உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமைச்சர் மீதான குவாரி வழக்கு விசாரணை; பிறழ் சாட்சிகளால் போலீசாருக்கு சலிப்பு

அமைச்சர் மீதான குவாரி வழக்கு விசாரணை; பிறழ் சாட்சிகளால் போலீசாருக்கு சலிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட லோகநாதன் உடல் நலக்குறைவால் இறந்தார். இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் தற்போது வரை, 51 பேர் சாட்சியம் அளித்த நிலையில், 30 பேர் அரசு தரப்பிற்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது, சதானந்தன், ஜெயச்சந்திரன், கோபிநாதன், கோதகுமார் ஆஜராகினர். அரசு தரப்பு சாட்சிகள் ஆஜராகவில்லை. இதையடுத்து மாவட்ட நீதிபதி மணிமொழி, விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் தொடர்ந்து பிறழ் சாட்சிகளாக மாறி வருவதும், முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வருவதும், வழக்கை விசாரிக்கும் போலீஸாருக்கு சலிப்பை ஏற்படுத்தி இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தமிழ்வேள்
மார் 02, 2025 14:58

சாட்சிகளை மிரட்டி தடம்புரண்டு செல்ல வைப்பதே போலீஸ்தான்... அப்புறம் என்ன சலிப்பு?


Satya
மார் 02, 2025 13:34

நீதிபதிகளும் நீதிமன்றங்களும் தன் அதிகாரத்தை சரியாக பயன்படுத்தவில்லையோ என்று தோன்றுகிறது.


கண்ணன்,மேலூர்
மார் 02, 2025 16:42

ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க பட்டு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு இவரை பிடித்து சிறையில் தள்ளாமல் ஜாமீனில் வெளியே விட்டு அமைச்சராக்கி அழகு பார்க்கிறது உச்சநீதிமன்றம்


மால
மார் 02, 2025 13:32

அவன் மந்திரியா இருக்கிறான் பிறகு சாட்சி பிற ளாம என்ன செய்யும். இது நீதி மன்றத்திற்கும் நிதி அரசருக்கும் ஏனோ தெரியாது இல்ல .


krishna
மார் 02, 2025 13:20

SALIPPU ENGE VANDHADHU.DRAVIDA POLICE MAGIZCHI ENA IRUKKA VENDUM.


Oviya Vijay
மார் 02, 2025 12:49

தமிழ்நாட்டின் சாபக்கேடுகள் இது போன்ற அமைச்சர்கள்... வழக்கின் தீர்ப்பின் போது உங்களது மற்றும் உங்கள் மனைவியின் வயோதிகத்தை கருத்தில் கொண்டு குறைந்த பட்ச தண்டனை தரும்படி நீதிபதிகளிடம் வேண்டினீர்களே. ஆக... நீங்களும் ஒரு சாதாரண மனிதர் தானே... இந்த வயதில் அமைதியாக மனநிறைவோடு வாழும் வாழ்க்கை பேரின்பம் என்று நீங்கள் தவறிழைக்கும் போது தெரியவில்லையா???. அதை விடுத்து பல தலைமுறைகளுக்கு வேண்டிய சொத்துக்களை தவறான வழியில் சம்பாதித்து அதுவரை இருந்த நற்பெயரையும் கெடுத்துக் கொண்டு குற்றச்சாட்டிலிருந்து தப்புவதற்காக இப்போது தகிடுதத்தோம் போடுகிறீர்களே... சாதாரண குடிசையில் வாழும் மனிதன் உறங்கும் உறக்கம் கூட உங்களால் நிம்மதியாக உறங்க முடிகிறதா... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்... ஒருவேளை சட்டத்தின் தண்டனையிலிருந்து வேண்டுமானால் நீங்கள் தப்பி விடலாம்... ஆனால் உங்கள் மனசாட்சியிடமிருந்தும் உங்களால் பாதிக்கப் பட்டவர்களின் சாபங்களிடமிருந்தும் தப்பவே முடியாது... ஒரு பைசா ஊழல் செய்தாலும் அனைவருக்கும் இதே தண்டனை தான்... உங்கள் மனசாட்சி உறுத்துதலிலிருந்து உங்களால் தப்பிக்கவே முடியாது...


Sridhar
மார் 02, 2025 13:36

மனசாட்சியாவது ரோமமாவது? எங்களுக்கு அதெல்லாம் கிடையாது. துட்டு கிடைக்கும்னா எதுவேனும்னாலும் செய்வோம். இப்போ கோர்ட்டுல சாட்சிகள எல்லாம் செட்டப் செஞ்சுட்டோம், கேசு தூள்தூளா போகப்போகுது. அப்புறம் என்ன ஜாலிதான். இதுக்குபோயி மனசாட்சி, உறுத்தல், தூக்கம்னு ஏதேதோ சொல்லிட்டுருக்கீங்க


அப்பாவி
மார் 02, 2025 11:08

பிறழ் சாட்சிகளை தூக்கில் போடணும் இன்னும் எற்றனை காலத்துக்கு சாட்சி, சம்பிரதாயம்னு உருட்டுவீங்க. வருமானத்துக்கு அதிக சொத்து வெச்சிருந்தா பறிமுதல் செஞ்சு கஜானாவில் சேத்துடுங்க. எங்கே அடிக்கணுமோ அங்கே அடிச்சாதான் வலிக்கும்.


முகில் தினகரன்
மார் 02, 2025 10:30

சாட்சிகளை மாற்றும் சுமையை தற்போது அமைச்சர் அவர்கள் ஏற்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனை நீதிபதிகள் புரிந்து கொண்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு இடவேண்டும்.


நிக்கோல்தாம்சன்
மார் 02, 2025 10:07

கோர்ட் என்ன செய்துகொண்டுள்ளது சாட்சிகளுக்கு பாதுக்காப்பு இல்லாதது கண்கூடாக தெரிந்தும் குற்றவாளியை வெளியே விட்டுவிட்டு ஒரு வழக்கை நீர்த்து போக செய்யும் நீதிமன்றங்களும் , நீதிபதிகளும் தேவைதானா என்ற கேள்வி எழுமே ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை