உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பயங்கரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை: வியாபாரிகளுக்கு போலீஸ் வலை!

பயங்கரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை: வியாபாரிகளுக்கு போலீஸ் வலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில், பயங்கரவாதிகளுக்கு வெடி மருந்துகள் விற்ற வியாபாரிகளை, பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.ஆந்திர மாநிலத்தில், 30 ஆண்டாக பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், 59; முகமது அலி, 48 ஆகியோரை, இம்மாதம், 1ம் தேதி, தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில், அபுபக்கர் சித்திக்கை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.போலீசாரிடம் அபுபக்கர் சித்திக் அளித்துள்ள வாக்குமூலம்: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் என் கூட்டாளிகள் உள்ளனர். அவர்கள் வெடிமருந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தான் எங்களுக்கு வெடிமருந்து சப்ளை செய்து வருகின்றனர்.நான் ஆந்திராவில் இருந்து, இரண்டு முறை தமிழகம் வந்து, இளையான்குடியில், 100 கிலோ வெடி மருந்துகளை வாங்கி சென்றுள்ளேன். கோவை மற்றும் திருப்பூருக்கும் சென்று, என் கூட்டாளிகளுக்கு வெடிகுண்டுகள் தயாரிப்பது தொடர்பாக பயிற்சி அளித்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.மேலும், இளையான்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், வெடி மருந்து விற்பனையில் ஈடுபட்டவர் விபரங்களை, அபுபக்கர் சித்திக் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படடையில், வெடி மருந்து வியாபாரிகளை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

மூவரிடம் விசாரணை

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்தது தொடர்பாக, மூன்று பேரை காவலில் எடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து உள்ளனர். தமிழகத்தில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்தது தொடர்பாக, திண்டுக்கல் ராஜா அகமது, 45; பாலவாக்கம் ேஷக் தாவுது, 36; கோவை அபு ஹனிபா, 44 ஆகியோரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.இவர்களை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். விசாரணை நிறைவு பெற இன்னும் ஒரு நாள் இருக்கும் நிலையில், முன்னதாகவே நேற்று முன்தினம் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் மீண்டும் அடைத்துள்ளனர்.என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறுகையில், 'ராஜா அகமது உள்ளிட்ட மூவரும், தமிழகம் முழுதும் சென்று, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் இவர்களின் கூட்டாளிகளும் சிக்குவர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஜூலை 26, 2025 22:48

இதுபோன்ற குற்றங்கள் ஒரு சில அரசியல்வாதிகளுக்கும், ஒரு சில போலீஸ் அதிகாரிகளுக்கும் தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை. யார் அந்த அரசியல்வாதிகள்? யார் அந்த போலீஸ் அதிகாரிகள்? கிழிஞ்சது போங்க... யார் அந்த சார்? இதற்கே இன்றுவரை பதில் இல்லை.


A P
ஜூலை 26, 2025 21:13

என்னைப் போலவும் உங்களைப்போலவும் பல பேருக்கு இவன் சத்யராஜ் போல இருக்கிறான் என்றே தோன்றியிருக்கும் .


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 26, 2025 19:35

நடிகர் சத்தியராஜூக்கு குல்லா போட்ட மாதிரி இருக்கு....!!!


Rajalakshmi
ஜூலை 26, 2025 14:21

"மூளை சலவை" என excuse தேட வேண்டாம். இவர்களுக்கு வாழ்க்கையின் குறிக்கோளே இதுதான்.


Mohanakrishnan
ஜூலை 26, 2025 14:08

திராவிட மாடலில் இவர்கள் பெயர் பாரதி சேனல்களில் அபிராமன் என்று மாற்றுமொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது