உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 2,000க்கும் மேற்பட்டோர் ராஜினாமா

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 2,000க்கும் மேற்பட்டோர் ராஜினாமா

ஈரோடு: செங்கோட்டையன் ஆதரவாளர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.,வில் இருந்து விலகினர். அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அமைப்பு செயலர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச்செயலர் பதவிகளை பறித்து, கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து, கோபியில் உள்ள செங்கோட்டையனின் பண்ணை வீடு முன்பாக, அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்படியெல்லாம் செய்யக் கூடாது என, செங்கோட்டையன் சமாதானப்படுத்தியும் ஆதரவாளர்கள் கோஷத்தை குறைக்கவில்லை. இந்நிலையில், நேற்று மாலை, செங்கோட்டையனை சந்தித்த அவருடைய ஆதரவாளர்கள் பலரும், தங்களது கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை அவரிடம் வழங்கினர். கூடவே, தங்களுடைய உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக கடிதம் எழுதி, அதை செங்கோட்டையனிடமே வழங்கினர். அதேபோல, செங்கோட்டையன் ஆதரவாளர்களாக இருக்கும், ஈரோடு மாவட்ட ஒன்றிய, நகர, இணை அணி நிர்வாகிகளும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை செங்கோட்டையனிடம் அளித்துள்ளனர். இப்படி நேற்று மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் அக்கட்சியில் இருந்து விலகி, அதற்கான கடிதங்களை செங்கோட்டையனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Sun
செப் 07, 2025 22:29

அ.தி.மு.கவின் துரோகிகள் யார்? யார்? என தலைமை ரொம்ப கஷ்டப்பட்டு கண்டுபிடித்து ஒவ்வொருவராக நீக்குவதை தலைமைக்கு வேலையே இல்லாமல் ரொம்ப சிம்பிளாக அவர்களே ராஜினாமா செய்து விட்டார்கள். அ.தி.மு.க தலைமைக்கு வேலை மிச்சம்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 07, 2025 22:10

பாஜாக்கா ஹேப்பி அண்ணாச்சி


ஜெய்ஹிந்த்புரம்
செப் 07, 2025 21:20

அந்த 2000 வோட்டும் இனி பாஜகவுக்குத் தான்னு கணக்கு போட்டு கனவு காண ஆரம்பிச்சிடுவானுங்க


தமிழ் மைந்தன்
செப் 07, 2025 20:58

ஆணவம் புடிச்ச செங்கோட்டை இப்பவே திமுகவில் சவாரி செய்வார்


pakalavan
செப் 07, 2025 17:47

ஆணவம் புடிச்ச எடப்பாடி என்று அண்ணாமல சொன்னது சரியாத்தான் போச்சு


Haja Kuthubdeen
செப் 07, 2025 14:02

பூச்சாண்டி வேலை..இதெற்கெல்லாம் தலைமை கவலை படாது... செங்கோட்டையன் தன் தவறை உணரனும்.


Sri
செப் 07, 2025 10:23

தீமுகாவின் பலமே பலவீனமான எதிர்க்கட்சிகள் தான்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 07, 2025 21:18

2026 தேர்தலின் பாஜ௧ மாஸ்டர் பிளானே ஆடீம்காவை ஒண்ணும் இல்ல ஆக்குறது தான். எலி வளையில் பாம்பு நுழைந்து தன்னோட புற்றாக வசிக்குமாம். அது போலத் தான்


aaruthirumalai
செப் 07, 2025 10:02

பூச்சாண்டி...........


Raja
செப் 07, 2025 08:47

புதிதாக தோன்றியிருக்கும் புரட்சி வீரர் இந்த செங்கோட்டை. இவனிடமிருந்து மந்திரி பதவியை ஜெயலலிதா ஏன் புடுங்கினார் என்பதை யாரும் மறக்கவில்லை. கேவலமான பிறவி இந்த செங்கோட்டை


Kadaparai Mani
செப் 07, 2025 11:01

அந்த காரணம் வெளிய சொன்னால் மிக கேவலம் செங்கோட்டையனுக்கு


பெரிய ராசு
செப் 07, 2025 16:08

ஒன்றுமில்லை திருநெல்வேலி அப்போதய பெண் மந்திரியிடம் தொடர்பு என்று அவரின் மனைவி ஜெ விடம் புகாரளித்த மறுநிமிடம் அண்ணன் பதவி பிடுங்கப்பட்டது , தனிமனித ஒழுக்கத்தில் ஜெ நெருப்பு ..


Venkat esh
செப் 07, 2025 16:37

தவழ்ந்தபாடியார் வாழ்க


Manaimaran
செப் 07, 2025 06:56

விலகலாம் கட்சி அழிந்துவிடாது இவர் காணாம போவார் இவர இயக்குவது வேறு ஒருவர் இவர் பலியாடு