உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமலாக்கத்துறை குற்றச்சாட்டு எதிரொலி பிறந்த நாள் விழாவை தவிர்க்கும் நேரு

அமலாக்கத்துறை குற்றச்சாட்டு எதிரொலி பிறந்த நாள் விழாவை தவிர்க்கும் நேரு

திருச்சி: திருச்சியில் அமைச்சர் நேரு பிறந்த நாளுக்காக, அவரது படத்துடன் வைக்கப்பட்ட பேனர்கள் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளன. வரும், நவ., 9ம் தேதி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவின் பிறந்த நாள். ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளை, திருச்சி தி.மு.க.,வினர் பிரமாண்டமாக கொண்டாடுவர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4c3us1fw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வழக்கம் போல், இந்த ஆண்டும் நவ., 9ம் தேதி அமைச்சர் நேரு பிறந்த நாளுக்காக, அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் , கட்சி நிர்வாகிகள் சார்பில், திருச்சி மாநகர பகுதியில் பிரமாண்ட பேனர்கள் வைக்கப் பட்டன. அவை, நேற்று முன்தினம் இரவில் அகற்றப்பட்டன. இது குறித்து, திருச்சி தி.மு.க.,வினர் கூறியதாவது: அமலாக்கத் துறையினரால் ஊழல் குற்றச் சாட்டுக்கு ஆளாகி உள்ளதால், அமைச்சர் நேரு அப்செட்டாகி உள்ளார். இந்த சூழலில், பிறந்த நாள் கொண்டாட்டங்களை அவர் விரும்பவில்லை. அதோடு, வரும் 10ல், திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின், திருச்சி வரவுள்ளார். முதல்வர் வரும் வேளையில், தனக்காக பெரிய அளவில் பேனர்கள் வைப்பது, கட்சி தலைமையின் அதிருப்திக்கு உள்ளாகக்கூடும் என்பதால், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வைக்கப்பட்ட பேனர்களை உடனடியாக அகற்ற, அமைச்சர் நேரு கண்டிப்புடன் உத்தரவிட்டு உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையில், அமைச்சர் நேரு நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'நவ., 9ல் நான் திருச்சியில் இருக்க மாட்டேன்; அதனால், எனக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, கட்சியினர், பொதுமக்கள், நலன் விரும்பிகள் என யாரும் என்னை சந்திக்க இல்லத்துக்கோ, அலுவலகத்துக்கோ வர வேண்டாம்' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

மணிமுருகன்
நவ 03, 2025 23:55

நேற்று ஒரு பதிவு படித்தேன் புத்தகக் கண்காட்சி இதை திருச்சியில் நடத்தியவர் கேஎன்நேரு தான் எவ்வளவு கமிஷன் பெற்றார் என்பதை சொல்வாரா


மணிமுருகன்
நவ 03, 2025 23:52

நகராட்சி குடிநீர் வாரிய தேர்வு பணியாளர் ஊழல் வெளி வந்ததை குறிப்பிட்டதற்கு திருச்சி எல்ஐசி காலனியில் குடி இருக்கும் எங்களுக்கு குடி தணணீர் மினரல் நிறுத்தப்பட்டது அந்தளவு அமலாக்கத்துறை அறொக்கையில் உண்மை உள்ளது என்பதே உண்மை


Sun
நவ 03, 2025 17:12

தேர்தலுக்கு முன்னாடி பிறந்த நாள் கொண்டாடி ஒரு வசூலைப் போடலாம்னு பாத்தா இப்புடி அதுலயும் மண்ண அள்ளிப் போட்டுட்டாங்களே?


Anand
நவ 03, 2025 16:21

பிறந்தநாள் ஒரு கேடு.


Anantharaman Srinivasan
நவ 03, 2025 14:57

நவ., 9ல் நான் திருச்சியில் இருக்க மாட்டேன். துரைமுருகன் வேலு ஜகத்ரட்சகனைப் போல் கேஸை அமுக்க டெல்லி சென்று முயல போகிறேன்.


கண்ணன்
நவ 03, 2025 11:13

திருச்சியில் இருக்கமாட்டேன் என்றால…? அதுக்குள்ளே உள்ளே தள்ளிவிடுவார்கள் என்று பயமா?!


duruvasar
நவ 03, 2025 10:28

தவறு. பிறந்த நாள் கொண்டாடினால் வரும் பரிசு தொகையான குறைந்தது 50 கோடி ரூபாய் அழுக்கு நோட்டுகளை துவைத்து பளிச்சிடும் வெண்மை நோட்டுகளாக மாற்றி மக்கள் நல பணியை விரிவுபடுத்தலாம்


VENKATASUBRAMANIAN
நவ 03, 2025 07:57

குற்றம் உள்ள நெஞ்சு போலும். கொள்ளை அடிக்கும்போது தெரியவில்லை


S.L.Narasimman
நவ 03, 2025 07:44

ஆமாம் அன்று மந்திரி ஊரில் இருக்க மாட்டார்.


N Sasikumar Yadhav
நவ 03, 2025 06:42

அமிச்சர் நேரு பணம் கொடுத்து பணியில் சேர்ந்தோர் என அனைவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடமையாக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை