உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராகுலால் காங்., அழியப் போகிறது!

ராகுலால் காங்., அழியப் போகிறது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை பிரதமர் மோடி நேற்று தன் பதிலுரையின்போது கடுமையாக விமர்சித்தார். இது குறித்து அவர் பேசியதாவது: பார்லி.,க்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டிருந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பா.ஜ., - எம்.பி., ரவ்நீத் சிங் பிட்டுவை துரோகி என விமர்சித்துள்ளார். இதன் மூலம் அவரது திமிர் பேச்சு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.காங்., கட்சியில் இருந்து இதுவரை நிறைய பேர் வெளியேறி இருக்கின்றனர். சில தலைவர்கள் வேறு சில கட்சிகளுக்கு தாவி இருக்கின்றனர். அவர்களை எல்லாம் ராகுல் துரோகி என அழைக்கவில்லை. ஆனால், பிட்டுவை மட்டும் துரோகி என அழைத்துள்ளார். அதற்கு காரணம் அவர் ஒரு சீக்கியர். தனி மனிதரை மட்டுமல்ல; ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தினரையும் ராகுல் அவமானப்படுத்திவிட்டார்.சீக்கிய சமூகத்தினர் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளார். தேசத்திற்காக பிட்டுவும், அவரது குடும்பத்தினரும் நிறைய தியாகங்கள் செய்து இருக்கின்றனர். பா.ஜ.,வுக்கு மாறியதற்காக தற்போது அவரை துரோகியாக்கிவிட்டனர். ராகுலின் இந்த பேச்சு காரணமாகவே, காங்கிரஸ் அழியப் போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

V.Mohan
பிப் 07, 2026 08:34

காங்கிரஸ் எங்கே அழிந்திருக்கிறது. ?? தெலுங்கானா. கர்நாடகா கேரளா போன்ற மாநிலங்களில் அவர்கள் கையே ஓங்கி உள்ளது. எங்கேயோ டில்லியில் அரசியலில் ஈடுபடாமல் இருந்த பிரியங்கா வந்து கேரளாவில் எம்.பி. சீட் ஜெயிக்க முடியும் என்றால், அழிந்துவிட்டது என்றா அர்த்தம்??வேண்டுமானால் காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் அழிந்து விட்டது. குடும்ப கட்சி ஆகிவிட்டது. அனுபவமுள்ள அரசியல்வாதிகளின் மரியாதை,மதிப்பு அழிந்து விட்டது என சொல்லலாம். அமைதி ஆட்கள், சுயநலஅரசியல்வாதிகள் அமைச்சர் பதவி வகித்தவர்கள் எல்லாம் காங்கிரஸூக்கு ""கை"" கொடுப்பார்கள். தெலுங்கானா, கர்நாடகா மக்கள்,காங்கிரஸ் வழங்கிய உடனடி காசு,பணப்பலன்களுக்காக, பல்வேறு வளர்ச்சிகளை மாநிலத்துக்கு கொண்டுவந்த தெலுங்கானா சந்திரசேகர் ராவ் மற்றும் கர்நாடகா பாஜ ஆகிய ஆட்சிகளை நன்றியின்றி மாற்றினார்கள். ஆகவே மக்களுக்கு உடனடி பணப்பலன்களை தரும் காங்கிரஸ் கட்சி அழியவெல்லாம் வாய்ப்பில்லை ராஜா


ramani
பிப் 07, 2026 05:23

எந்தவித தகுதியும் இல்லாதவர் இவற்றையெல்லாம் தேர்ந்தெடுத்தால் நாடு எப்படி உருப்படும். மக்களே சிந்தியுங்கள்.


நிக்கோல்தாம்சன்
பிப் 07, 2026 04:11

வாரிசு என்று ஒரு தகுதிதான் இவனை போன்றவர்களை இன்னமும் வாழவைக்கிறது , ராகுல் , பிரியண்க் கார்கே , உதயநிதி , விஜயேந்திரா என்று எத்துணை பேர்


M Ramachandran
பிப் 07, 2026 03:24

ராகுல் அரசியாலுக்கு ஒரு சாப கேடு. இவனை பொற்கால மோசமான குண நலன்களுடன் இருப்பதும் அவனிய்ய தோளில் சுமக்கும் எதிர் கட்சிகளும் தற்போது சாபக்கேடே. கமலஹாசன் சேர்த்திருப்பதால் கூடிய விரைவில் ராகுல் அரசியல் அஸ்தமன மாகி விடும்.


adalarasan
பிப் 06, 2026 22:06

காங்கிரஸ் ஏற்கனவே 80சதவிகிதம் போய்விட்டது..


nagendhiran
பிப் 06, 2026 17:06

எல்லோரும் சொல்கிறார்கள் பாஜக மூன்று முறையும் ஆட்சிக்கு வந்ததற்கு மோடி தான் காரணம் என்று? அனால் அது உண்மை இல்லை? பாஜக மூன்று முறை ஆட்சிக்கு வந்ததற்கு காரணமே ராகுல்தான்? அவர் பேச்சால் வந்த விணைதான், பாஜக வெற்றியே? அனாலும் ராகுல் விடவில்லை? நான்காவது முறையும் பாஜக ஆட்சிக்கு வரகாரணமே ராகுலும் அவர் குடும்பமும்தான் காரணமே? வாழ்க ராகுல்? வளர்க பாஜக?


SRIRAM
பிப் 06, 2026 15:53

எல்லோரும் நிக்கிறார்கள் ராகுல் ஒரு காங்கிரஸ் காரர் என்று அது முற்றிலும் தவறு அவர் ஒரு அக்மார்க் பிஜேபி காரர்.... ராகுல் இல்லனா இவ்வளவு பெரிய பிஜேபி யால் அடைத்திருக்க முடியாது....இது தெரியாம மோடி அமித்ஷா என்றுல்லாம் வேற... எங்க தல ராகுல் தான் கெத்து....


Santhakumar Srinivasalu
பிப் 06, 2026 15:20

காங். க்கு முதல் எதிரி ராகுல் என்று ரொம்ப காலத்திற்கு முன்பே அவங்க கட்சிகாரர்களுக்கே தெரியும்!


Rathna
பிப் 06, 2026 11:48

குடும்ப கட்சியின் அழிவு இந்திய அரசின் எதிரியான, தேச விரோத பாவ மன்னிப்பு ஏஜெண்டுகள் மற்றும் அரேபிய தீவிரவாதிகளின் அழிவாகும் இல்லாவிட்டால் வெளிநாடுகளுடன் மறைமுக ஒப்பந்தம் போட்டு இந்தியாவை வாழ விட மாட்டார்கள்.


அன்பே சிவம்
பிப் 06, 2026 11:25

நாட்டின் முதல் எதிரி பப்பு தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை


புதிய வீடியோ