உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜய்க்கு எதிராக பிரகாஷ்ராஜ்: 2026ல் களமிறக்க தி.மு.க., திட்டம்

விஜய்க்கு எதிராக பிரகாஷ்ராஜ்: 2026ல் களமிறக்க தி.மு.க., திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, வரும் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. அரசியல் வட்டாரத்தில் விஜய் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது, இம்மாநாட்டுக்கு பின்னரே தெரியவரும்.அனைத்து கட்சிகளும் அதை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில், ஆளும் தி.மு.க., மட்டும் ஒருபடி மேலே போய், விஜயை எதிர்கொள்ள என்ன செய்யலாம் என யோசிக்கிறது. அதன் விளைவாக, நடிகர் பிரகாஷ்ராஜுக்கு வலை விரித்துள்ளது.பா.ஜ., எதிர்ப்பாளராக இருக்கும் அவர், பல தளங்களில் தன் கருத்தை வெளியிட்டு வருகிறார். லோக்சபா தேர்தலில், பெங்களூரு மத்திய தொகுதி யில் பா.ஜ.,வை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டார்.அவரது பேச்சும், செயல்பாடும் தி.மு.க.,வுடன் ஒத்துப்போவதால், சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு அவரை பயன்படுத்தும் எண்ணம் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

'இருவர்' படத்தில் கருணாநிதி வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்தார். அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்ட, கருணாநிதி வரலாற்று புத்தகங்களை படித்தார். பின், தி.மு.க., அனுதாபியாக மாறினார்.கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை ஒட்டி நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டிப் பேசினார். அவரது பேச்சும், அணுகுமுறையும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிக்கு மிகவும் பிடித்துப் போனது. நிகழ்ச்சி முடிந்ததும் பிரகாஷ்ராஜை பாராட்டினர்.இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலுக்கு, பிரகாஷ்ராஜை தி.மு.க.,வின் பிரசாரப் பீரங்கியாக பயன்படுத்த துணை முதல்வர் உதயநிதி விரும்புகிறார். கட்சி நிகழ்ச்சிகளில் பிரகாஷ்ராஜை பேச வைக்குமாறு, அமைச்சர்களுக்கும், மாவட்டச் செயலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.அதேசமயம், பிரகாஷ்ராஜ் தி.மு.க.,வில் சேருவாரா அல்லது நடிகர் வடிவேலுவை போல, விஜய்க்கு எதிரான பிரசாரத்திற்கு மட்டும் அவர் பயன்படுத்தப்படுவாரா என்பது தெரியவில்லை. விஜய் கட்சி மாநாட்டுக்கு பின், இந்த விஷயத்தில் தெளிவு கிடைக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Ramesh Sargam
அக் 05, 2024 21:02

ஆனால் நடிகர் விஜய்யோ பிராகாஷ் ராஜை தனது 69வது படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு அளித்திருக்கிறார். ஆக பிரகாஷ் ராஜ் யாருக்கு ஆதரவு கொடுப்பார்? ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் நிலைமை பிரகாஷுக்கு. ஆறு எது, சேறு எது என்று என்னை கேட்காதீர்கள்.


sridhar
அக் 05, 2024 20:45

Hallelujah vs hallelujah


நிக்கோல்தாம்சன்
அக் 05, 2024 19:56

அவன் கழுவுற மீனில் நழுவுற மீனு சார்


NACHI
அக் 05, 2024 19:27

பழய ... ரெடியா இருக்கு


Satish NMoorthy
அக் 05, 2024 15:58

I hope Prakash Raj is smart enough to avoid such a misstep in his career.


hariharan
அக் 05, 2024 15:35

1967 தொடங்கின சினிமாக்காரனுக தொல்லைக்கு முடிவே கிடையாதா? நாங்கல்லாம் நேர்மையான அதிகாரிகளாக இருந்தோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் முன்னாள் அதிகாரிகள் ஒன்றாகச் சேர்ந்து இந்த பாழாய்ப்போன திராவிட மாடலில் இருந்து தமிழகத்தைக் காப்பாற்ற முன்வரக்கூடாதா?


வைகுண்டேஸ்வரன்
அக் 05, 2024 22:41

பிஜேபி யில் கூடத்தான் குஷ்பு, நமீதா, கவுதமி ராதிகா,டான்ஸ் மாஸ்டர் கலா எல்லாம் இருக்காங்க. அப்போ தமிழ் நாடு பிஜேபி யிலும் திராவிட மாடலா?


Ganesh Kumar
அக் 05, 2024 14:16

தி. மு. காவிற்கு, வடிவேலுவை போல தேர்தல் பிரச்சாரம் செய்தால், வடிவேலுவுக்கு ஏற்பட்ட கதிதான் பிரகாஷ் ராஜுக்கும்


Rangarajan Cv
அக் 05, 2024 14:14

Hope good things happen to the State either directly or indirectly


Sridhar
அக் 05, 2024 14:11

அதுமட்டும் நடக்கவே முடியாது. மேலிடத்திலிருந்து உடனே உத்தரவு பாய்ந்திடும். எங்க கைய வச்சு எங்களையே குத்தபாக்கறீங்களானு கண்டனம் தெரிவிப்பதோடு இது எங்கள் ஆட்சி எங்களால்தான் ஆட்சிக்கு வந்தீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று எச்சரிக்கை வரும்.


SP
அக் 05, 2024 14:09

தமிழக அரசியல் இவ்வளவு தரம் தாழ்ந்து போகும் என்று நினைக்கவேயில்லை