உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலர்: த.வெ.க.,

25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலர்: த.வெ.க.,

சென்னை : ' தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின், மக்கள் சந்திப்பு பயணத்திற்கு முன், 25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலரை நியமிக்க வேண்டும்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த், மாவட்ட செயலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். செப்., 15ல், விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை துவக்க உள்ளார். இதற்காக, பல்வேறு வசதிகளுடன் கூடிய, நவீன பிரசார வேன் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வேனில், கேரவனில் உள்ள அனைத்து வசதிகளும் இடம் பெற்றுள்ளன. மக்கள் சந்திப்பின் போது, பிரசார வேனை தொண்டர்கள் நெருங்காமல் இருக்க, இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. வேனில் நான்குபுறமும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாகனம் தயாரான நிலையில், கட்சியினரும் தயாராக கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. தற்போது, கட்சியில் அமைப்பு ரீதியாக, ஒன்றியத்திற்கு ஒரு செயலர் உள்ள நிலையில், 25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலர் நியமிக்கும்படி, மாவட்டச்செயலர்களுக்கு, கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். கட்சியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் ஒன்றிய செயலர்களை நியமிக்கும் பணிகளும் துவக்கப்பட்டுள்ளன. மக்கள் சந்திப்பு பயணத்தை விஜய் துவக்குவதற்கு முன்பாக, ஒன்றிய செயலர் நியமனத்தை முடிக்க வேண்டும் என கட்சித் தலைமை உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பாரத புதல்வன்
செப் 01, 2025 15:44

மொத்தமே அவ்வளவு ஓட்டு தான் கிடைக்கும்.


நாஞ்சில் நாடோடி
செப் 01, 2025 13:13

ஒரு வார்டுக்கு ஒரு மாவட்டசெயலாளர் நியமித்து பணி செய்தால் 2026 ல் ஆட்சி த வெ க கையில். விஜய் மெயின் முதல்வர் புஸ்ஸி ஆனந்த் துணை முதல்வர்...


vee srikanth
செப் 01, 2025 11:10

சுற்றிலும் வழவழப்பு எண்ணெய் தடவப்படுமா


saravan
செப் 01, 2025 10:47

இது பெரிய விஷயமே இல்ல ஜோசேப்பு...


புரொடஸ்ட்ப்ளாகர்
செப் 01, 2025 08:50

படித்து வேலை கிடைக்காத பட்டதாரிகளுக்கு மாத சம்பளம் கொடுத்து நியமனம் செய் புஸ்ஸி ஜோசப் விஜய்.


VENKATASUBRAMANIAN
செப் 01, 2025 08:21

பாவம் எழுதி கொடுத்ததை படிக்கிறார். உண்மை நிலை புரியவே இல்லை. சினிமா வசனம் பேசுகிறார். ஆக்கப்பூர்வமாக எதையும் பேசுவதில்லை. திமுகவின் கார்பன் காப்பி.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
செப் 01, 2025 05:20

நல்ல காமெடி. மொதல்ல உன் கட்சியின் கொள்கை என்ன? கொள்கை ஏதும் உண்டா? இல்லை கொள்ளை அடிப்பது மட்டுமா?


Raj
செப் 01, 2025 07:39

Tvk forever


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை