உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எனக்கு ரோல் மாடல் ஜெயலலிதா; தே.மு.தி.க., பிரேமலதா பூரிப்பு

எனக்கு ரோல் மாடல் ஜெயலலிதா; தே.மு.தி.க., பிரேமலதா பூரிப்பு

ஓமலுார்: ''அரசியலில் எனக்கு ரோல் மாடல் ஜெயலலிதா,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறினார். தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ், தன் சமூக வலைதள பக்கத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்துடன், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா படத்தை சேர்த்து பதிவிட்டுள்ளார். இது, இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இரண்டு நாள் பயணமாக சேலம் சென்ற தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவிடம், இது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில்:

'அரசியல் ஆளுமை' என்ற விருதை தனியார் நிறுவனம் எனக்கு வழங்கியது. அப்போது, 'தமிழகத்தில் ஆளுமைகளாக இரண்டு பொதுச்செயலர்கள். ஒருவர் ஜெயலலிதா; மற்றொருவர் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா' என கூறினர். இந்த கருத்தையடுத்து, என் படமும், ஜெயலலிதா படமும் இணைந்து இணையத்தில் பரவி வருகிறது. அதை, சுதீஷ் பகிர்ந்துள்ளார். எம்.ஜி.ஆரை மானசீக குருவாக விஜயகாந்த் ஏற்றுக் கொண்டார். 'அரசியலில் எனக்கு ரோல் மாடல் ஜெயலலிதா' என பலமுறை கூறியுள்ளேன். ஒரு எம்.ஜி.ஆர்., ஒரு ஜெயலலிதா, ஒரு கருணாநிதி, ஒரு பிரேமலதா தான்; யாருடைய இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது. 'உள்ளம் தேடி; இல்லம் நாடி' என்ற கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்புக்காக, தமிழகம் முழுதும் வரும் 23 வரை சுற்றுப்பயணம் செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Manaimaran
ஆக 12, 2025 10:00

அந்தம்மா உன்ன மாதிரி பெட்டி வாங்க . இருபுறமும் எப்ப பேசுனாங்க


சாமானியன்
ஆக 12, 2025 06:55

அப்புறம் எதற்கு ஸ்டாலினை பார்த்தீர்கள். முத்து இறப்பிற்கும், ஸ்டாலின் உடல்நிலையை விசாரிக்கவும் போன் போட்டா போதுமே ! ஜெயலலிதா கருணாநிதி சம்பாஷனை போனில் தானே ! நீ கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய. விஜயகாந்த் சத்தியம் பக்கம் நின்றார். போறாத காலம். கட்சியை வளர்க்காமல் போய் சேர்ந்தார்.


எவரகிங
ஆக 12, 2025 06:23

ஓ..... அதனால்தான் தி.மு.க கூட்டணிக்கு ஏங்கி முதல்வரை சநதிச்சீங்களா? வாழ்க


Raj
ஆக 12, 2025 05:30

கட்சியின் பொதுச்செயலர் என்ற முறையில் ஏதாவது ஒன்று சொல்லவேண்டாமா. இல்லையென்றால் கட்சி இருப்பது தெரியாது.