உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மது பெட்டிக்கு ரூ.50 கமிஷன் வழங்கியது அம்பலம்; ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்க முயற்சி

மது பெட்டிக்கு ரூ.50 கமிஷன் வழங்கியது அம்பலம்; ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்க முயற்சி

சென்னை : மதுபான ஆலை உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் நடத்திய சோதனையின் வாயிலாக, பல ஆண்டுகளாக ஆட்சியாளர்களுக்கு, ஒரு மது பெட்டிக்கு, 50 ரூபாய் கமிஷன் வழங்கியது, அமலாக்கத் துறை சோதனையில் அம்பலமாகி உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் முயற்சியாகவே, இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iju8mbfh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இதுகுறித்து, டாஸ்மாக் வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் வாயிலாக, 2003ல் இருந்து நேரடியாக மதுபான சில்லரை விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இதனால், அரசுக்கு அதிக வரி வருவாய் கிடைக்கிறது. அதை பயன்படுத்தி, இலவச திட்டங்கள் துவக்கப்பட்டன. ஆரம்பத்தில் எந்த நிறுவனத்தின் மது வகைகள் அதிகம் விற்பனையாகிறதோ, அதனிடம் இருந்து, அதிக மது வகைகள் கொள்முதல் செய்யப்பட்டன. பின், எந்த கட்சி ஆட்சியில் உள்ளதோ, அந்த கட்சிக்கு வேண்டிய நிறுவனங்களிடம் இருந்து, அதிக மது வகைகள் வாங்கப்பட்டன. இதில், 90 மி.லி., 'குவார்ட்டர்' மது பாட்டிலுக்கு, 20 - 25 ரூபாய் செலவாகிறது. அதன் மேல் விதிக்கப்படும் வரி உள்ளிட்ட செலவுகளால், 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே தான், பீர் உட்பட அனைத்து மது தயாரிப்பு செலவுக்கும் பொருந்தும். ஒரு பெட்டியில், 48 குவார்ட்டர் பாட்டிலும், பீர் பெட்டியில் 12ம் இருக்கும். டாஸ்மாக் கொள்முதல் செய்யும், ஒவ்வொரு மதுபான பெட்டிக்கும், தலா 40 - 50 ரூபாய் ஆட்சியாளர்களுக்கு கமிஷனாக வழங்கப்படுகிறது. கடந்த 2017ல் இருந்து, கட்சி ஆதரவு நிறுவனத்திடம் அதிக கொள்முதல் என்ற நிலை மாறியது. ஒரு பெட்டிக்கு நிர்ணயம் செய்துள்ள பணத்தை, எந்த நிறுவனம் கமிஷனாக வழங்குகிறதோ, அதனிடம் இருந்தே அதிக மது வகைகள் வாங்கப்பட்டன. இன்று வரை இதே நிலை தொடர்கிறது. வேறு எந்த துறையில் இருந்தும், உடனுக்குடன் இவ்வளவு தொகை கமிஷனாக கிடைப்பதில்லை. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய, மது பெட்டியால் கிடைக்கும் கமிஷனை கட்சியினர் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதுதொடர்பாக, அமலாக்க துறைக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையிலேயே சோதனை நடந்துள்ளது. தற்போது, சோதனை நடந்த நிறுவனங்களிடம் இருந்து தான், கடந்த எட்டு ஆண்டுகளில், டாஸ்மாக் அதிக மது வகைகள் கொள்முதல் செய்திருப்பதும், ஒரு பெட்டிக்கு, 50 ரூபாயை கமிஷனாக, அந்த நிறுவனங்கள் வழங்கி இருப்பதும் அம்பலமாகி உள்ளது. வரும் சட்டசபை தேர்தல் சமயத்தில், வாக்காளர்களுக்கு கட்சியினர் ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்கும் முயற்சியாகவும், இந்த சோதனை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மாதம் ரூ.40 கோடி

டாஸ்மாக் மதுபான கடைகளில், தினமும் சராசரியாக 1.50 லட்சம் பெட்டி மது வகைகள்; 60,000 பெட்டி பீர் வகைகள் விற்கப்படுகின்றன. மாதத்திற்கு இரண்டும் சேர்த்து, 80 லட்சம் பெட்டிகள் விற்பனையாகின்றன. இது, வார மற்றும் விசேஷ விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது. ஒரு பெட்டிக்கு, 50 ரூபாய் கமிஷன் என்றால், மாதம் 40 கோடி ரூபாய் கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Anand samydurai
மார் 12, 2025 13:27

நமக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் எல்லாவற்றையுமே இந்த அரசியல்வாதிகள் எடுத்துக் கொண்டு செல்கிறார்கள்.. இவர்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது.. ஒரு சாலையாவது சரியா இருக்கா, விலைவாசி குறையவே இல்ல, சம்பாதிக்கும் பணத்தை தாண்டி செலவாகிறது, மக்கள் தான் விழித்துக் கொள்ள வேண்டும்... நம்ம மக்கள் எல்லாம் சரியான முட்டாப் பயலுக.. இவ்வளவு ஊழல் பண்றவனெல்லாம் திரும்ப திரும்ப எப்படி ஆட்சிக்கு வருகிறார்கள் என்று தெரியவில்லை... விழித்துக் கொள்ளுங்கள் மக்களே...


gopala krishnan
மார் 12, 2025 10:43

இது போக... ஒவ்வொரு கம்பெனியின் விற்பனை பிரதிநிதிகள் ....அவனுக்கு அதிகாரிகள் என அனைவரிடமும் இப்போது பணியில் உள்ள மற்றும் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக வேலை பார்த்த பணியில் இல்லாத இவர்களை விசாரிக்கும் போது மற்ற அனைத்து கணக்கில் வராத அனைத்து அதாவது மறைமுகமாக நடந்த மற்றும் நடக்கின்ற மற்றும் நடக்கபோகின்ற ஊழல்கள் அனைத்தும் கண்டிப்பாக வெளியேவரும் ..... பூனைக்கு யார் மணி கட்டுவது .....


bhagya Raj
மார் 12, 2025 07:10

அயோக்கிய பசங்கள


vijai hindu
மார் 12, 2025 00:00

டேய் பணம் பணம் அலையிறீங்களே டா நீங்க சுடுகாடு போகும் போது போகும் போது உன் பணத்தை வைத்து புதைக்க போறாங்க


Raj
மார் 11, 2025 22:42

அதிக கமிஷன் தரும் நிறுவனமா. நிறுவனத்துக்கு ஓனரே ஆளும் கட்சி எம் பிங்க தானே. அப்ப கமிஷன் யாருக்கு கொடுக்கனும். ஓஹோ அவருக்கா. இல்லன்னா அடுத்த எலெக்ஷன்ல சீட்டு கெடைக்காதே.


Udayasuryan
மார் 11, 2025 18:43

டாஸ்மாக்கை மூடிவிட்டு தனியார்வசம் ஒப்படைக்கவேண்டும் தவறு செய்தவர்கள் தண்டிக்கபட வேண்டும் மீண்டும் அரசு டாஸ்மாக்கை எடுத்தால் மெகா ஊழல் நடக்கும் மது தரமில்லாததால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுவதால் மூடு விழா நடத்த வேண்டும்.


Tetra
மார் 11, 2025 18:03

என்று தணியும் இந்த டாஸ்மாக் தாகம். என்று மடியும் இந்த த்ராவிட மோகம்


Tetra
மார் 11, 2025 18:03

என்று தணியும் இந்த டாஸ்மாக் தாகம்


Tetra
மார் 11, 2025 18:03

என்று தணியும் இந்த டாஸ்மாக் தாகம்


Tetra
மார் 11, 2025 18:03

என்று தணியும் இந்த டாஸ்மாக் தாகம். என்று மடியும் இந்த த்ராவிட மாயம்


சமீபத்திய செய்தி