உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க. ஆட்சியில் ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடு; பழனிசாமி குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடு; பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: ''தி.மு.க., ஆட்சியில், இதுவரை தமிழகத்துக்கு 60,000 கோடி ரூபாய்தான் முதலீடு வந்துள்ளது'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டினார். தலைமைச் செயலக வளாகத்தில், அவர் அளித்த பேட்டி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தில், தயாரிக்கப்பட்ட, இருமல் மருந்து குடித்து, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 26 குழந்தைகள்இறந்தனர். இந்நிறுவனத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழக மருத்துவத்துறை, ஆய்வு மேற்கொள்ளவில்லை. அரசின் அலட்சியம் காரணமாக, 26 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அதேபோல, சிறுநீரக முறைகேடு தொடர்பாக, தமிழக அரசிடம், எழுப்பிய கேள்விகளுக்கு, முறையான பதில் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில், இடைத்தரகர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை. தி.மு.க.,- எம்.எல்.ஏ.வுக்கு, சொந்தமான மருத்துவமனைஎன்பதால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில், மத்திய திட்டங்கள் நிதியாக, 2016 - 21ம் ஆண்டில், ஒரு லட்சத்து 18,245 கோடி ரூபாய் பெறப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் ஒரு லட்சத்து 42,499 கோடி ரூபாய்பெறப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் ஐந்து ஆண்டுகளில், 2 லட்சத்து 51,835 கோடி ரூபாய்; தி.மு.க ஆட்சியில் 3 லட்சத்து 75,272 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் வருவாய் அதிகம்; அதே நேரம் கடனும் அதிகம். ஆனால், திட்டம் ஒன்றும் இல்லை. 'பாக்ஸ்கான்' நிறுவனம், தமிழகத்தில், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக, அமைச்சர் ராஜா தெரிவித்தார். அந்நிறுவனம் அவ்வாறு முதலீடு செய்யவில்லை எனக் கூறியுள்ளது. இது குறித்து கேட்டால், பாக்ஸ்கான் துணை நிறுவனங்களில், ஒரு நிறுவனம் முதலீடு செய்திருப்பதாக, அமைச்சர் கூறுகிறார். அந்த நிறுவனம் எது என்பதை, வெளிப்படையாக தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின், ஜெர்மனி நாட்டிற்கு செல்லும்போது, 'தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன; 10 லட்சத்து 62,000 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது' என்றார். தமிழகத்தில் இதுவரை, தி.மு.க ஆட்சியில் 60,000 கோடி ரூபாய்தான் முதலீடு வந்துள்ளதாக, மத்திய அரசிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

'உருட்டு கடை அல்வா'

சட்டசபை கூட்டத் தொடரில், எதிர்க்கட்சியான அ.தி.மு.க., உறுப்பினர்கள், தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து, வித்தியாசமான போராட்டங்களை முன்னெடுத்தது. 'கிட்னி' ஜாக்கிரதை என்ற வாசகத்துடன், 'பேட்ஜ்' அணிந்து வந்தனர். இந்நிலையில் நேற்று, தமிழக அரசை விமர்சிக்கும் வகையில், 'உருட்டு கடை அல்வா' என, ஒரு பாக்கெட் கொண்டு வந்தனர். தி.மு.க.வின் கொடியில் உள்ள கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட, அந்த பாக்கெட்டில், 'உருட்டு கடை அல்வா' , நீட் தேர்வு ரத்து, மாதாந்திர 'மின் கட்டண உயர்வு' என குறிப்பிடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

மணிமுருகன்
அக் 18, 2025 22:53

அருமை


Ramesh Sargam
அக் 18, 2025 10:04

அந்த ரூ. 60 ஆயிரம் கோடி முதலீட்டிலும் அதிகம் முதலீடு டாஸ்மாக் உட்பத்தியில்தான்.


சி.முருகன்.
அக் 18, 2025 09:00

போங்க வேற வேலையில்லை