வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இலவசமாக கொடுத்தால் யார் வேண்டாம் என்று சொல்வார்கள்
விற்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் இலவசமாக யானையைக் கொடுத்தால் ஒப்புக்கொள்வார்களா?
ஹ ரியானா மாநிலம் ஜஜ்ஜர் மாவட்டத்தைச் சேர்ந்த மைன்பால் தில்லா, 45, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் குற்றவாளி. இவர் மீது, 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கம்போடியாவில் சில காலம் தலைமறைவாக இருந்த தில்லா, அந்த நாட்டுப்பெண் ஒருவருடன் காதல் கொண்டார். இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன. மாமியாருக்கு சபாஷ்!
உ .பி., முசாபர்நகரில் மகன் இறந்ததால் விதவையான, 31 வயது மருமகளுக்கு திருமணம் செய்து வைத்த மாமியாரின் செயல், வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. பனியில் உருவான விநாயகர்; பக்கெட் தண்ணீரில் விசர்ஜனம்
ப னி படர்ந்த அன்டார்டிகா கண்டத்தில் ஆய்வுக்கு சென்றுள்ள இந்திய விஞ்ஞானிகள், அங்கு விநாயகர் சதுர்த்தி விழா நடத்திய நிகழ்வு, வலைதளங்களில் பரவி வருகிறது. பனியை கொண்டு உருவாக்கிய விநாயகர் சிலைக்கு பூஜை செய்து, தீபாராதனை காட்டி விஞ்ஞானிகள் வழிபட்டனர். விசர்ஜனம், இன்னும் சிறப்பாக இருந்தது. கரைப்பதற்கு பதிலாக பனி விநாயகரை ஆய்வு நிலையத்தில் தண்ணீர் இருக்கும் பக்கெட்டில் வைத்து விட்டனர். நேரம் செல்லச்செல்ல அந்த விநாயகர் சிலை, அப்படியே கரைந்து தண்ணீராகி விட்டது. ஆளுக்கு ஒரு ஐபோன்; அள்ளிக்கொடுத்த நிறுவனம்
மே ற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் மனித வள நிறுவனம் நடத்தும் இந்தியர் நிஷாத் ஹூசேன், தன் ஊழியர்களுக்கு ஆளுக்கு ஒரு கிப்ட் பாக்ஸ் பரிசளித்தார். அதில், பாதி பேருக்கு ஐபோன் இருந்தது; மீதி பேருக்கு சாக்லேட் தான் இருந்தது. அப்போது அங்கு வந்த நிறுவன உரிமையாளரின் மனைவி ஹசீனா, சாக்லேட் கிடைத்தவர்களுக்கும் ஐபோன் வழங்கி, அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார். 'ஊழியர்களின் அர்ப்பணிப்பு, நேர்மறையான மனப்பான்மை, கூட்டு வலிமை ஆகியவற்றிலிருந்தே உண்மையான வெற்றி கிடைக்கிறது என்று நான் நம்புகிறேன். நாம் முன்னேறிச் செல்வதில் ஒவ்வொரு முயற்சியும், ஒவ்வொரு யோசனையும், ஒவ்வொரு பங்களிப்பும் முக்கிய பங்காற்றுகின்றன. நமது ஊழியர்களே நமது பலம்' என்ற ஹசீனாவை, வலைதளவாசிகள் மனதார பாராட்டுகின்றனர். ஜப்பான் கிரிக்கெட் அணியில் இந்தியர் அபிஷேக் ஆனந்த்
பீ ஹாரில் பிறந்த அபிஷேக் ஆனந்துக்கு, இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், படிப்பும், காலமும் அவரை திசை மாற்றி அனுப்பி விட்டன.
இலவசமாக கொடுத்தால் யார் வேண்டாம் என்று சொல்வார்கள்
விற்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் இலவசமாக யானையைக் கொடுத்தால் ஒப்புக்கொள்வார்களா?