உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இரவிலும் இயங்கும் கல்குவாரியால் அபாயம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

இரவிலும் இயங்கும் கல்குவாரியால் அபாயம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டியில் விதிகளை மீறி இரவிலும் இயங்கும் கல் குவாரிகளை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் விபத்து அபாயம் உள்ளது.இங்குள்ள வகுத்து மலையை ஒட்டிய வண்ணாத்தி கரட்டில் செயல்படும் கல் குவாரி இரவு, பகலாக விதிமுறைகளை மீறி இயங்குகிறது. இது சட்டவிரோதம் மட்டுமின்றி, விதிகளை மீறுவதால் விபத்துகள், உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.இரவில் 3க்கும் மேற்பட்ட பொக்லைன்கள் மணல் அள்ளும் இயந்திரங்கள், லாரிகள் வாகன வெளிச்சத்தில் மலை உச்சியில் இருந்து இயக்கப்படுகின்றன.கல் குவாரிகள், கிரஷர்கள் காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே வேலை செய்ய வேண்டும். இப்பகுதி மலையில் காட்டு எருமை, பன்றி, மான், முயல்கள் வசித்தன. இங்கு அமையும் வாடிப்பட்டி, தாமரைப்பட்டி 'அவுட்டர் ரிங்' ரோட்டை கடந்து ஒரு மலையில் இருந்து மற்றொரு மலைக்கு செல்ல தமிழகத்தில் முதல் 'அனிமல் பாஸ் ஓவர்' பாலம் கட்டப்பட்டுள்ளது. கல்குவாரி, கிரஷர் சத்தங்களால் வன விலங்குகள் இப்பகுதிக்கு வருவதில்லை. விபத்து, உயிரிழப்பு ஏற்பட்ட பின் ஆய்வு செய்யாமல், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ram
மே 19, 2025 15:56

நூறு தலைமுறைக்கு மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சேர்த்து வைத்த இந்த திராவிட கும்பலுக்கு இன்னும் பணம் பணம் என்று பேயாக alliyuthu. இருக்கும் குளம் குட்டை எரி மலை என்று எதையும் விட்டு வைக்க வில்லை இந்த நான்கு வருட ஆட்சியில். மக்களை சொல்லணும் இது போல ஆட்களுக்கு வோட்டு போட்டு ஆட்சி அதிகாரத்தை கொடுத்ததுக்கு.


GS kumar
மே 19, 2025 11:44

இயற்கை வளங்களை சீர்கேடு செய்கின்றோம் , அழிக்கின்றோம், விலங்குகளை சித்ரவதை செய்தால் பீட்டா இருக்கு, ஆனால் பல தலைமுறை வாழவேண்டிய பூமியில் இருக்கும் இயற்கை வளங்களை அழிக்கின்றனர் இந்த சுயநல அரசியல் வாதிகள், இதை கண்டிக்க யாரும் கிடையாது , இவர்கள் செய்யும் காரியங்களால் அடுத்த தலைமுறை மக்கள் வாழ வழியே இல்லாமல் போகும், மக்கள் சிந்திக்க வேண்டும் , இதை தடுக்க வேண்டும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 19, 2025 09:08

கண்டு கொள்ளாமல் இருப்பது தான் அதிகாரிகள் பணி. எவ்வளவு நேரம் இயங்குகிறது எவ்வளவு அள்ளப்படுகிறது என்ற கணக்கு மட்டுமே அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். மற்றவை அதற்குண்டான ஆட்கள் பார்த்து கொள்ளுவார்கள். இதெல்லாம் சரியாக உள்ளதா என்று பார்ப்பது தான் கலெக்டர் வேலை. அவர் பெயர் என்ன கலெக்டர் எல்லாம் கலெக்ட் மேலிடத்துக்கு அனுப்புவதால் தான் அவர் கலெக்டர் என அன்புடன் காரணப்பெயரோடு அழைக்கப்படுகிறார். தமிழகத்தில் கலெக்டர் வேலை பார்க்க தேசிய அளவில் கடும் போட்டி நிலவுகிறது.


Anonymous
மே 19, 2025 05:59

இதையெல்லாம் கவனிக்க நம்ம முதல்வருக்கு நேரம் ஏது? ஜனாதிபதியை எதிர்க்க ஆள் சேர்ப்பதில் சார் ரொம்ப பிசி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை