உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காங்., நிர்வாகிகள் மாநாட்டில் ராகுல்l தி.மு.க.,விடம் அதிக சீட் பெற திட்டம்

காங்., நிர்வாகிகள் மாநாட்டில் ராகுல்l தி.மு.க.,விடம் அதிக சீட் பெற திட்டம்

இரண்டு லட்சம் நிர்வாகிகள் பங்கேற்கும் கிராம கமிட்டி காங்கிரஸ் மாநாட்டிற்கு, பார்லிமென்ட் எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை அழைத்து வந்து, கட்சியின் பலத்தை காட்டி, தி.மு.க., கூட்டணியில் அதிக தொகுதிகளை பெற, அக்கட்சி திட்டமிட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e0foum2y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

72 சதவீதம் பணி

வரும் சட்டசபை தேர்தலில், கட்சி பலத்தின் அடிப்படையில் கூடுதல் தொகுதிகளை பெற வேண்டும் என்ற இலக்குடன் தமிழக காங்கிரஸ் செயல்படுகிறது. இதற்காக, காங்கிரஸ் நிர்வாகத்தை சீரமைக்க, தமிழகம் முழுதும், கிராம கமிட்டி குழு அமைக்கும் பணிகளை துவக்கியது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 24,000 கிராம கமிட்டியில், குறைந்தபட்சம் ஐந்து, அதிகபட்சம் 15 நிர்வாகிகளை உறுப்பினராக நியமிக்கும் பணி துவக்கப்பட்டது.தற்போது, 16,500 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, 72 சதவீதம் பணி முடிந்துள்ளது. மாவட்ட வாரியாக, தலைமை பயிற்சியாளர்கள் 100 பேர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், சமீபத்தில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அக்கூட்டத்தில் அடுத்த கட்டமாக, டில்லி மேலிட தலைவர்களை அழைத்து, மூன்று நாட்கள் பயிற்சி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆட்சியில் பங்கு

இது குறித்து, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது:

கிராம கமிட்டி நிர்வாகிகளை நியமிக்கும் பணியை, தமிழக காங்கிரஸ் மந்திரகோலாக எடுத்துள்ளதற்கு தேர்தல் அரசியல் தான் காரணம். தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்தால், ஆட்சியில் பங்கு தரப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கும் நிலை ஏற்பட்டால், 'பூத்' கமிட்டியை பலப்படுத்த வேண்டும்.

கட்சி சீரமைப்பு

அதற்காகவே கிராம கமிட்டி பலப்படுத்தப்படுகிறது. கமிட்டி உறுப்பினர்களாக, குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் நிர்வாகிகள் சேர்க்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரையும், ஒரே இடத்தில் அழைத்து மாநாடு நடத்தவும், அதில் ராகுலை பங்கேற்க வைக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கட்சி சீரமைப்புக்கு பின், தி.மு.க., அல்லது விஜய் கட்சியில் அதிக 'சீட்' பெற்று கூட்டணி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Nalla Paiyan
ஜூலை 19, 2025 07:40

வாடகைக்கு ஆட்கள் கிடைப்பார்கள் உண்மை தான். அதற்காக 2 லட்சம் பேரையா வாடகைக்கு பிடிக்க முடியும்.. too much


ஆரூர் ரங்
ஜூலை 13, 2025 15:42

87 பிளஸ் 9 சீட் கிடைக்கலாம்.


அரவழகன்
ஜூலை 13, 2025 15:14

தமிழக வெற்றி கழகத்தோடு பேச்சு வார்த்தை நடக்கிறதே.. கூட்டணிக்கு


T.sthivinayagam
ஜூலை 13, 2025 14:30

அதிமுக இப்போது நிலையில் பாஜாக என்பது இடங்களில் போட்டியிட வேண்டும்


Ramesh Sargam
ஜூலை 13, 2025 12:30

எதிர்பார்க்கும் சீட் திமுக கொடுக்காவிட்டால், காங்கிரஸ், திமுகவுடனான நட்பை முறித்துக்கொள்ளுமா?


sridhar
ஜூலை 13, 2025 10:27

பிச்சை தான், ஆனால் கௌரவ பிச்சை .


Rajan
ஜூலை 13, 2025 10:03

இன்னும் 4-5 பேர் கூட வந்திருக்கிறார்கள். இன்னும் சேர்கள் வேணும். மத்தபடி நீங்க தேர்தலுக்கு என்ன கொடுத்தாலும் சரி ஐயா.


xyzabc
ஜூலை 13, 2025 09:50

நண்பனிடம் பேரம் பேசுவது சரி தான்.


Mario
ஜூலை 13, 2025 09:30

அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்.. அமித்ஷா கருத்துக்கு எடப்பாடி பதிலடி..


கலிவரதன்,திருச்சி
ஜூலை 13, 2025 09:41

அறிவாலய அடிமைகளான உபிஸ்களுக்கு இந்த செய்தி சில நாட்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும் ஆனால் அதுவே ரொம்ப நாள் நீடிக்காது.


sridhar
ஜூலை 13, 2025 10:27

திமுக எடுபிடி.


vivek
ஜூலை 13, 2025 17:56

மணிப்பூரில் மட்டுமே திமுக வெற்றி பெறும் என்று சுண்டல் மரியோ கருத்து..


Balasubramanian
ஜூலை 13, 2025 07:16

அதிக தொகுதிகள் ஆட்சியில் அதிக பங்கு அதுதான் அகில இந்திய கட்சியும் மற்றும் நூற்றாண்டு நிறைவு பெற்ற கட்சியும் ஆன காங்கிரசின் மதிப்பிற்கு அழகு! தலைவரே கேளுங்கள்! இல்லை என்றால் நேற்று முளைத்த கட்சியான த.வெ.க உடன் இணைந்து உங்களை எதிர்ப்போம் என்று மிரட்டுங்கள்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை