உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஒரே நாடு; ஒரே தேர்தல் முறை பொருளாதார ரீதியாக நல்ல முடிவு: சொல்கிறார் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

ஒரே நாடு; ஒரே தேர்தல் முறை பொருளாதார ரீதியாக நல்ல முடிவு: சொல்கிறார் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

''ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை, தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது என சொல்லி விட முடியாது. இங்குள்ள சிலர் வரவேற்றும் உள்ளனர்,'' என, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.நம் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி: டில்லியில் தேர்தல் ஆணையராக நான் இருந்தபோது, மன்மோகன் சிங் என்னை பார்க்க கட்சியினர் சிலருடன் வந்தார்; அவ்வளவு எளிமையானவர். தனக்கென பதவி உள்ளது என்பதை எப்போதும் காட்டிக் கொள்ள மாட்டார். அவரிடம் ஆவணங்களில் கையெழுத்து வாங்கும்போது எழுந்து நின்றபடி தான் கையெழுத்திடுவார். சிலரின் செயல்கள் பிடிக்கவில்லை எனில் நேரடியாக சொல்லி விடுவார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n0rcchfd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிபாரிசு போன்ற விஷயங்களில் தலையிடுவது கிடையாது. 1991ல் பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த நம் நாட்டை மீட்க, புதுப்பது வழிகளை கடைப்பிடித்தார். இதனால், உலகளவில் இந்தியாவின் தோற்றம் நன்றாக வளர்ந்தது. தேர்தல் ஆணையரால் தனிப்பட்ட முறையில், எந்த முடிவும் எடுக்க முடியாது. ஆனால், சில கட்சிகளை மட்டும், தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை என்பது போல பேசுகின்றனர்.ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை, தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது என சொல்லி விட முடியாது. இங்குள்ள சிலர் வரவேற்றும் உள்ளனர். காலப்போக்கில் இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டு விட்டது. அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றினால், இதை சாத்தியப்படுத்த முடியும்; எனவே மாற்ற வேண்டும். தனியாக ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது; அரசியல் தான் முடிவு செய்ய வேண்டும்.நிர்வாக மற்றும் பொருளாதார ரீதியாக பார்த்தால், இது நல்ல முடிவு. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏழு முதல் எட்டு தேர்தலாவது நடக்கிறது. இது தேர்தல் ஆணையத்துக்கு சவால்களை தருகிறது. அரசு மற்றும் கட்சிகளுக்கும் கூட இது சவால் தான். தேர்தல் வந்து விட்டால், கட்சிகள், ஒரு பக்கம் செலவு செய்ய வேண்டும். பிரசாரத்தில் வன்முறையும் ஏற்படுகிறது. அதை மாற்ற, ஒரே நாடு; ஒரே தேர்தல் நல்ல வழி. எனவே, அரசியல் கட்சிகள் இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டால், நடைமுறைக்கு சாத்தியம் அதிகம்.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்கான செலவும் அரசுக்கு அதிகரித்து வருகிறது. ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தில் ஒரே நேரத்தில் ஓட்டெடுப்பு நடத்த முடியாது என்ற கருத்தில், எனக்கு உடன்பாடில்லை. தேர்தல் எண்ணிக்கையை குறைக்க, ஒரே நாடு; ஒரே தேர்தல் முறை முக்கியம்.இந்தியாவில் பிரிட்டன் முறையை பின்பற்றியே தேர்தல் நடக்கிறது. பிரிட்டன் சிஸ்டத்தை பின்பற்றுவதற்கு பதில், புது சிஸ்டத்தை நாம் கடைப்பிடித்தால் புது வழி கிடைக்கும். ஒரே நாடு தேர்தல் முறை சாத்தியமாக கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம். தேர்தல் விதிமுறைகளிலும் சில சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சம்ப
டிச 31, 2024 18:55

பிற்காலத்தில் உனக்கு ஒரு பதவி உண்டு


அப்பாவி
டிச 31, 2024 17:41

பேசான 25 வருஷத்துக்கு ஒரு தடவைதான் தேர்தல்னு வெச்சுருங்க. நாலு தேர்தல் செலவு மிச்சமாகும். ஆளுக்கு பாஞ்சிலட்சம் போட்டுரலாம்.


ஆரூர் ரங்
டிச 31, 2024 11:13

370 ஆம் பிரிவு நீக்கம், ஒரேநேர முத்தலாக் தடைச் சட்டம், மின்னணு பணப்பரிமாற்றம் போன்றவையெல்லாம் சாத்தியம் என்று பத்தாண்டுகளுக்கு முன்பு நினைத்துக் கூட பார்த்திருக்கமுடியாது. அதுபோலத்தான் இதுவும் ஒருநாள் நடக்கும். நடத்த வைக்க முடியும்.


Rajan
டிச 31, 2024 10:41

ஒரு மாநில தேர்தலையே ஒரே நாளில் நடத்தமுடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலை எட்டு கட்டங்களாக நடத்தறாங்க. இவர்களால் எப்படி எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் நடத்த முடியும்.


jack
டிச 31, 2024 17:08

don't be negative...this is not Congress rule.....this is Modi rule...he will do it...you need to wait and see......


அப்பாவி
டிச 31, 2024 09:10

ஒரே நாடு ஒரே தேர்தல். ஒரே நாடு. ஒரே பண்டிகை. ஒரே நாடு ஒரே பேங்க். ஒரே நாடு ஒரே கவருமெண்ட். எல்லாம் ஒண்ணே ஒண்ணு வெச்சிருங்க. மூத்த செலவு இல்லாம நாடே சுபிட்சமாயிடும்.


ghee
டிச 31, 2024 10:01

எங்களுக்கும் எண்டர்டெயின்மெண்ட் நீ மட்டும் போதும். கோவாலா... நீ தான் எங்களுக்கு பெஸ்ட் காமெடி.பீஸ்


Chakkaravarthi Sk
டிச 31, 2024 08:32

இவர் வெறும் தேர்தல் செலவைப் பற்றி பொருளாதாரம் பேசுகிறார். தேர்தல் நடத்தை. விதிகள் அமலில் இருக்கும் அத்தனை மாதங்களிலும் எந்த பொருளாதார நடவடிக்கைகளும் சுணக்கம். வேண்டும் என்றால் தேர்தல் செலவுகள் என்ற பெயரில் பொருளாதார சுழற்சி இருக்கலாம். நன்றாக யோசித்தால் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாங்கும் செலவு ஒரே முறை, ஆனால் செலவு தான். ஆனால் மொத்த ஆண்டில் சரியான காலத்தை பயன்படுத்தி இந்த முறை கொண்டு வந்தால், ஆசிரியர்களாக, அரசு ஊழியர்கள், பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் போன்று அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய படிகள் மற்றும் பணி செய்வதற்கான ஊதியத்தை சரியான நேரத்தில் தடையில்லாமல் தேர்தல் ஆணையமே செய்யவேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரே முறை, மூன்று அல்லது நான்கு மாதங்களில் மொத்தமும் முடிந்து வஎதுவோ ல் நிச்சயம் நல்லது தான். மக்களுக்கு நாட்டுக்கு நல்லது எதுவோ அதை செய்ய மனமில்லை என்றால் இந்த எதிர்ப்பாளர்கள் என்ன செய்வார்கள் என்பது புரியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை