வாசகர்கள் கருத்துகள் ( 16 )
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. பிறப்புக்கு முன்? இறப்புக்கு பின்? யாரும் கண்டதில்லை. பிறப்புக்கு ஒரு நிமிடம் முன் வரை மனித வயிற்றில் தான் பிறக்கப் போகிறோமா என்பதற்குக் கூட எந்த உத்திரவாதமும் இல்லை. பிறப்பை நிர்ணயிப்பது நீ என்றால் எங்காவது அம்பானி அதானி போன்ற குடும்பங்களை தேர்ந்தெடுக்கலாமே? இதையெல்லாம் நிர்ணயிப்பவனுக்கு மனித குலம் என்றல்ல எந்த உயிரினத்திடையேயும் பேதம் இல்லை.
"ஆணவ கொலையை தடுக்க தனி சட்டம்" தனி சட்டம் வேண்டுமா ? பெற்ற பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்த்தால் போதும் செல் போனால் சீரழியும் அடுத்த தலைமுறைக்கு தான் தனிச்சட்டம் வேண்டும் கொள்ளையடித்து கொலை ,பலாத்கார கொலை , கள்ளக்காதல் கொலை, கூலிப்படை கொலை இதெற்கெல்லாம் தனி தனி சட்டம் கேட்பார்களா , இல்லை இதெல்லாம் சகஜம் என்று விட்டு விடுவார்களா ?
இருகின்ற சட்டத்தை வைத்துக்கொண்டே அடங்கமறு அத்துமீறு என்று சொல்லி படிக்க வேண்டிய வயதில் தருதலைகளாக திரிந்து காவலர்களையும் ஆசிரியர்களையும் அரிவாள் கொண்டு தாங்க துணிகின்றனர் இதில் இன்னொரு சட்டம்?வெளங்கிவிடும்
வசதியற்ற இரு பிரிவினர் காதல் கண்டு கொள்ளப்படுவதில்லை .வசதியுள்ள ஒருவரை உள்நோக்கதோடு பழகுவதால் தான் பிரச்சனை
சாதி பிரச்சினை ஒழிக்க வேண்டும் என்றால் சாதி ரீதியான இட ஒதுக்கீடு முற்றிலும் தடை செய்ய வேண்டும். பொருளாதார ரீதியில் ஆன இட ஒதுக்கீடுகள் தரப்பட வேண்டும். அரசே இது உயர் ஜாதி இது தாழ்ந்த ஜாதி என்று மக்கள் மனதில் உயர்வு தாழ்வு மனப்பான்மையை விதைத்து விட்டு இப்போது ஆணவக்கொலை என்று கூறுவது எப்படி சரியாகும். மக்களை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று வகைப் படுத்தி விட்டு எப்படி சமத்துவம் எதிர் பார்க்க முடியும். அரசு சொல்லும் ஒரு உயர் ஜாதி ஆணோ அல்லது பெண்ணோ அரசு சொல்லும் தாழ்ந்த ஜாதி பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தாழ்ந்த ஜாதி அங்கீகாரம் பெற்று இட ஒதுக்கீடுகள் பெறுகிறார்கள். இது மறுபடியும் தாழ்ந்த ஜாதி மக்கள் தொகையே அல்லவா ஊக்குவிக்கும். பின்னர் எப்படி தாழ்ந்த ஜாதியினரை ஊக்குவித்து உயர் ஜாதி அந்தஸ்திற்கு கொண்டு வரமுடியும். ஆகவே இட ஒதுக்கீடுகள் சாதிகள் அடிப்படையில் இருப்பதை ஒழித்து விட்டு பொருளாதார அடிப்படையில் கொண்டு வந்து மாணவர்கள் மக்கள் இடையே ஒரு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கினால் தான் சமதர்ம சமுதாயத்தை கொண்டு வர முடியும்.
ஜாதிகளை, ஜாதி உணர்ச்சிகளை தூண்டி தங்கள் ஓட்டுக்காக அரசியல் செய்வதே அரசியல்வியாதிகள் தான்.. ஒன்றுக்கும் உதவாத, படிக்காமல் விடலையாக சுற்றி தெரிந்துகொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு பைக், ஜீன்ஸ், டி-ஷர்ட், ஷூஸ், கூலிங் கிளாஸ் எல்லாம் வாங்கி குடுத்து, பணம் படைத்த வீட்டு பெண்களை குறிவைப்பதை தொழிலாகவே செய்து வரும் நபர்கள் யார் , அவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றங்களில் துணை நிற்பவர்கள் யார் என்பதை உற்று கவனித்துப்பாருங்கள்.. இரண்டாவது, தறுதலைகள், தறுதலைகளுக்காக எடுக்கும் சினிமா.... ஒரு வேளை சோற்றுக்கு சம்பாரிக்க வாக்கு இல்லாதவனை ஹீரோவாக காண்பித்து இளைஞர்களை நாசம் செய்தது தறுதலை இயக்குனர்கள் எடுத்த தறுதலை நடிகர்கள் காசு வாங்கிக்கொண்டு நடித்த சினிமா. அரசியல்வியாதிகளின் அரசியலும், சினிமாவும், அநியாய வழியில் குவியும் பணமும்தான் மக்கள் வாழ்க்கையை புரட்டிபோடுகிறது.. இப்படி நடத்தும் / நடக்கும் காதல் பல குடும்பங்களை தற்கொலை நிலைமைக்கு தள்ளி இருக்கிறது.. வெளியில் தெரிவது கூட இல்லை.. ஆன்மீக பூமியாக இருந்ததை ... அந்த மண்.. இந்த மண்.. என்று சொல்லி சொல்லி.. 60 வருடங்களில் இளைஞர்களை நாசம் செய்தது இந்த மண்..
இது soriyaar மண். இங்கு சாதி ஒழிக்க பட்டுள்ளது. இங்கு கொலை செய்தவர் mbc. ஆனால் இன்னும் இங்கு ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும்தான் சாதி பிரிவினை பிரச்சனை க்கு காரணம் என்பது போல அரசியல் நடக்கிறது. பிறகு எப்படி சாதி ஒழியும்
மேலும் இது "பெரியார் மண்" ஆயிற்றே.
முதலில் சட்டத்தையும், அதை பொருட்படுத்தாமல் அத்துமீறுபவர்களையும் அதற்கு ஜாதி அடிப்படையில் வக்காலத்து வாங்கிக்கொண்டு வரும் அரசியல் வியாபாரிகளே குற்றம் செய்பவர்களுக்கு சட்டம் காவல் துறையும், நீதி அரசரும் இருக்கும் பட்சத்தில் என்ன செய்யவேண்டும் எதை செய்யவேண்டும் என்பதினை அரசியல் வியாபாரிகள் சொல்ல தேவை இல்லை, உங்களின் தலையீடு குற்றம் செய்பவர்களுக்கு துணை நிற்காமல் இருந்தாலே போதுமானது உங்களின் தலையீடு இருந்தால் அது மென்மேலும் குற்றச்செயலுக்கு வழி வகுக்கும் தவிர குற்றச்செயல்கள் குறையாது.
நல்லா சம்பாரிக்கிற பசங்களா பார்த்து லவ் என்ற போர்வையில் பழகி ஊர் ஊராய் சுற்றி உல்லாசமாய் இருந்து விட்டு பிரச்சனை என்றவுடன் காதலிக்கவில்லை, நண்பராக பழகினோம் என்று கழட்டி விடுவதற்கு பெயரும் நாடக காதலே