உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழக பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள்?

தமிழக பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள்?

சென்னை: தமிழக அரசின் 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில், முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக சட்டசபை, மார்ச் 14ம் தேதி கூடுகிறது. அன்று, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதுகுறித்து, சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி:மார்ச் 14ம் தேதி காலை, 9:30 மணிக்கு சட்டசபை கூடுகிறது. அன்று, 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தாக்கல் செய்வார். பின் மார்ச் 21ம் தேதி 2025 - 26ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கைகள், 2024 - 25ம் ஆண்டு கூடுதல் செலவினத்திற்கான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும்.சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை, அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும். மார்ச் 14 அன்று அலுவல் ஆய்வு கூட்டம் கூடும். சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்துவது, பகலில் மட்டுமா, மாலையிலும் நடத்துவதா என்பது கூட்டத்தில் முடிவு செய்யப்படும். மாலையில் நடத்த வேண்டாம் என்று பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். எனவே மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. விடுபட்ட மகளிர் அனைவருக்கும், மகளிர் உரிமைத்தொகை வழங்குவது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு, இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்புகள், பட்ஜெட்டில் இடம்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் மார்ச் 15ம் தேதி தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. பட்ஜெட் மீதான விவாதம் நான்கு நாட்கள் நடக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ஆரூர் ரங்
பிப் 19, 2025 22:26

அப்பா வளர்ச்சித் திட்டத்திற்கு 10ஆயிரம் கோடி ரூபாய். சார் வளர்ச்சித் திட்டத்துக்காக 20000 கோடி ஒதுக்கீடு. இதெல்லாம் தேர்தல் அறிக்கை வாக்குறுதியிலேயே இல்லாத திட்டங்கள்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 19, 2025 22:19

இந்தியாவில் 6.8% மும், தமிழ் நாட்டில் 4.2% மும் வறுமைக் கோட்டிற்கு கீழே. நடுத்தர வர்க்கத்தினர் 27.6%. இவர்களுக்கு இலவசம் மிகவும் அவசியம்.


velan ayyangar,Sydney
பிப் 19, 2025 20:43

இருக்கிற 9 லட்சம் கோடி கடனை இலவசத்தை அள்ளி விட்டு 18 லட்சம் கோடி யாக்கி சாதனை புரியும் பட்ஜெட்...


Subburamu Krishnasamy
பிப் 19, 2025 15:48

Ettu suraikai Karikku vuthavathu. Mere announcements will serve no purpose


Kannan Chandran
பிப் 19, 2025 15:11

திட்டங்கள் சரி, அதற்கு வருமானம் எங்கே.., RBI யின் அறிக்கையின் படி ஏற்கனவே ஏறக்குறைய 9 லட்சம் கோடி கடனில் தமிழகம் உள்ளது...,


venugopal s
பிப் 19, 2025 14:31

தமிழக பட்ஜெட் நிச்சயமாக மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை விட நல்லதாக, மக்கள் நலனுக்கானதாக,பாரபட்சமில்லாத ஒன்றாகவே இருக்கும்!


guna
பிப் 19, 2025 16:45

அப்பாவுக்கு ஒரு உருகாய் பாக்கெட் ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 19, 2025 13:14

முதல்வர்: திராவிட மாடல் பட்ஜெட்.... திருமாவளவன்: முன்னேற்றத்துக்கான பட்ஜெட்.... செல்வப் பெருந்தகை : ஏழைகளுக்கான பட்ஜெட்.... வைகோ : பாட்டாளிகளுக்கான பட்ஜெட்.... இ.கம்/வ.கம் : தொழிலாளர்களுக்கான பட்ஜெட்..... தமுமுக : சிறுபான்மையினர்களுக்கான பட்ஜெட்.... தாவெக : ஒன்றிய அரசை விட எவ்வளவோ பராவாயிவ்லை.... உதயாநிதி : மொத்தத்தில் அனைவருக்கான பட்ஜெட்.... கனிமொழி: ஏழை விதவைகளுக்கான பட்ஜெட்.... தயாநிதி : பட்ஜெட் சமஸ்கிருதத்தில் இல்லாமல் அன்னை தமிழில் தந்த ஒப்பற்ற பட்ஜெட்..... சேகர் பாபு : சனாதனத்தை வேரறுக்க வந்த மதசார்பற்ற பட்ஜெட்..... அறிக்கைகள் தயார்.... பட்ஜெட் வெளியான அன்று மாலை வெளியிடப்படும்


Venkidusamy
பிப் 19, 2025 14:25

அருமையான பதிவு வாழ்த்துகள்


Ramesh Sargam
பிப் 19, 2025 12:31

அடுத்தவருடம் தேர்தல். அப்ப பட்ஜெட் எப்படி இருக்கும் என்று நாம் இப்பவே கூறிவிடலாம். எல்லாம் இலவசமயம்தான்.


vijai hindu
பிப் 19, 2025 11:45

மக்களை ஏமாற்றும் பட்ஜெட் எலக்சன் வருதுல்ல


xyzabc
பிப் 19, 2025 11:39

வேஷம், கண் துடைப்பு, ஏமாற்றம், மத்திய அரசை குறை சொல்வது. வேற ஒன்னும் இல்ல. தெரியாதா இந்த திருடர்களை?


சமீபத்திய செய்தி