உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கேள்வி எழுப்பிய பெண்ணால் அதிர்ந்தார் அமைச்சர் முத்துசாமி

கேள்வி எழுப்பிய பெண்ணால் அதிர்ந்தார் அமைச்சர் முத்துசாமி

ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை துவங்கி வைப்பதற்காக, அமைச்சர் முத்துசாமி ஈரோட்டுக்கு வந்தார். ஈரோடு மாநகராட்சி, 43வது வார்டு மரப்பாலம் ஜீவானந்தம் நகரில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை துவக்கி வைப்பதற்காக, சென்றார். அப்போது அங்கு கோபமாக ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்த அமைச்சர் முத்துசாமி, 'என்னம்மா இங்க நிக்கிறீங்க... ஏதும் குற்றம் குறை இருந்தா, அருகில் வந்து சொல்லும்மா' என தன் அருகில் அழைத்தார். உடனே அமைச்சர் அருகில் சென்ற அந்தப் பெண், ஒற்றை விரலை நீட்டி கோபமாக கேள்வி எழுப்பினார். 'தேர்தல் நெருங்கற இந்த நேரத்துல மட்டும் இந்தப் பகுதிக்கு ஏன் வர்றீங்க இந்த பகுதியில் ரோடு போட சொல்லி எத்தனை மனு கொடுத்துள்ளேன். 'ஒண்ணக்கூட கண்டுக்கல. உங்கள பார்க்க முயற்சித்தேன். அதுவும் முடியல. தேர்தல்ல ஓட்டு வாங்கும் எண்ணத்தோட இங்க வந்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்துகிட்டு இருக்கீங்க... இது நியாயமா' என கேட்டார். https://www.youtube.com/embed/Pf_XzsZaCY8இதை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர் முத்துசாமி, அதிர்ந்து போய் அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருக்க, அருகில் இருந்த தொகுதி எம்.எல்.ஏ., சந்திரகுமாரும் மற்றவர்களும் பதற்றமடைந்தபடியே, சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து, கேள்வி எழுப்பிய பெண்ணை மெதுவாக தள்ளியபடியே அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Natchimuthu Chithiraisamy
ஜூலை 30, 2025 17:08

முத்துசாமி AIADMK காரர் வந்தவர் என்பதினால் செய்தியில் வன்முறை இல்லை. இதோ பொன்முடி ராசா போன்ற ஆள்கள் சந்திருந்தால் ஆபாச பேச்சு என செய்தி வந்திருக்கும்


Anantharaman Srinivasan
ஜூலை 26, 2025 00:22

ஆட்சியிலிருப்போரை பார்த்து மக்கள் பயந்து ஒடுங்கி விலகிச்சென்ற காலம் மலையேறிவிட்டது. இனி சூடு பறக்க நேருக்கு நேர் கேள்வி கேட்கும் காட்சிகள் ஆங்காங்கே அதிகரிக்கும். மந்திரிகள் பாடு திண்டாட்டம் தான்..


நிக்கோல்தாம்சன்
ஜூலை 25, 2025 21:25

திராவிட மாடலில் ஐக்கியமாகிவிட்ட முத்துசாமி


Anbuselvan
ஜூலை 25, 2025 20:20

திராவிட மாடல்


என்றும் இந்தியன்
ஜூலை 25, 2025 17:34

இதைத்தான் ஒவ்வொரு மனிதனும் எண்ணுகின்றான் தமிழ்நாட்டில் ???ஆனால் டாஸ்மாக்கினாட்டை நாடாள்வது யார் திருட்டு திராவிட மனித உருவில் இருக்கும் மிருகங்கள்???அப்புறம் எப்படி விடை கிடைக்கும்???


vivek
ஜூலை 25, 2025 17:12

திராவிட முட்டு சொங்கிகள் யாரையும் காணோமே .....நம்ம இதயம் பத்திரம் புகழ் ஓவியரும் காணோம்


krishna
ஜூலை 25, 2025 19:51

200 ROOVAA COLIE PENDING.AZHUKKALAYAM VAASALIL ELLA OOPIS WAITING.


R.MURALIKRISHNAN
ஜூலை 25, 2025 16:08

இவர்களையெல்லாம் தொகுதிக்கு அனுப்பி விட்டு, கட்சிகாரர்களை வீடு வீடா அனுப்பிட்டு தலைவர்கள் ஹாய்யா ரெஸ்ட் எடுக்க வேண்டியது.


Mani . V
ஜூலை 25, 2025 15:07

வீரப் பெண்மணி. எதுக்கும் பாதுகாப்பாக இருக்கணும். என்ன வேண்டுமானாலும் செய்வான்கள்.


பிரேம்ஜி
ஜூலை 25, 2025 14:21

இவர் பனங்காட்டு நரி! இந்த சலசலப்புக்கெல்லாம் அசர மாட்டார்! 2031 வரை திமுகவை அசைக்க முடியாது!


krishna
ஜூலை 25, 2025 15:35

2031 VARAI 200 ROOVAA COOLIE PREMJI ENNUM GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI AVARGALAI YAARUM ASAIKKA MUDIYAADHU.


பிரேம்ஜி
ஜூலை 25, 2025 17:36

இன்றைய நிலையில் கள நிலவரம்: திமுக கூட்டணி ஒற்றுமை மற்றும் தேர்தல் முனைப்புடன் செயல்பாட்டில் முன்னணியில் இருக்கிறது. அதிமுக கூட்டணியில் ஒற்றுமையும் இல்லை. செயல்பாடுகளும் ஏனோதானோ என்றுதான் இருக்கிறது. இரண்டு கூட்டணியுமே ஊழல் செய்வதில் மன்னர்கள்தான். யாரும் யோக்கியர்கள் கிடையாது! அதனால்தான் ஆளும் கூட்டணி வெல்ல வாய்ப்பு மிக அதிகம்!


ஆரூர் ரங்
ஜூலை 25, 2025 13:43

பாட்டியையே தனிப்படை அமைத்துத் தேடிய அரசு. ஓ. தேர்தல் நேரமிது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை