உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அதிகாரமும் நாற்காலிகளும் எங்களை தேடி வரும்

அதிகாரமும் நாற்காலிகளும் எங்களை தேடி வரும்

திருச்சி:: 'எங்களை நோக்கி அதிகாரம் வரும். பிரதமர் பதவியை கைப்பற்றுமாறு அம்பேத்கர் வழிகாட்டினார்' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில், 'மதசார்பின்மை காப்போம்' என்ற பெயரில் பேரணி நடந்தது. அதை தொடர்ந்து, அவர் பேசியதாவது:தமிழகத்தில், யார் எந்த கூட்டணி? என்று தேர்தல் கணக்குகளை பேசிக் கொண்டிருக்கின்றனர். நமக்கு அந்த கவலை இல்லை. தி.மு.க.,விடம் வி.சி., சிக்கித் தவிக்கிறது என சொல்கின்றனர். அரசியல் அறியாமையில் உளறும் அரைவேக்காடுகள் அவர்கள். தமிழக அரசியலின் வழியை தீர்மானிப்பது வி.சி., இந்திய அரசியலை கூர்மைப்படுத்துவதும் வி.சி., தான். வி.சி., வலிமையை தெரியாதவர்கள், திருமாவளவனுக்கு அரசியல் செய்ய தெரியவில்லை; பேரம் பேச தெரியவில்லை. துணை முதல்வர் பதவியை கேட்க மறுக்கிறார் என்றெல்லாம் சொல்கின்றனர். முதல்வர் பதவிக்கே நாங்கள் ஆசைப்படவில்லை. 'பிரதமர் பதவியை கைப்பற்றுங்கள்' என்று தான் அம்பேத்கர் வழிகாட்டி இருக்கிறார். அது தான் அதிகாரமுள்ள பதவி.கடந்த 35 ஆண்டுகளாக நாங்களும் அரசியல் செய்கிறோம்; 10 ஆண்டுகளாக தேர்தல் அரசியல் வேண்டாம் என கூறி வருகிறோம். சம காலத்தில் எங்களோடு புறப்பட்டவர்கள், எங்கோ வழிதவறி போய் விட்டனர். ஆனால், வி.சி., மட்டும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது. கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகாவிலும் துளிர் விடுகிறது. அனைத்து வரம்புகளையும் கடந்து நிமிர்ந்து நிற்கும் எங்களுக்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை. சமூகம், பொருளாதாரம், கலை உலகம் என பட்டியல் இன மக்கள், தலை நிமிர்ந்து நிற்பதற்கு காரணம், வி.சி., எழுச்சி தான். ஆண்ட பரம்பரை, வீர பரம்பரை என்று சொல்பவர்கள் நாங்கள் இல்லை; நாங்கள் அறிவு பரம்பரை. எங்களை நோக்கி அதிகாரம் வரும்; எங்களை நோக்கி நாற்காலிகள் வரும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

David DS
ஜூன் 25, 2025 16:05

நாற்காலி தேடி வரும். பிலாச்டிக் நாற்காலி


nv
ஜூன் 16, 2025 22:02

முதலாவது தனியா அறிவாலயத்தில் பிச்சை எடுக்காமல் ஒரு MLA SEAT வாங்கட்டும் இந்த தெருமா..


தமிழ் எழில்
ஜூன் 16, 2025 21:46

தொலைந்து போ.


Mrm. Vasan
ஜூன் 16, 2025 20:59

அப்படி நடந்தால் தமிழக பெண்கள் குடும்பத்துடன் வேறு மாநிலம் சென்று விடுவார்கள்.


உ.பி
ஜூன் 16, 2025 20:06

அதுக்கு நீங்க பா.ஜ.க ல சேரனும்


krishna
ஜூன் 16, 2025 17:05

ENNA KODUMAI IDHU ELLA THOGUDHIYILUM ADHUVUM THAMIZH NAATIL MATTUM IVAR KATCHI THANIYAAGA NINDRAAL NOTA KOODAVE THOTTRU POI VIDUVAAR.IDHULA PM KANAVU VERA.ENNA KEVALAM.


theruvasagan
ஜூன் 16, 2025 15:55

அறிவு பரம்பரையா. ஓ..சரக்கு மிடுக்கெல்லாம் அறிவின் கீழே வருமா. சொல்லவே இல்லை.


theruvasagan
ஜூன் 16, 2025 15:51

நாற்காலி தேடி வருமா. கனவுல கூட நடக்காது. அந்த ஒடஞ்சுபோன பிளாஸ்டிக் சேர் கிடைக்கிறது கூட சந்தேகந்தான்.


சுலைமான்
ஜூன் 16, 2025 14:43

நெகிழி நாற்காலியா திருமா


எஸ் எஸ்
ஜூன் 16, 2025 14:39

முதலில் தனித்து நின்று உங்கள் பலத்தை காட்டுங்கள். பிறகு என்னென்ன தேடி வரும் என்று யோசிக்கலாம்


சமீபத்திய செய்தி