உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் இழுபறி! மஹாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நீடிப்பு

அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் இழுபறி! மஹாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நீடிப்பு

மும்பை: லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், மஹாராஷ்டிரா அரசியலில் தொகுதிப் பங்கீட்டில் ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகளுக்கு இடையே உரிய முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடிக்கிறது. லோக்சபா தேர்தலுக்கான தேதிகள் அடுத்த ஒரு சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளன. நாடு முழுதும் உள்ள அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன. மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., -- தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்ய முடியாமல் அரசியல் கட்சி கள் திணறி வருகின்றன.

அதிர்ச்சி

இங்கு மொத்தமுள்ள 48 லோக்சபா தொகுதிகளில், 32ல் போட்டியிட பா.ஜ., முடிவு செய்துள்ளது. கூட்டணியில் உள்ள சிவசேனாவுக்கு எட்டு தொகுதிகளையும், தேசியவாத காங்கிரசுக்கு நான்கு தொகுதிகளையும் வழங்க அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. மும்பையில் உள்ள ஆறு தொகுதிகளில், ஐந்தில் போட்டியிட முடிவு செய்துள்ள பா.ஜ., ஒரு இடத்தை ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கு, பாலிவுட் பிரபலங்களை களமிறக்க அக்கட்சி திட்டமிட்டுஉள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான தொகுதியை எதிர்பார்த்த நிலையில், மிகவும் குறைந்த தொகுதிகளை பா.ஜ., ஒதுக்க முடிவு செய்துள்ளது, ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் இவர்களிடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, எதிர்க்கட்சி கூட்டணியான மகாவிகாஸ் அகாடியிலும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாமல் உள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பாலசாகேப் தாக்கரே சிவசேனா 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே தயக்கம் நிலவுகிறது. கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக இரண்டு கட்சிகளும் அறிவித்துள்ளன. மேலும், இந்த கூட்டணியில் அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடிக்கு, இரண்டு தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

தகவல்

இதை ஏற்காத அவர், தங்கள் கட்சி போட்டியிட உள்ள 27 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை, எதிர்க்கட்சி கூட்டணியிடம் வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் மகாவிகாஸ் அகாடி வெற்றி பெற்ற தொகுதிகள் அல்லது இரண்டாம் இடம் பிடித்த தொகுதிகளை பிரகாஷ் அம்பேத்கர் கோரியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. அகோலா, டிண்டோரி, ராம்டெக், அமராவதி மற்றும் மும்பையில் ஒரு தொகுதி ஆகியவற்றை அவர் கேட்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை