உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எனக்கு புது ரத்தம் பாய துவங்கியுள்ளது: ராமதாஸ்

எனக்கு புது ரத்தம் பாய துவங்கியுள்ளது: ராமதாஸ்

சென்னை: 'எனக்கு புது ரத்தம் பாயத் துவங்கியுள்ளது; பா.ம.க.,வின் நிகழ்காலமும், எதிர்காலமும் நான் தான்' என, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:

சமூக நீதியின் அடையாளமாகத் திகழும் பா.ம.க., வரும் 16ம் தேதி, 36 ஆண்டுகளை நிறைவு செய்து, 37ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், பா.ம.க., சாதித்தவை ஏராளம். மக்கள் நலன் சார்ந்து, எப்போதும் யாரையும் எதிர்த்து நிற்கிற கட்சியாக பா.ம.க., உள்ளது. தமிழக அரசியலின் திசையை தீர்மானிக்கும் சக்தி, பா.ம.க., என்பதை காலம் பதிவு செய்துள்ளது. என் வாழ்நாளில், 95,000 கிராமங்களுக்கு நடந்தே சென்றிருக்கிறேன். பா.ம.க., நிர்வாகிகள் குறைந்தது 95 கிராமங்களுக்கு நேரில் சென்று, மக்களை சந்திக்க வேண்டும். அரசியல் ரீதியாக மட்டுமல்ல; சட்ட ரீதியாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும், திரளான மக்கள் வாயிலாகவும் எனக்கு போராடத் தெரியும்.பல போராட்டப் பாதைகளை உருவாக்கிய நான், புதுப் பாதையை உருவாக்கி, மக்களுக்காக போராடுவேன். எப்போதும் போல துடிப்புடன், ஒவ்வொருவரின் குரல்களையும் நான் உள்வாங்கி கொண்டு தான் இருக்கிறேன்.இதுவரை நாம் கடந்து வந்த 36 ஆண்டுகளை விட, இந்த 37-ம் ஆண்டு பல புதிய அனுபவங்களை தந்துள்ளது. முன்பை விட புதிய உற்சாகத்துடன், புதிய எழுச்சியுடன், எந்த போராட்டத்திற்கும் தயாராக இருக்கிறேன். இனி பா.ம.க.,வுக்கு பொற்காலம் தான். தொண்டர்களின் உற்சாகக் குரலே என்னை புதுப்பிக்கிறது; உற்சாகப்படுத்துகிறது; இன்னும் போராடச் சொல்கிறது; எதிரே எத்தனை பேர் என்று கணக்கு வைத்துக் கொள்ளாமல் மோதிப் பார்க்கச் சொல்கிறது; எதிர்க்க, இளைஞர்களை மட்டுமே மனசு எதிர்பார்க்கிறது; இத்தனை தெம்பும், தினவும் தொண்டர்களின் அரவணைப்பு தான் கொடுக்கிறது. தொண்டர்களின் நெடுநாள் கனவை நிறைவேற்ற, எனக்குள் புது ரத்தம் பாயத் துவங்கியுள்ளது. அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, சந்தேகமோ பா.ம.க.,வினருக்கு தேவையில்லை. பா.ம.க.,வின் நிகழ்காலமும், எதிர்காலமும் நான் தான். போர் குணமுள்ள சிங்கத்தின் கால்களும் பழுதுபடாது; அதன் சீற்றமும் குறையாது; மக்களுக்காக கொடுக்கும் அதன் கர்ஜனையும் மாறாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஜூலை 13, 2025 20:21

ரத்தம் பாயக்கூடாது. அதேபோல மெதுவாகவும் செல்லக்கூடாது. ஒன்று high blood pressure, மற்றொன்று low blood pressure. ரெண்டும் சரியில்லை. ரத்தம் எப்பொழுதும் பாயாமல் நிதானமாக செல்லவேண்டும்.


krishnan
ஜூலை 13, 2025 19:50

ஒரு காலத்தில், உங்கள் அறிக்கைகள் அறிவு சார்ந்து இருந்தது உங்கள் சுயநலத்தால், சுய லாபத்தால், விளைந்த சாபத்தால், போராடும், போராட்டம்


S Balakrishnan
ஜூலை 13, 2025 16:30

36 வருடத்தில் 95,000 ஆயிரம் கிராமங்களை கடந்து மரம் வெட்டி மனித உயிர்கள் போக காரணமாக இருந்து சொத்து சேர்த்து உன் மக்களுக்கு பிரித்து கொடுப்பதில் ஏற்பட்ட தகராறை தீர்க்க முடியாமல் தொண்டர்களை நடுத் தெருவில் அலைய விட்டது தான் மிச்சம். அடச்சீ... நீயெல்லாம்........


SP
ஜூலை 13, 2025 10:52

அதே சிங்கம் வயதானால் என்ன ஆகும் என்பதும் தெரிந்து கொள்வது நல்லது.


kr
ஜூலை 13, 2025 07:17

If not for any thing else, he can be an inspiration for all senior citizens. Don't think you are old and retired. You can still do what you were doing 40 years back


சி.முருகன்.
ஜூலை 13, 2025 04:47

ரொம்ப பாய்ந்து விட்டால் ஆபத்து. மரத்த வெட்டிப்போட்டு தடுப்பு கட்டு.


முக்கிய வீடியோ