உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பாகிஸ்தானுக்கு நெத்தியடி கொடுத்த இந்திய ராணுவம்; ஆபரேசன் சிந்தூர் குறித்து நிபுணர்கள் கருத்து

பாகிஸ்தானுக்கு நெத்தியடி கொடுத்த இந்திய ராணுவம்; ஆபரேசன் சிந்தூர் குறித்து நிபுணர்கள் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து பாதுகாப்புத் துறையை சேர்ந்த நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.போர்க்கால ஒத்திகை என பாகிஸ்தானை நம்ப வைத்து நள்ளிரவில் அதிரடியாக தாக்குதலை துவக்கி அசத்தியது நம் ராணுவம். இந்திய ராணுவம் இன்று (மே.07) நள்ளிரவில் ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதலை துவக்கியது.ஆபரேசன் சிந்தூர் பாதுகாப்புத் துறையை சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:ஓய்வு பெற்ற பாதுகாப்புத்துறை நிபுணர் கேப்டன் அனில் கவுர் கூறியதாவது: ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தைத் தொடங்கியுள்ளன, மேலும் ஒன்பது இலக்குகள் வெற்றிகரமாகத் தாக்கப்பட்டுள்ளன.பாகிஸ்தானில் இருந்து வரும் தகவல்களின்படி, பயங்கரவாதிகள் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் ஒன்பது முகாம்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இந்தியா எதையும் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.முன்னாள் இந்திய விமானப்படைத் தலைவர் ஆர்.கே.எஸ்., பதாரியா கூறியதாவது: பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய ஆயுதப்படைகள் ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தை தொடங்கியுள்ளன.பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 முகாம்களில் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு பிரதமர் மோடியின் ஒட்டுமொத்த வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து பழிவாங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kalyanaraman
மே 07, 2025 08:58

இந்த 15 நாட்களில் பயங்கரவாதிகள் தங்களது இருப்பிடத்தை பெரும்பாலும் மாற்றி இருப்பார்கள். வெறும் கட்டிடங்கள் மட்டுமே பாதிப்புக்குள்ளாயிருக்கும்.


Amar Akbar Antony
மே 07, 2025 10:06

சூப்பர் உங்கள் மனதை தேற்றிக்கொள்ளவும்.


ERP MANAGER
மே 07, 2025 11:11

exactly


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 07, 2025 12:11

நம்மை நாமே தான் இது போன்று யோசித்து மோட்டிவேஷன் செய்து கொள்ள வேண்டும் வேற வழி


Bala
மே 07, 2025 07:24

POK வில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் முற்றிலுமாக துவம்சம் செய்யப்பட வேண்டும்


நிக்கோல்தாம்சன்
மே 07, 2025 08:53

அவர்கள் மீதுதான் துல்லியமான தாக்குதல் நடந்துள்ளது , நமது அதிகாரிகளின் பிளானிங் கண்டு வியக்கிறேன்


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 07, 2025 12:37

POK வை கைப்பற்ற வேண்டும். அதுவரை ஓயக்கூடாது. முதலில் இந்த லொட லொடாவை நிறுத்துங்கப்பா. வேலைய பாருங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை