உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தே.மு.தி.க.,வுக்கு எம்.பி., சீட்: அ.தி.மு.க.,வில் கொந்தளிப்பு

தே.மு.தி.க.,வுக்கு எம்.பி., சீட்: அ.தி.மு.க.,வில் கொந்தளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் குருபூஜையில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்துள்ள நிலையில், தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கொடுக்க, அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.சமீபத்தில், சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்த, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், தே.மு.தி.க., துணை செயலர் சுதீஷ், 28ல் நடக்கும் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள் குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். அதை ஏற்று, அந்நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில், தே.மு.தி.க., வின் இம்முடிவுக்கு அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை எப்படி அழைக்கலாம் என, அக்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், லோக்சபா தேர்தலின்போது பேசப்பட்டபடி, தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கக்கூடாது என்றும், அ.தி.மு.க., நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.

இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ம.க., - த.மா.கா., ஆகிய இரு கட்சிகளுக்கும் ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்பட்டது. ஆனால், லோக்சபா தேர்தலில், அந்த இரு கட்சிகளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் சேர்ந்ததே தவிர, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. பழனிசாமிக்கு முழுமையான எதிர்ப்பில் செயல்படும் அண்ணாமலை பேச்சைக் கேட்டு, பா.ம.க.,வும் த.மா.கா.,வும் தே.ஜ., கூட்டணியில் இணைந்தது போல, தே.மு.தி.க.,வும் நாளைக்கே, அந்தப் பக்கம் போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதற்கேற்ப, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவும், விஜயகாந்த் நினைவு நாள் குருபூஜைக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். நாளையே, அவரும் அந்தப்பக்கம் போகமாட்டார் என்று உறுதியாக சொல்ல முடியாது. அதனால், தே.மு.தி.க., விஷயத்தில் அ.தி.மு.க., கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே, த.மா.கா., - பா.ம.க.,வுக்கு என இரு எம்.பி., பதவிகளை விட்டுக் கொடுத்ததில், அ.தி.மு.க.,வுக்கு எந்த லாபமும் இல்லை. அதனால், இம்முறை தே.மு.தி.க.,வுக்கு தர கட்சியினர் விரும்பவில்லை. கூடவே, சட்டசபை தேர்தலுக்கு முன், தே.மு.தி.க., - தி.மு.க., கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.இதுதவிர, அ.தி.மு.க., ஆதரவில் விஜய பிரபாகரன் ராஜ்யசபா எம்.பி.,யாக்கப்பட்டால், அதை வைத்து, பா.ஜ.,விடம் சென்று, மத்தியில் அமைச்சர் பதவி கேட்கவும் வாய்ப்புள்ளது. அதோடு, கட்சி இப்போதைக்கு இருக்கும் நிலையில், தே.மு.தி.க.,வை பா.ஜ.,வோடு இணைக்கவும் வாய்ப்புள்ளது.இப்படி எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும், தே.மு.தி.க.,வால் அ.தி.மு.க.,வுக்கு எவ்விதத்திலும் நன்மை ஏற்படப் போவதில்லை. அதனால்தான், அக்கட்சி விஷயத்தில் கவனமாக செயல்பட அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

R Elayaperumal
டிச 28, 2024 22:18

காசா பணமா? சும்மா கொளுத்திப் போடுங்க...


Bharathi
டிச 27, 2024 17:06

விஜயகாந்த் நல்ல அனுஷர்தான். அதுக்காக அவரோட நினைவு நாளை குருபூஜைன்னு சொல்றதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல. அவரோட பேரை வச்சி மனைவியும் மச்சானும் இன்னமும் கல்லா கட்ட பார்க்கறாங்க


ஆரூர் ரங்
டிச 27, 2024 21:57

இம்மானுவேல் குருபூஜை நடத்துறாங்க. அவர் என்ன ஹிந்துவா?.


Sundar R
டிச 27, 2024 07:13

தேமுதிமுக


கண்ணன்,மேலூர்
டிச 27, 2024 08:09

அதிமுகவையும், எடப்பாடியையும் படுகுழியில் தள்ளி மூடுவது என்று முடிவு செய்து விட்டனர் அதிமுகவின் இரண்டாம் கட்ட மட்டமான தலைவர்கள்.


முக்கிய வீடியோ