உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இன்று முருக பக்தர்கள் மாநாடு: 5 லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம் பாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

இன்று முருக பக்தர்கள் மாநாடு: 5 லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம் பாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

மதுரை: மதுரையில் இன்று (ஜூன் 22) நடக்கவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள 1.30 லட்சம் பேர் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர். ஐந்து லட்சம் பேர் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.மதுரை வண்டியூர் டோல் கேட் அருகே உள்ள மைதானத்தில் இன்று (ஜூன் 22) மதியம் 3:00 மணிக்கு முருக பக்தர்கள் மாநாடு நடக்கவுள்ளது. இதற்காக 8 லட்சம் சதுர அடி பரப்பளவில் உள்ள மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2boju745&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாநாட்டின் சிறப்பம்சமாக 5 லட்சம் பக்தர்கள் நேரடியாக பங்கேற்றுகந்த சஷ்டி கவசம் பாடி கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் தற்போது தீவிரமடைந்துள்ளது. மாநாடு வளாகத்தில் 5 லட்சம் சதுர அடியில் பக்தர்கள் அமருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இடையே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இரும்பு தடுப்புகள் மூலம் 50 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 2000 இருக்கைகளும், 1000 லிட்டர் தண்ணீர் டேங்கும் வைக்கப்படும். மாநாட்டிற்கு உள்ளே வரும் போது பக்தர்களிடையே நெரிசலை தவிர்க்கும் வகையில் மூன்று நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விரிவான பார்க்கிங் வசதி

கார்களில் வருவோருக்கு இரண்டு இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பஸ், வேன்களை நிறுத்த தனி பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களை ஒருங்கிணைக்கவும், பக்தர்களை வழிநடத்தவும் 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாநாடு மதியம் 3:00 தொடங்கி இரவு 8:00 மணிக்கு நிறைவடையும். மாலை 4:00 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடக்கும். மாலை 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படும். இதற்காக மாநாடு வளாகம் முழுவதும் 18 எல்.இ.டி., திரைகள் அமைப்பதற்கான பணிகள் நடக்கின்றன. திரையை பார்த்து பக்தர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்பின் சிறப்பு விருந்தினர்களின் உரை இருக்கும். இதில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், மடாதிபதிகள், ஹிந்து அமைப்பினர், பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இறுதியாக முருகன் கோயில்களை மேம்படுத்துவது, வழிபாட்டு உரிமையை பாதுகாப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.மாநாட்டுக்கு வரும் பக்தர்களை ஒருங்கிணைக்க 'கியூஆர்' குறியீடு வெளியிடப்பட்டது. இதன் மூலம் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் நேற்று மதியம் வரை முன்பதிவு செய்துள்ளனர்; 5 ஆயிரம் வாகனங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.நேற்றைய நீதிமன்ற உத்தரவுக்கு பின் இந்த எண்ணிக்கை இரு மடங்காகும் என ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர். அதுபோல், முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்ளை ஒருங்கிணைக்கவும் மாநாட்டில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அதிகரிக்கும் கூட்டம்

முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை வீடுகளின் அருட்காட்சி ஜூன் 16 ல் திறக்கப்பட்டது. முதல் 3 நாள்களில் மட்டும் 30 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் காலை 3 ஆயிரம் பேர், மாலை 9 ஆயிரம் பேர் அறுபடை வீடுகளின் மாதிரியை தரிசனம் செய்தனர். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்தனர். மதியம் 1:00 மணி வரை வெயிலை பொருட்படுத்தாமல் சுமார் 5 ஆயிரம் பேர் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இன்றும், நாளையும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் வரிசையில் செல்ல கூடுதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக 20 சிற்றுண்டி கடைகள் செயல்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Kulandai kannan
ஜூன் 21, 2025 19:24

பாஜக ஆட்சிக்கு வந்தால்தான் திமுக பாய்ச்சியுள்ள விஷத்தை முறிக்க முடியும்.


Oviya Vijay
ஜூன் 21, 2025 16:50

உங்களுக்கு விஷயம் தெரியுமா??? உ பி முதலமைச்சர் யோகியானந்த் இந்த மாநாட்டுக்கு வரலேன்னு சொல்லிட்டாராமேப்பா... ஒரு மாநிலத்தோட முதலமைச்சரையே கூட்டிட்டு வர்றோம்னு சீன் போட்டதெல்லாம் போச்சா... ஒவ்வொருத்தரா கழண்டுக்க ஆரம்பிச்சுட்டாங்களா... அவங்களுக்கு தமிழ்கடவுள் முருகப் பெருமானப் பத்தி பெரிய அளவுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை... தமிழ்நாடு கர்நாடகா விட்டோம்னா மத்த எல்லா ஸ்டேட்லயும் முருகன் அண்ணன் கணபதி தான் ரொம்ப பேமஸ்... யோகி எப்பவோ வரமாட்டேன்னு சொல்லியிருந்திருப்பாரு... ஆனா கூட்டத்தை சேர்க்குறதுக்காக மாநாட்டா ரெடி பண்றவங்க அதை வெளியில சொல்லாம இதுக்கு மீறியும் மூடிவைக்க முடியாது அப்படிங்கிற நிலைமைல இப்போ அந்த நியூஸ்ஸ வெளிய விட்டு இருக்காங்கன்னு தோனுது... கோர்ட் சொன்ன நிபந்தனைகள் எல்லாத்தையும் எல்லா சங்கிகளும் மனப்பாடம் பண்ணிக்கிட்டீங்களா... அங்க போயி அரசியல் பேசுனா அடி தான் விழும். ஜாக்கிரதை... இந்நேரத்துல என்னோட மைண்ட் வாய்ஸ்: சொன்னா கேக்கவா போறீங்க... நாளைக்கு மாநாட்டுல ஏதோ பஞ்சாயத்து ஆகப்போகுதுன்னு உள்மனசு சொல்லுது... பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு...


பாரத புதல்வன் தமிழக குன்றியம்
ஜூன் 21, 2025 17:36

ஓவியம் போல இன்னும் நிறைய பேர் கதருவதை இந்த தளத்தில் காணலாம்.... ஏனெனில் 200 க்கு ஓலமிடும் கும்பல்கள் முருக பெருமானை காண வரும் கூட்டத்தை கண்டு வயிற்றில் நெருப்பு எரியும் அளவிற்கு புலம்பல் இருக்கும்.... கதருங்க 200 கொத்தடிமைகளே.......


பேசும் தமிழன்
ஜூன் 21, 2025 19:18

நீங்கள் நோன்பு கஞ்சி குடிக்கும் இடத்தில்... கிருஸ்துமஸ் கேக் சாப்பிடும் இடத்தில் போய் அரசியல் பேசலாம்..... அவர்கள் அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள் ???


Nagendran,Erode
ஜூன் 22, 2025 19:41

நான் ஒரு இந்து என்ற நீண்ட நெடிய விளக்கவுரை கொடுத்தீங்க இந்தா இப்ப உங்க சாயம் வெளுத்து விட்டது.அப்பத்துக்கு மதம் மாறினால் இது போன்றுதான் இந்துக்களை கேலி பண்ண தூண்டும். அப்புறம் செ அடங்கி கிடப்பீங்க.


theruvasagan
ஜூன் 22, 2025 22:10

நீங்க எதிர்பார்ததது எதுவும் நடக்கலை எல்லாம் அமைதியாக சிறப்பாக நடந்தது. ஆன்மீகச்சூழலில் நடந்த நிகழச்சி. முருக பக்தர்கள் ஒழுக்கத்துடனும் கட்டுப்பாடுடனும் நடப்பவர்கள். பிரியாணியும் குவார்டரும் கொடுத்து கூட்டிவந்த கும்பல் இல்லை. ஜெலுசிலை முழுங்கி்ட்டு.போய்ப்படு. காலைல எழுந்திருக்கும் போது வயித்தெரிச்சல் சரியா போயிடும்.


பேசும் தமிழன்
ஜூன் 21, 2025 13:33

முருக பக்தர்கள்... இந்த ஆட்சியை விரட்டி அடிப்பார்கள்.


venugopal s
ஜூன் 21, 2025 11:41

வருபவர்களுக்கு தமிழே தெரியாது, இந்த லட்சணத்தில் கந்த சஷ்டி கவசம் பாடப் போகிறார்களோ?


suresh guptha
ஜூன் 21, 2025 15:19

WHYU R BOTHERING IF U WANT SING ALLOLIA


ராமகிருஷ்ணன்
ஜூன் 21, 2025 11:37

திமுகவின் இந்து ஓட்டுவங்கி நிச்சயம் சரியும், 200 ரூபாய் ஊபிஸ் புலம்பல் சப்தம் காதுகளுக்கு இனிமை. கதறுங்கடா.


RG GHM
ஜூன் 21, 2025 10:08

குறைந்தது 16 ஆயிரம் வாகனங்கள் வரும். அடையாளம் கண்டு பிடிக்க வேண்டும். பக்தர்கள் தங்கள் பாதுகாப்பு மற்றும் அவசிய தேவைகளை எடுத்து செல்வதும் முக்கியம்.


venkat venkatesh
ஜூன் 21, 2025 10:03

OM Muruga


முருகன்
ஜூன் 21, 2025 09:09

உன்மையில் முருகனுக்காக இந்த மாநாடு நடந்தால் சிறப்பாக இருக்கும் ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக நடப்பது மாதிரி தெரிகிறது


திகழும் ஓவியன்
ஜூன் 21, 2025 12:19

அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள்? மூக்கன் அவர்களே


vivek
ஜூன் 21, 2025 12:48

.அங்கே பிரியாணி அண்டா இல்லையாம். போவியா....


Oviya Vijay
ஜூன் 21, 2025 07:41

மதுரை போலீஸ் ஈகர்லி வெயிட்டிங்... சங்கிகள் பட்டக்ஸ் பத்திரம்...


the தமிழன்
ஜூன் 21, 2025 12:21

ஆர்டிஸ்ட் கதறல் ஆனந்தம். இன்னும் 2000 ஆண்டுக்கு 200 incentive க்கு விசுவாச கதறல் மற்றும் முட்டு குடு


suresh guptha
ஜூன் 21, 2025 15:21

NOT SANGIS BUT FOR ANTI SANATHAN IN 2026 ELECTION BE READY


பெரியசாமி,அறந்தாங்கி
ஜூன் 22, 2025 19:43

ஓவியா உங்க வாய் பத்திரம்... சொல்வது என்னன்னு புரியுதா?


சமீபத்திய செய்தி