வாசகர்கள் கருத்துகள் ( 3 )
முச்சந்தியில் நிறுத்தி சாட்டையடி அடியுங்கள் என்று சொன்னவர் ராம்தாஸ். இப்ப என்ன சொல்லுவார்
சந்திரபாபுநாயுடு மாதிரி கட்சியை takeover பண்ண வேண்டும் அன்புமணி.
தே மு தி க வில் பிரேமலதா வந்தபிறகு கட்சியின் நிலைமை என்னவாயிற்று
திண்டிவனம்: அன்புமணிக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு, வரும் 31ம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால், தன் மகள் ஸ்ரீ காந்திமதியை செயல் தலைவராக்க, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். பா.ம.க.,வில் அப்பா -- மகன் இடையே மோதல் முடிவுக்கு வராத நிலையில், ராமதாஸ், அன்புமணி இருவரும் தனித்தனியாக பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, 'நானே தலைவர்' என, தீர்மானம் நிறைவேற்றினர். கடந்த 17ம் தேதி, ராமதாஸ் நடத்திய சிறப்பு பொதுக்குழுவில், அன்புமணி மீது, 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு விளக்கம் கேட்டு, அஞ்சல் வாயிலாக அன்புமணிக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இந்நிலையில், பா.ம.க., ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பிய நோட்டீசுக்கு, வரும் 31ம் தேதிக்குள், அன்புமணி பதில் அளிக்காவிட்டால், அடுத்தடுத்து அதிரடிகளை அரங்கேற்ற ராமதாஸ் உறுதியாக இருக்கிறார். ராமதாஸ் ஆதரவாளர்கள் கூறியதாவது:
கட்சி பிளவுபட்டால், கொடி, சின்னத்துக்கு பிரச்னை ஏற்படும் என்பதால், ராமதாஸ் அமைதியாக இருந்தார். அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட வாய்ப்பில்லை என தெரிந்ததும் அதிரடியாக முடிவெடுக்கிறார். அதையடுத்தே, மாநில செயற்குழு, பூம்புகார் மகளிர் மாநாடு, பொதுக்குழு கூட்டங்களில், தன் மூத்த மகள் ஸ்ரீ காந்திமதியை மேடையேற்றினார். அடுத்ததாக வரும் 31ம் தேதிக்குள், 16 குற்றச்சாட்டுகளுடன் அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு, அன்புமணி பதிலளிக்காவிட்டால், செயல் தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்படுவார். அந்த பதவியில் மகள் ஸ்ரீ காந்திமதியை நியமிக்க, ராமதாஸ் முடிவு செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முச்சந்தியில் நிறுத்தி சாட்டையடி அடியுங்கள் என்று சொன்னவர் ராம்தாஸ். இப்ப என்ன சொல்லுவார்
சந்திரபாபுநாயுடு மாதிரி கட்சியை takeover பண்ண வேண்டும் அன்புமணி.
தே மு தி க வில் பிரேமலதா வந்தபிறகு கட்சியின் நிலைமை என்னவாயிற்று