உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இனி, திருட ஏதுமில்லை என்பதால் உடல் உறுப்புகளை திருடுகிறது தி.மு.க.,; பழனிசாமி

இனி, திருட ஏதுமில்லை என்பதால் உடல் உறுப்புகளை திருடுகிறது தி.மு.க.,; பழனிசாமி

கோவை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் மாரியம்மன் கோவில் மைதானத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசியதாவது: வரும் சட்டசபை தேர்தலில், 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என, ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். கூட்டணி பலமாக இருக்கலாம். ஆனால், அ.தி.மு.க., கூட்டணி மக்களுடன் உள்ளது.

மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய அரசுதான் இருக்க வேண்டும். தி.மு.க., எப்போது ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் செய்வதே முதல் பணி. இது, கருணாநிதி காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. ஊழல் இல்லாத துறையே இல்லை. விவசாயிகள் விரோத அரசாக உள்ளது. விவசாயிகள், அவர்கள் நிலத்தின் மண்ணை எடுத்ததற்கு வழக்கு போடப்பட்டுள்ளது. விவசாய பொருட்களுக்கு உரிய விலையை விவசாயிகள் கேட்கின்றனர். அதைக்கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், 'அந்த சார் யார்?' என்பது தெரியும். விவசாயம் குறித்து மாரத்தான் ஓடும் மந்திரிக்கு தெரியுமா? மா.சுப்பிரமணியன் துறையில் ஏராளமான ஊழல்கள் நடக்கின்றன. அனைத்தையும் திருடி விட்டனர். இனி, திருட ஒன்றும் இல்லை என, மக்கள் உறுப்புகளை திருடத் துவங்கி விட்டனர். வறுமைதான் கொடுமை. அதை பயன்படுத்தி ஏழைகளை கொடுமைப்படுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட கேவலமான அரசு தான், தி.மு.க., அரசு. தமிழகத்தில், 6,000 மதுக்கடைகள் உள்ளன. அவற்றின் மூலம், நான்கு ஆண்டுகளில், 22,000 கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். யாரெல்லாம் தி.மு.க., ஆட்சியில் முறைகேட்டில் ஈடுபட்டார்களோ, அவர்கள் மீது அ.தி.மு.க., ஆட்சியில், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மின்கட்டணம், 67 சதவீதம் உயர்ந்துள்ளது. வீட்டு வரி 100 சதவீதம், குடிநீருக்கு வரி கடுமையாக உயர்ந்துள்ளது. குப்பைக்கு வரி போட்ட அரசு தி.மு.க., அரசு. கிராமப்புற, ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை, அ.தி.மு.க., அரசு நனவாக்கியுள்ளது. திறமையான மாணவர்களை உருவாக்குவோம். அ.தி.மு.க., அரசு அமைந்ததும் மெட்ரோ ரயில் திட்டம் கோவை, மதுரையிலும் செயல்படுத்தப்படும். துணை ஜனாதிபதி தேர்தலில், தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். இது, தமிழக மக்களுக்கு கிடைத்த பெருமை. கொங்கு மண்டலம் என்றாலே அதற்கு ஒரு பெருமை உண்டு. இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

M Ramachandran
செப் 10, 2025 21:48

200 ஊபீஸு களுக்கு ஒரு மிட்டாய்ய்ய இரண்டாக பிளக்க முயற்சியை உபயம் விடியலின் புத்தி கூர்மை.


M Ramachandran
செப் 10, 2025 21:45

200 ஊபேசுதவியுடன் அதையும் உருவாமல் இருக்க மாட்டார்கள்.


M Ramachandran
செப் 10, 2025 21:44

கடைய்யசியாக திருட கோமணம் பாக்கியிருக்கு.


Anu Sekhar
செப் 10, 2025 19:17

பாம்பின் கால் பாம்பு அறியும் . ஒரு திருடன் இன்னொரு திருடனை சாடுவது.


C.anandakumar
செப் 10, 2025 18:30

எடப்பாடிக்கு மனநோய் பாதித்து விட்டது 2026 மே மாதத்திற்குப் பின்னர் கண்டிப்பாக ஏர்வாடி தான்


C.anandakumar
செப் 10, 2025 18:28

அட வாய்க்கு வந்ததை எல்லாம் மனசாட்சி இல்லாமப் பேசறீங்களே... நீங்க எல்லாம் எப்படி முதலமைச்சரா இருந்தீங்களோ...


Premanathan S
செப் 10, 2025 13:53

எல்லா திராவிடர்களும் திருடர்கள் தான் 1967 முதல் திருட்டு தொடர்கிறது இப்போது இவர்களுடன் சேர்ந்து மக்களும் திருட ஆரம்பித்து திருடுவது தவறில்லை மாட்டாமல் திருட வேண்டும் என்று நியாயம் கற்பிக்கும் அளவிற்கு வந்து விட்டார்கள்


pakalavan
செப் 10, 2025 12:33

போன ஆட்சில நீ்ங்க எல்லாத்துயும் திருடிட்டீங்க,


raja
செப் 10, 2025 14:27

அதனால் தான இந்த திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளையர் விடியல் தருவார்னு அவர் சொன்ன பொய்யை நம்பி கொண்டாந்தோம் அவங்க நாவது எங்களின் சொத்துக்களை திருடினாங்க ஆனா இந்த திருட்டு மாடல் கோவால் புற கட்சி காரணுவோ சொத்தையும் திருடி கிட்னியையும் திருடு கிரானுவோ என்று தமிழன் கேட்கிறான் கொத்தடிமையே....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை