'கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் எக்காரணம் கொண்டும் நடிகர் விஜயை விமர்சிக்கக் கூடாது' என, அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் இ.பி.எஸ்., பேசிய தகவல் வெளியாகி இருக்கிறது.அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. அதில், பழனிசாமி பேசியுள்ளதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y2sfjhbh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ஜ., தரப்பில் நம்மை நிர்பந்தப்படுத்தியும், பயமுறுத்தியும் கூட்டணிக்கு அழைத்துச் சென்றது போன்ற தகவலை, தி.மு.க.,வும், கூட்டணி கட்சிகளும் பரப்புகின்றன. இதன் வாயிலாக, நம் தொண்டர்கள் மத்தியில், பா.ஜ., மீதான வெறுப்பை அதிகப்படுத்தலாம் என்ற கெட்ட நோக்கம் தான் காரணம். காலத்தின் கட்டாயம்
தி.மு.க.,வினரின் திட்டமிட்ட பிரசாரத்துக்கு நம் கட்சியினர் இலக்காகி, பா.ஜ., மீது எவ்வித சந்தேகமும், அதிருப்தியும் கொள்ள வேண்டியதில்லை. கடந்த உள்ளாட்சி தேர்தல் நடக்கும்போதே, பா.ஜ., தரப்பில் நம்மோடு கூட்டணி அமைக்க விரும்பினர். அன்றைக்கு இருந்த சூழ்நிலையில், நாம்தான் அதை வேண்டாம் என தள்ளி வைத்தோம். அதன்பின், அரசியலில் சூழல்கள் மாறிவிட்டன. தற்போது பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் கைகோர்த்தே ஆக வேண்டிய சூழல் உருவாகி விட்டது. அதற்கு முன், நிறைய யோசித்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இரு தரப்பும் கூட்டணி சேர வேண்டியது காலத்தின் கட்டாயம். பா.ஜ., இல்லாத சூழ்நிலையில், சிறுபான்மையின ஓட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், நம் எண்ணமும் இலக்கும் வெற்றி பெறவில்லை. அதனால், அந்த நிலையிலிருந்து நாம் பின்வாங்கி விட்டதாக அர்த்தமல்ல. பா.ஜ.,வுடன் இருந்தாலும், என்றைக்கும் அ.தி.மு.க., சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். இதை சிறுபான்மையின மக்களிடம் நாம் தொடர்ந்து எடுத்து சொல்ல வேண்டும். சிதைவு இல்லை
அதேபோல, எனக்கு தெரிந்த வரையில், பா.ஜ.,வும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரானது அல்ல. எந்த இடத்திலும் அம்மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், அவர்கள் எதையும் செய்ததில்லை. இந்த விஷயங்களை, இரு கட்சிகளை சேர்ந்தோரும், சிறுபான்மையின மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அதை அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதேநேரம், கடந்த தேர்தலில் சிறுபான்மையின மக்கள் நலனுக்காக, தி.மு.க., தரப்பு அறிவித்த எதையுமே நிறைவேற்றிக் கொடுக்கவில்லை என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டும். தி.மு.க., கூட்டணியில் இதுவரை எவ்வித சிதைவும் இல்லை. திருமாவளவனை தங்கள் பக்கம் அழைத்துச் சென்று, வலுவான கூட்டணி கட்டமைக்க விரும்பிய நடிகர் விஜய் முயற்சி எடுபடாமல் போய் விட்டது. இப்போதிருக்கும் சூழ்நிலையில், தி.மு.க., கூட்டணியில் இருந்து, வி.சி., வெளியே வருவதற்கான வாய்ப்பில்லை. அப்படி இருக்கையில், தி.மு.க., தலைமையிலான வலுவான கூட்டணியை எதிர்த்து, அ.தி.மு.க., - பா.ஜ., போட்டியிட்டாக வேண்டும். இப்போது, அ.தி.மு.க., தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணியால், முழுமையாக அதை சாதிக்க முடியுமா என்ற சந்தேகம், நம் கட்சியிலேயே பலருக்கும் வருகிறது. அதனால், தற்போது அமைந்திருக்கும் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், மேலும் பல கட்சிகளை இணைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கடும் நடவடிக்கை
விஜயின் த.வெ.க., உள்ளிட்ட பல கட்சிகளையும் இணைத்து, தி.மு.க.,வுக்கு எதிரான வலுவான கூட்டணியை கட்டமைத்து, தேர்தலை சந்திக்கவே அ.தி.மு.க., தரப்பில் விரும்புகிறோம். களத்தில் அதற்கான முயற்சிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதனால், விஜய் உள்ளிட்ட கூட்டணியில் சேர வாய்ப்புள்ள எந்த கட்சி மீதும், அ.தி.மு.க., தலைவர்களும், நிர்வாகிகளும் எந்தக் கருத்தையும் சொல்லக்கூடாது. தனிப்பட்ட முறையில் விஜய் குறித்து, எந்த விமர்சனமும் செய்யக்கூடாது. கட்சியினர் யார் என்ன பேசினாலும், அது எனக்கு வந்து சேரும் என்பதை, ஒவ்வொருவரும் மனதில் வைத்து செயல்பட வேண்டும். விரும்பத்தகாத நிகழ்வு என்றால், தலைமையில் இருந்து கடும் நடவடிக்கை உண்டு.இவ்வாறு பழனிசாமி பேசியுள்ளதாக தெரிகிறது. - நமது நிருபர் -