உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கள்ள நோட்டு அச்சடித்த வி.சி., நிர்வாகி ஓட்டம்; வேறொரு வழக்கை விசாரிக்க சென்ற போலீசார் அதிர்ச்சி

கள்ள நோட்டு அச்சடித்த வி.சி., நிர்வாகி ஓட்டம்; வேறொரு வழக்கை விசாரிக்க சென்ற போலீசார் அதிர்ச்சி

ராமநத்தம் : ராமநத்தம் அருகேவீட்டில் கள்ள நோட்டு அச்சடித்த கும்பலில் இருவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய வி.சி., கட்சி நிர்வாகியை தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், 40; வி.சி., கட்சி கடலுார் மேற்கு மாவட்ட பொருளாளர். இவருக்கும், ஆவட்டியை சேர்ந்த சங்கர், 32 என்பவருக்கும் முன்விரோதவழக்கு ராமநத்தம் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளது. இதுதொடர்பாக விசாரிக்க,நேற்று காலை, 5:15 மணிக்கு செல்வம் வீட்டிற்கு ராமநத்தம் போலீசார் சென்றனர்.அங்கு செல்வம் இல்லாததால், வயலில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்த செல்வம் மற்றும் ஒரு கும்பல் தப்பியோடியது. சந்தேகமடைந்த போலீசார், அந்த வீட்டை சோதனை செய்தனர். அங்கு, கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் இயந்திரம், துப்பாக்கி, போலீஸ் சீருடை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, செல்வத்தின் வயலில் உள்ள வீட்டிற்கு வந்த ஒருவரையும், அதர்நத்தம் வீட்டிற்கு வந்த மற்றொருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.அவர்கள், திட்டக்குடி, ஆலத்துார் நவீன்ராஜா, 29, அதர்நத்தம் கார்த்திகேயன், 28, என்பதும், இருவரும் இரண்டு ஆண்டுகளாக செல்வத்திடம் கார் டிரைவராக வேலை செய்ததும் தெரிய வந்தது.அவர்களிடம், 85,000 ரூபாய் கள்ள நோட்டுகள், நான்கு வாக்கி டாக்கி, இரு ஏர்கன், லேப்டாப், போலீஸ் சீருடை, ரிசர்வ் வங்கி முத்திரை, கார், லாரிகள், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். நவீன்ராஜ், கார்த்திகேயன் இருவரையும் கைது செய்து, செல்வம் உட்பட 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட எஸ்.பி., ஜெயகுமார் கூறுகையில், ''தப்பியோடிய செல்வத்தை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.

கட்சியில் இருந்து நீக்கம்

கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் தலைமறைவான வி.சி., கட்சி மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம், கட்சியின் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மாவட்டச்செயலர் திராவிடமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Nandakumar Naidu.
ஏப் 01, 2025 17:37

யார் வீட்டில் தேடலாம்?


vijai hindu
ஏப் 01, 2025 16:00

பிளாஸ்டிக் சேர் கொடுத்து பெரிய விஷயம் அப்படியும் இப்படித்தான் இருக்கானுங்க இவன்களை வளர்த்து விட்டது திமுக தான்


vijai hindu
ஏப் 01, 2025 10:59

இந்த கூட்டத்தை வளர்த்து விட்டதே திமுக தான் இவன்களை நம்பி முதல்வர் பதவி கேக்குறாங்க


anonymous
ஏப் 01, 2025 10:36

அடித்த பணத்தில் கமிஷன் கிடைத்திருக்காது ஆகவே நடவடிக்கை.


ஆரூர் ரங்
ஏப் 01, 2025 09:33

ஒவ்வொரு கட்சி உறுப்பினர் மீதும் குறைந்தபட்சம் 10 கிரிமினல் கேசாவது இருக்க வேண்டும் என்று திருமா அறிவுறுத்தினார். ஆக இவர் நல்ல தொண்டர்தான்


nv
ஏப் 01, 2025 07:01

இந்தக் கட்சியில் பெரும்பாலானவர்கள் இப்படி பட்ட குற்றம் புரிபவர்கள் தான். அப்படி இருந்தால் ம‌ட்டுமே இந்த கட்சியில் இடம் கிடைக்கும்! இவர்கள் வாசகமும் இதைத்தான் அறிவுறுத்துகிறது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை