உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நேரு கோட்டை விட்டதை மோடி சரி செய்துள்ளார்: மதுரை ஆதீனம்

நேரு கோட்டை விட்டதை மோடி சரி செய்துள்ளார்: மதுரை ஆதீனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்ற பின், உலகளவில் பல்வேறு மாற்றங்கள் உருவாகும் என கணிக்கப்படுகிறது.இந்திய நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக அறிஞர்கள் பெயரில் பலரும் கூறுகின்றனர். இந்திய பொருளாதாரம் யாராலும் வீழ்ச்சி அடையாது. பிரதமர் மோடி, இந்திய பொருளாதார சரிவை தடுத்து நிறுத்தி விடுவார். பிரதமர் மோடியின் செயல்பாடுகளால், இந்தியாவை சீண்டிக் கொண்டிருந்த சீனாவே தற்போது குறைத்துள்ளது. இதன் வாயிலாக, பிரதமராக இருந்த நேரு ஏற்கனவே கோட்டை விட்டதை, பிரதமர் மோடி தற்போது சரி செய்து இருக்கிறார். உலகளவில் இந்தியாவின் மரியாதையும் முக்கியத்துவமும் பல நாடுகளுக்கு தற்போது உணர்த்தப்பட்டுள்ளது. உதயநிதி தமிழக துணை முதல்வராக நியமிக்கப்பட்டது முதல்வரின் இஷ்டம். கருணாநிதி பேரன், முதல்வரின் மகன் என்ற வகையில் முன்னுரிமை கொடுத்துக்கூட நியமித்திருக்கலாம். அப்படி நியமிக்கப்பட்டிருந்தாலும், அதில் தவறில்லை.-ஹரிஹர தேசிகபரமாச்சாரிய சுவாமிகள்,மதுரை ஆதீனம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Saai Sundharamurthy AVK
நவ 10, 2024 15:32

சரியாக சொல்லியிருக்கிறார்.


Senthoora
நவ 10, 2024 10:29

சாமி உங்களுக்கு எதுக்கு அரசியல் பேச்சு. இலங்கை புத்தபிக்குபோல அரசியலுக்கு நுழைந்து, நாட்ட குழப்பதிங்க, இப்போ நடிகர்கள் எல்லாரும் MGR போல வர ஆசைப்படுறாங்க.


அப்பாவி
நவ 10, 2024 05:10

4000 சதுர கிலோமீட்டர் வரை விட்டுக் குடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்து கொண்டிருக்கிறது.


sankar
நவ 10, 2024 10:16

தம்பி பயங்கர விவரம்போல


sankar
நவ 10, 2024 10:17

சீனாவில் இருந்து நேரடி தகவல் வந்ததா தம்பி -


அப்பாவி
நவ 10, 2024 05:08

நேரு போய் போய் டீ குடிக்கலை. இவர் குடித்தாரு. அம்பது மடங்கு சீன இறக்குமதி. 13 பில்லியன் டாலருக்கு சீன ஏற்றுமதியை விட அதிகமாயிருக்கு. கோட்டையைப் புடிச்சிட்டோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை