதிகார மமதையை தகர்த்தெறிவோம் என்ற பொருள்படும்படிதான் கூறினேன்'' என, 'தினமலர்' நாளிதழ் கார்ட்டூனுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார். அவரது அறிக்கை:
சென்னை மாநகர காவல் துறையை நான் விமர்சித்து பேசியதை மையப்படுத்தி, நேற்று 'தினமலர்' நாளிதழில் கார்ட்டூன் எனப்படும், கேலிசித்திரம் வெளியிடப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் நான் நடத்திய, ரயில் மறியல் போராட்டம் திட்டமிடாதது; அது தற்செயலாக நடந்தது. நான் கும்பகோணத்தில் இருந்து சென்னை வருவதற்காக, கடந்த 2023 மார்ச் 22ல், கும்பகோணத்தில் ரயிலுக்காக காத்திருந்தேன். அப்போது, எம்.பி.,யாக இருந்த ராகுலை தகுதி நீக்கம் செய்துள்ளதாக, தகவல் கிடைத்தது.