உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க.,வின் ரகசிய திட்டத்தால் கலகலக்கிறது நாம் தமிழர் கட்சி

தி.மு.க.,வின் ரகசிய திட்டத்தால் கலகலக்கிறது நாம் தமிழர் கட்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேற வைத்து, நாம் தமிழர் கட்சியை உடைக்க, தி.மு.க., வியூகம் வகுத்துள்ளது.தொடர் தோல்விகளை சந்தித்தாலும், ஒவ்வொரு தேர்தலிலும், சீமான் கட்சியின் ஓட்டு சதவீதம் அதிகரித்து வருகிறது. வரும் 2026 சட்டசபை தேர்தலில், நடிகர் விஜய் துவக்கி உள்ள த.வெ.க.,வுடன் கூட்டணி வைக்க சீமான் விரும்பினார். தன் எண்ணத்தை பல இடங்களிலும் வெளிப்படையாக தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b6m68zla&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், சீமான் மட்டுமே பேசிவந்த, 'தமிழ் தேசியம்' என்ற அரசியல் கொள்கையை, விஜய் தன் கொள்கையாக அறிவித்தார். கோபம் அடைந்த சீமான், விஜயை வெளிப்படையாக விமர்சிக்க துவங்கினார். அத்துடன் சட்டசபை தேர்தலில், தனித்து போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார்.இது, அவரது கட்சியினரிடம் சோர்வை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு பின், அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் வெளியேறி வருகின்றனர். பல மாவட்டங்களில், கட்சி செயல்பாடு குறைந்துள்ளது.கட்சியில் இருந்து வெளியேறுவோர், சீமான் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதன் பின்னனியில், தி.மு.க., இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரை, சீமான் கடுமையாக விமர்சித்து பேசுகிறார். அரசின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். இது, தி.மு.க., தலைமைக்கு பிடிக்கவில்லை.அதேநேரம், சீமான் மீது நடவடிக்கை எடுத்தால் அவர் வளர்ந்து விடுவாரோ என அஞ்சுகின்றனர். எனவே நாம் தமிழர் கட்சியை மறைமுகமாக உடைக்கும் பணிகள் மாவட்ட அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் நா.த.க.,வில் அதிருப்தியில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து பேசுகின்றனர்.அதன்பின் சீமானுக்கு எதிராக பேட்டி கொடுக்க வைத்து நாம் தமிழர் கட்சியில் இருந்து அவர்களை விலக செய்கின்றனர். ஆனால் அவர்களை தி.மு.க.,வில் சேர்ப்பது கிடையாது. அப்படி சேர்த்தால் விஷயம் வெளிப்படையாக தெரிந்துவிடும் என்பதால் அதை செய்வதில்லை. இவ்வாறு விலகும் மொத்த பேரையும் ஒருங்கிணைத்து, போட்டி நாம் தமிழர் கட்சியை துவக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.நாம் தமிழர் கட்சியை மறைமுகமாக உடைக்கும் பணிகள் மாவட்ட அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 16, 2024 07:08

அதிமுக வுக்கு போகும் வாக்குகளை சிதறடிக்க திமுகவால் இறக்கப்பட்ட கட்சிதான் நாதக ..... ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் பாஜக என்கிற தேசிய கட்சி திமுக எதிர்பாராத அளவு வளர்ந்துள்ளதால் தவெக வையும் திமுக இறக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது ...... ஆழம் பார்த்ததில், நாதகவை விட தவெக இளைஞர்களைக் கவர்வதில் பலம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது ..... ஆகவே இனி நாதகவின் தயவு தேவையில்லை ... அதற்காக செலவு செய்யவேண்டிய அவசியமில்லை ... இதைச்சொன்னால் திமுகவிடம் பலன் பெற்று சுகம் கண்டுவிட்ட சீமான் கேட்கமாட்டார் ..... ஆகவே வேறு வழியில்லாமல் உடைத்துத்தான் அப்புறப்படுத்தணும் .... அதைத்தான் திமுக தற்போது செய்கிறது .......


Velayutham rajeswaran
நவ 16, 2024 11:16

உண்மை சரியான அலசல்


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 16, 2024 15:00

முற்றிலும் உண்மை. நடுவில் கமல்ஹாசனை இறக்கியது திமுக பாஜகவின் வளர்ச்சி தடுக்க அவரால் பெரிய வெற்றி கிட்டவில்லை. அதோடு அதிமுக உள்ளே புகுந்து அதிமுக தோல்விக்கு பாஜக கூட்டணி தான் காரணம் என அதிமுக தலைவர்கள் தொண்டர்களை நம்ப வைத்து கூட்டணி உடைத்தது திமுக. அப்போதும் பாஜக வளர்ச்சி தடுக்க முடியவில்லை. ஆகவே கடைசியாக தவெகவை இறங்கியுள்ளது. இந்த தவெகவும் வரும் சட்ட சபை தேர்தல் அதன் பின்னர் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் கமல்ஹாசன் போல திமுகவில் ஐக்கியம் ஆகிவிடும்.


Haja Kuthubdeen
நவ 16, 2024 18:55

மிக அதிகப்படியான கற்பனை..சீமான் திமுகவை தொடர்ந்து எதிர்த்து வருபவர்.


Smba
நவ 16, 2024 04:34

யாரும் தேவை இல்ல தண்ண த்தானே அழிச்சுக்கு வான் தேறாது கத்த மட்டும் முடியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை