உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் படலம்; மாசு கட்டுப்பாட்டு வாரியம் மவுனம் சாதிப்பது ஏன்?

எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் படலம்; மாசு கட்டுப்பாட்டு வாரியம் மவுனம் சாதிப்பது ஏன்?

எண்ணுார்: ஆறும் கடலும் இணையும் இடமான முகத்துவாரம் மற்றும் கழிமுக பரவல் பகுதி, மீன், இறால், நண்டு உள்ளிட்ட மீன்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவான இடமாகும்.அந்த வகையில், எண்ணுார் முகத்துவாரம் பகுதியை சார்ந்து நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், எண்ணுார் குப்பம், முகத்துவார குப்பம், காட்டுகுப்பம், சிவன்படை வீதிகுப்பம் உட்பட எட்டு மீனவ கிராமங்களைச் சேர்ந்த, 10,000க்கும் மேற்பட்ட மக்கள், மீன்பிடித்து வருகின்றனர்.இந்த நிலையில், 2023ம் ஆண்டு, 'மிக்ஜாம்' புயலின் போது துவங்கி பகிங்ஹாம் கால்வாய் வழியாக, வெளியேறும் மஞ்சள் நிற ரசாயன கழிவு மற்றும் எண்ணெய் கழிவுகள், முகத்துவாரம் மற்றும் கழிமுக பரவல் முழுதும் பரவி, நீர்வளத்தை கடுமையாக பாதிக்கிறது.எண்ணெய் படலம் படர்வதால், அலையாத்தி காடுகள், மீன்கள் இனப்பெருக்கம் முற்றிலுமாக பாதித்துள்ளது. இதனால், முகத்துவாரத்தை நம்பியிருக்கும், எட்டு மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிறது.இந்த நிலையில், இரு நாட்களுக்கு முன் துவங்கி, நேற்று மூன்றாவது நாளாக, முகத்துவாரம் முழுதும் எண்ணெய் படலம் பரவியுள்ளது. இது குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முற்படும்போது, யாரும் போனை எடுப்பதில்லை. எடுத்தாலும், சரியான பதிலளிப்பதில்லை.இதை அப்படியே கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டால், எண்ணுார் முகத்துவாரத்தில் மீன்வளம் முற்றிலுமாக அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாசு கட்டுப்பாட்டு வாரியம் கவனித்து, எண்ணெய் பிரச்னைக்கு காரணம் கண்டறிய வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சேகர்
ஜூன் 15, 2025 10:47

மா.சு. வையே கட்டுபடுத்த முடியவில்லை. மாசுவை எப்படி கட்டுப்படுத்துவார்கள்


Ramkumar Ramanathan
ஜூன் 15, 2025 10:09

pollution control board officials doing nothing, waste of exchequer money


எஸ்.சிங்காரம், சின்னசேலம்
ஜூன் 15, 2025 10:07

கடந்த முறை வெல்லம் வந்த போதும் இதே போன்ற பிரச்சினைகளை உண்டாக்கினார்கள். ஆயில் கடலில் கொட்டுபவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை