உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / புற்றுநோய் பயாப்ஸி ஊசியில்  சென்சார் கோவை அரசு கல்லுாரிக்கு காப்புரிமை

புற்றுநோய் பயாப்ஸி ஊசியில்  சென்சார் கோவை அரசு கல்லுாரிக்கு காப்புரிமை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: புற்றுநோய் கண்டறிவதற்கான பயாப்ஸ் ஊசியால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி, புதிய வடிவமைப்பை உருவாக்கியுள்ளது.கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில், அறிவுசார் சொத்துரிமை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில், மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, புற்றுநோயை கண்டறிவதற்கான பயாப்சி ஊசி வடிவமைப்பில், சென்சார் பயன்படுத்தி, 'பயாப்ஸி கன்' எனும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இதற்கு, காப்புரிமையும் பெற்றுள்ளனர்.

கல்லுாரியின் அறிவுசார் சொத்துரிமை மைய ஒருங்கிணைப்பாளர் சேகர் கூறியதாவது:

உடலில் புற்றுநோய் இருப்பதை உறுதி செய்ய, கட்டியில் இருந்து திசுக்கள் சேகரிக்கப்பட்டு, அவை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். திசு சேகரிப்புக்கு நீண்ட ஊசி பயன்படுத்தப்படும். இந்த ஊசியை, தொடை போன்ற பகுதிகளில் செலுத்தும் போது, அது எலும்புகளை சேதப்படுத்தும். இதனால் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.இதற்கு தீர்வு காண திட்டமிட்டோம். சென்சார்கள் பொருத்தி, கட்டி இருக்கும் இடத்தை துல்லியமாக கணக்கிட்டு ஊசியை செலுத்தி, திசு சேகரிப்பதற்கான புதிய நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். இதற்கு 'பயாப்ஸி கன்' எனப் பெயரிட்டுள்ளோம். காப்புரிமை சட்டப்படி, இதற்கான வடிவமைப்பை பதிவு செய்தோம். காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Oru Indiyan
அக் 01, 2024 20:58

மிக சிறந்த கண்டுபிடிப்பு. வாழ்த்துக்கள் கோவை


RAMAKRISHNAN NATESAN
அக் 01, 2024 10:27

நீடில் பயாப்சி என்கிற பெயரில் இதே தொழில்நுட்பம் மூன்று ஆண்டுகளாக அமெரிக்காவில் பிரபலம் ..... உங்களுக்கு காப்புரிமை கொடுத்தது அமெரிக்க வாழ் திராவிட மாடலாக இருக்கலாம் ....


Varadarajan Nagarajan
அக் 01, 2024 07:48

இதை கண்டுபிடித்த மாணவர்களுக்கும் அவர்களை ஊக்குவித்து வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். மாற்றம் மற்றும் முன்னேற்றம் என்பது நாம் செய்துகொண்டுள்ள ஒவ்வொரு செயலிலும் சாத்தியமே. ஏற்கனவே கொடிய வியாதியால் மன உளைச்சலில் இருக்கும் நோயாளிக்கு செய்யப்படும் பரிசோதனைமுறையால் மேலும் பக்கவிளைவு என்பது மிகுந்த மனவேதனை அளிக்கும். இதை மிகவும் உணர்வுபூர்வமாக அணுகி மாற்றுவழியை கண்டுபிடித்த மாணவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அவர்களது கண்டுபிடிப்புகள் மேன்மேலும் தொடர்ந்து சாதனைகள் பல புரிய வேண்டுகின்றேன்


A Viswanathan
அக் 01, 2024 16:49

congratulations to each and every one.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை