உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருப்பரங்குன்றம் பிரச்னைக்காக தேசிய அளவில் போராட்டம்: ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளுடன் மோகன் பாகவத் ஆலோசனை

திருப்பரங்குன்றம் பிரச்னைக்காக தேசிய அளவில் போராட்டம்: ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளுடன் மோகன் பாகவத் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருப்பரங்குன்றம் பிரச்னைக்காக தேசிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து, தமிழக ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளுடன் அதன் தேசியத் தலைவர் மோகன் பாகவத் ஆலோசனை நடத்தி உள்ளார். திருப்பரங்குன்றம் கோவில் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், தீபம் ஏற்றவிடாமல் தி.மு.க., அரசும், காவல் துறையும் தடுத்துள்ளது. கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சி எம்.பி.,க்கள், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் 'நோட்டீஸ்' கொடுத்துள்ளனர். இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த அதன் தலைவர் மோகன் பாகவத்திடம், இந்த பிரச்னை குறித்து ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர். அப்போது, தேசிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.பின்னர், திருச்சி கூட்டத்தில் பேசிய அவர், “திருப்பரங்குன்றம் பிரச்னையில், ஹிந்து அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ்., உதவியை நாடினால் பரிசீலிப்போம்,” என்றார். இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஹிந்து கோவிலில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய, இண்டி கூட்டணி எம்.பி.,க்கள் 'நோட்டீஸ்' கொடுத்ததையும், பிரியங்கா, அகிலேஷ் உள்ளிட்டோர் சபாநாயகரை நேரில் சந்தித்ததையும், ஆர்.எஸ்.எஸ்., சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க., கட்சிகளின் ஹிந்து விரோதப் போக்கை, நாடு முழுதும் அம்பலப்படுத்த ஆர்.எஸ்.எஸ்., திட்டமிட்டுள்ளது. நாடு முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது; நோட்டீஸில் கையெழுத்திட்ட இண்டி கூட்டணி எம்.பி.,க்களின் வீடுகளை முற்றுகையிடுவது என, பலகட்ட போராட்டங்களை நடத்துவது குறித்து ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
டிச 13, 2025 00:47

பண்டாரம் பரதேசிகளுக்கு வேற வேலை கிடையாது. உரைப் பேனாக்கி பேனைப் பெருச்சாளி ஆக்கி பெருச்சாளியை பெருமாள் ஆக்கி விடுவார்கள்.


Skywalker
டிச 12, 2025 18:40

We have the right to protest, those who are saying what is rss relation with tamilnadu, I ask, what is athiest DMKs relation with Hindu temples?


Barakat Ali
டிச 12, 2025 17:41

நோட்டீஸில் கையெழுத்திட்ட இண்டி கூட்டணி எம்.பி.,க்களின் வீடுகளை முற்றுகையிடுவது .... மக்களவையில் கூச்சல், குழப்பம் செய்து கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள் ...... அதற்காக முற்றுகையிடமாட்டீங்க ????


Barakat Ali
டிச 12, 2025 17:39

இந்த தேசவிரோத திமுகவால் ஹிந்துக்கள் இஸ்லாமியர்களை எதிரிகளாகப் பார்க்கும் அவலம் .......


mohamed kasim nizam mohideen
டிச 12, 2025 17:35

அப்படியா சரிங்கோ


Gowthaman Ks
டிச 12, 2025 16:58

போராட்டம் நடத்த வேண்டும். அதற்க்கு முன்பாக நீதிபதி அளித்த தீர்ப்பினை நிறைவேற்றாத அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.


babu
டிச 12, 2025 15:56

அப்டியே அந்த aiims க்கும் metro க்கும் சேர்த்து போராடுங்கள்


Keshavan.J
டிச 12, 2025 17:06

அப்புறம் நீ பொய் ICU யிலே அட்மிட் ஆயிடு


சிந்தனை
டிச 12, 2025 15:30

ஆர் எஸ் எஸ் உள்ளே வந்தால் தர்காவையும் சேர்த்து தான் ஆராய்ச்சி செய்யச் சொல்லும் யாருக்கு சொந்தம் என்று பார்க்க


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
டிச 13, 2025 00:48

ஆர் எஸ் எஸ் என்று ஆராய்ச்சி செய்திருக்கிறது இடிப்பது தான் அவர்களின் கொள்கை


vbs manian
டிச 12, 2025 13:33

திமு க உறவால் காங்கிரசுக்கு இன்னும் சரிவு ஏற்படும் வடக்கில். கந்தன் கருணை.


ஜெகதீசன்
டிச 12, 2025 10:50

இந்த பிரச்சினையை தமிழக இந்துக்களின் விழிப்புணர்வு மூலம் லோக்கலாகவே சரி பண்ணலாம் என்றும் அகில இந்திய அளவில் கொண்டு செல்ல போவதில்லை என்று மோகன் பகவத் சொல்லியதாகவே அகில இந்திய செய்திகள் வந்துள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை