உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு: கூட்டணியில் இணைய அச்சாரம்?

ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு: கூட்டணியில் இணைய அச்சாரம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

முதல்வர் ஸ்டாலினை, சென்னையில் அவரது இல்லத்தில், தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா நேற்று திடீரென சந்தித்தார். முதல்வர் ஸ்டாலின், கடந்த மாதம் 21-ம் தேதி நடைபயிற்சி சென்றபோது, தலைசுற்றல் ஏற்பட்டது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, 'ஆஞ்சியோ' சிகிச்சை அளிக்கப்பட்டது; பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. சிகிச்சைக்கு பின், கடந்த 27ல், அவர் வீடு திரும்பினார். இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்துக்கு, தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா சென்றார். குணமடைய வாழ்த்து அங்கு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, முதல்வரின் மனைவி துர்கா, துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் வேலு உடன் இருந்தனர். சந்திப்புக்கு பின், பிரேமலதா கூறியதாவது: முதல்வர் ஸ்டாலினிடம் உடல்நலம் விசாரித்தோம். முதல்வர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்; 'நன்றாக இருக்கிறேன்' என்றார். சீக்கிரம் அவர் குணமடைய வாழ்த்து தெரிவித்தோம். என்னுடன் தே.மு.தி.க., நிர்வாகிகள் சுதீஷ், பார்த்தசாரதி வந்தனர். இது நட்பு ரீதியிலான, குடும்ப ரீதியிலான சந்திப்பு மட்டும் தான். அவரை சந்தித்ததில், 100 சதவீதம் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை. யாருடன் கூட்டணி என்பதை தற்போது கூற முடியாது. கூட்டணி பற்றி நேரம் வரும்போது அறிவிப்பேன். வரும் 3ம் தேதி முதல் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செல்கிறோம். கும்மிடிப்பூண்டியில் ஆரம்பித்து, கன்னியாகுமரி வரை முதற்கட்ட பயணம் மேற்கொள்கிறோம். கடலுரில் ஜன., 9ல் தே.மு.தி.க., மாநாடு நடத்துகிறோம். 'இல்லம் தேடி; உள்ளம் நாடி' என்ற முழக்கத்துடன் நிர்வாகிகள் சந்திப்பு; விஜயகாந்தின் ரத யாத்திரை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பிரேமலதா சந்திப்பு குறித்து, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், 'நட்புடன் நலம் விசாரித்தமைக்கு நன்றி' என பதிவிட்டுள்ளார். இருதரப்பும் நலம் விசாரிப்பு சம்பந்தமாகவே சந்திப்பு நடந்ததாக கூறினாலும், அரசியல் வட்டாரங்களில் வேறு விதமாக கூறுகின்றனர். அவ்வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., முரண்பட்டு நிற்கிறது. தி.மு.க., தலைமையின் செயல்பாடுகள் ம.தி.மு.க.,வுக்கும், அக்கட்சியின் செயல்பாடுகள் தி.மு.க., தலைமைக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன. இ தனால், கூட்டணியில் இருந்து ம.தி.மு.க.,வை வெளி யேற்ற தி. மு.க., தலைமை முடிவெடுத்து விட்டது. இதை அறிந்ததும், ம.தி.மு.க.,வும் மாற்று ஏற்பாடுகளில் களம் இறங்கி, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் இணைய முடிவெடுத்து, அதற்கேற்ப பேச்சுகளை துவங்கி விட்டது. இந்நிலையில், கூட்டணியி ல் ம.தி.மு.க.,வுக்கு பதிலாக, தே.மு.தி.க.,வை கொண்டு வர, தி.மு.க., தலைமை முடிவெடுத்து, அதற்கான ரகசிய வேலைகளை ஏற்கனவே துவங்கி இருந்தது. நினைவு மண்டபம் மு தல் கட்டமாக, விஜயகாந்துக்கு சொந்தமான மாமண்டூர் ஆண்டாள் அழகர் கல்லுாரியை, தி.மு.க.,வைச் சேர்ந்தவர் இயக்குநராக இருக்கும் பிரபல கல்வி நிறுவனத்துக்கு பெரும் தொகைக்கு விற்பனை செய்ய, தி.மு.க., அமைச்சர் வேலு வாயிலாக காய் நகர்த்தப்பட்டு, அது வெற்றிகரமாக ந டந்து முடிந்தது. இ தைத் தொடர்ந்தே, பிரேமலதாவும், சுதீஷும் நலம் விசாரிப்பதாகக் கூறி, மு தல்வர் ஸ்டாலினை வீடு தேடிச் சென்று சந்தித்து திரும்பி உள்ளனர். இதன் அடுத்த கட் டமாக, தமிழக அரசு சார்பில் விஜயகாந்துக்கு நினைவு மண்டபமும், விஜயகாந்த் நினைவிடம் இருக்கும் கோயம்பேடு சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்டும் அறிவிப்பையும் வெளியிட உள்ளனர். அடுத்தடுத்த கட்டங்களில், தி.மு.க., - தே.மு.தி.க., கூட் டணி உருவாகும். இவ்வாறு அவ் வட்டாரங்கள் கூறின - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

venugopal s
ஆக 01, 2025 20:42

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்வது பாஜகவினருக்கு பழகி போன விஷயம் தான்!


Haja Kuthubdeen
ஆக 01, 2025 18:50

நாற்பது தொகுதிகளும், சுதீஸுக்கு ராஜ்யசபா சீட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது... பிரேமலதா ஆணந்தம்.மோடி..எடப்பாடி பேரதிர்ச்சி...


சிட்டுக்குருவி
ஆக 01, 2025 17:19

விஜயகாந்தின் கொள்கை அவரது மனைவிக்ககே தெரியவில்லையா? அல்லது அவரது கொள்கையை அவரோடே சம்மதியாக்கிவிட்டீர்களா? அவர் பதவிக்காக கட்சி ஆரம்பிக்கவில்லை ஊழலுக்கு எதிராக குரல்கொடுக்கவே கட்சி ஆரம்பித்தார் .என்பது தெரியாதா ? ஊழலோடு கூட்டு சேர்ந்தால் ஒரு தொண்டனும் உடனிருக்கமாட்டான் . ஊழல் இல்லாதவர்கள் ,ஊழலுக்கு எதிராக கட்சிநடத்துபவர்கள் யாரும் உங்கள் கண்ணுக்கு தென்படவில்லையா? ஒருவேளை உங்களுக்கும் தேவை அதிகரித்துவிட்டதா?


Kjp
ஆக 01, 2025 18:38

சபாஷ் அருமையான பதிவு.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 01, 2025 19:52

ஊழலோடு கூட்டு சேர்ந்தால் ஒரு தொண்டனும் உடனிருக்கமாட்டான் .அது சரி இப்போது எத்தனை தொண்டர்கள் இருக்கிறார்கள்


Amar Akbar Antony
ஆக 01, 2025 15:14

எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்தையும் முறித்த விஜயகாந்த் அவர்களுக்கு நினைவுமண்டபம்? அஹ்ஹ்


எஸ் எஸ்
ஆக 01, 2025 13:07

பிரேமலதா ஏதோ தன் கட்சிக்கு பலமான வாக்கு வங்கி இருப்பது போல் பில்டப் அப் கொடுக்கிறார். திமுக ஓரிரண்டு இடங்களில் வாய்ப்பு அளிக்கலாம். அவ்வளவே. ஆனால் தவறான முடிவு என்பதை தேர்தலுக்கு பின் உணர்வார். அந்த அளவுக்கு இருக்கிறது திமுக எதிர்ப்பு மனநிலை


குமரன்
ஆக 01, 2025 12:06

தமிழ் நாட்டு அரசியல் களம் நாட்டு மக்களுக்கு எது நல்லது என்பதை விட தன் மக்களுக்கு எது நல்லதோ அதை சிறப்பாக செய்யும் களமாக மாறி விட்டது


V RAMASWAMY
ஆக 01, 2025 10:56

ஆன்மீக உணர்வுகள் கொண்ட கேப்டன் கட்சி நாத்திகவாதிகளுடன் சேர்ந்தால் அது அவர்களின் பதவி, புகழ், பணம் பேராசையை மட்டும் குறிக்கிறது. விவஸ்தையில்லாத அரசியல் கட்சிகள்


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 01, 2025 13:10

அதைவிட கேவலம் உண்டு. கேப்டனை வசைபாட வாடகைக்கு ஒரு நடிகரை கூலி கொடுத்து அமைத்த கட்சியுடன் கேப்டனின் உறவுகளே கூட்டணி அமைப்பதைவிட வெட்கக்கேடான செயல் உண்டா?


Anand
ஆக 01, 2025 15:34

பேராசை பிடித்த இந்த பெண்மணிக்கு வேற வேலை இல்லையா? இவரால் தான் கேப்டன் சீக்கிரம் போய்விட்டார்.... அனால் இன்னமும் திருந்தியபாடில்லை.


sankaranarayanan
ஆக 01, 2025 09:58

எல்லா உதிரி கட்சிகளும் பண பெட்டிக்காக போட்டி போட்டுக்கொண்டு அலைகின்றன முந்திக்கொண்டு சந்திக்கின்றன நாளைக்கு எல்லாமே சந்தி சிரிக்க வேண்டும்


Prasanna Krishnan R
ஆக 01, 2025 09:52

ஒரு பயனற்ற பெண்மணி, திரு. விஜயகாந்தின் ஆன்மா உங்களை ஒருபோதும் மன்னிக்காது.


Kumar Kumzi
ஆக 01, 2025 08:28

ம தி மு க ,தே மு தி க இரண்டுமே துருப்பிடித்த ஆணிகள் இவர்களால் எந்த பிரயோசனமும் இல்லை பணத்துக்காக பேரம் பேசுகிறார்கள்


புதிய வீடியோ