உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராகுல் போராட்டத்தால் இளைஞர்களிடையே தாக்கம் இல்லை!

ராகுல் போராட்டத்தால் இளைஞர்களிடையே தாக்கம் இல்லை!

புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் அக்கட்சி தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் தேர்தல் கமிஷன் ஓட்டு திருட்டில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தான், பா.ஜ., வெற்றி பெற்று வருகிறது' என, ராகுல் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இந்த போராட்டத்திற்கு கட்சிக்குள்ளேயே ஆதரவு இல்லை.மூத்த தலைவர்கள் பலரும், ராகுல் போராட்டத்தில் பெயரளவிற்கு பங்கேற்கின்றனர். இதற்கிடையே, ராகுலுக்கு நெருக்கமானவரும், காங்கிரசின் வெளிநாடு குழுவின் தலைவருமான சாம் பிட்ரோடாவின் சமீபத்திய பேட்டி பிரச்னையை கிளப்பியுள்ளது.'வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தேர்தல் முறைகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்' என, சாம் பிட்ரோடா கூறினாலும், வேறொரு விஷயத்தையும் அவர் தெளிவாக சொல்லியுள்ளார். 'ராகுல் நடத்தி வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிரான போராட்டம், இப்போதைய இளைஞர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை' எனவும் பேட்டி அளித்துள்ளார். பல மூத்த தலைவர்கள் அவரது கருத்தை வரவேற்றுள்ளனர். ஆனால், இது குறித்து வெளிப்படையாக பேச பலரும் தயங்குகின்றனர்.இன்னொரு பக்கம், பிரதமர் மோடியை சாம் பிட்ரோடா பாராட்டியதுடன், தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இது, கட்சிக்குள் பூகம்பத்தை கிளப்பி விட்டது. மோடிக்கு எதிராக பேசி வருபவர், திடீரென பல்டி அடிக்க காரணம் என்ன?'நான் காங்கிரசில் தான் இருப்பேன். நானும், மனைவியும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். பல முறை மோடியை அவரது வீட்டில் சந்தித்துள்ளேன். அவர் அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர்' என, விளக்கம் அளித்தும், இதை கட்சியினர் நம்ப தயாராக இல்லை. எது எப்படியோ, தேர்தல் கமிஷன் குறித்து சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பேசும் தமிழன்
நவ 15, 2026 16:46

இத்தாலி பப்புவை யாரும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை அது தான் உண்மை.... அவரும் என்னென்ன தில்லாலங்கடி வேலை எல்லாம் செய்து பார்க்கிறார்.... ஆனால் மக்கள் அவர்களை நம்பாமல்... ஒவ்வொரு தேர்தலிலும் விரட்டி விரட்டி அடிக்கிறார்கள்.


Sriram
நவ 15, 2026 16:42

மக்கள் ராகுல் காந்தி ஒரு அந்நிய பகடை காய் என்று உணர்ந்து விட்டார்கள். நம் தேசத்துக்கு ஒவ்வாத சிந்தனை கொண்டவனை மக்கள் புறக்கணிப்பார்கள்


krishna
நவ 15, 2026 13:08

INDHA AGILA ULAGA KOMALIKKU VAAZHTHUKKAL.DESA VIRODHA MAFIA MAINO CONGRESS KATCHIYAI THUDAITHU KUPPAYIL ERIYAAMAL OOYA MAATAR.SEEKIRAM NADAKKATUM.SUPER THALAIVAR.AGILA ULAGA KEVALA JENMANGAL MATTUME INDHA MAFIA KATCHIYIL THALAIVAN THONDAN ENA THIRIVAARGAL.


Barakat Ali
நவ 15, 2026 08:49

நமது சிங்கை சேகரன் சொல்ற மாதிரி திணிக்கப்படும் வாரிசுகள் வெற்றி பெறுவதில்லை ....


ஆரூர் ரங்
நவ 15, 2026 08:37

சாம் காங்கிரசில்தான் இருப்பேன் என்கிறார். ஆனால் அதை முடிவு செய்யப் போவது சோனியா. சீதாராம் கேசரி கதை மறக்குமா?


VENKATASUBRAMANIAN
நவ 15, 2026 08:34

ராகுல் இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் யாரும் அவரை நம்பமாட்டார்கள்.


SUBBU,MADURAI
நவ 15, 2026 06:22

முற்போக்குக் கூட்டணி (Progressive Alliance) என்ற பெயரில் ஒரு சர்வதேசக் குழு உள்ளது. சுமார் 100 க்கும் மேற்பட்ட சர்வதேச அரசியல் கட்சிகள், அரசு சாரா நிறுவனங்கள், சிந்தனைக் குழுக்கள் (Think tanks) இந்தக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளன. ராகுல் காந்தி அதன் செயற்குழுவில் (prazidium) உறுப்பினராக உள்ளார். உலகெங்கிலும் உள்ள வலதுசாரி சக்திகளுக்கு எதிராகக் கூட்டாகப் போராடுவதே இந்தக் குழுவின் நோக்கங்களில் ஒன்றாகும். அமெரிக்க ஜனநாயகக் கட்சி, பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சி, ஜெர்மனியின் எஸ்.டி.பி (SDP) ஆகியவை இந்தக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளன. எனவே வலதுசாரியான பாஜகவிற்கு எதிராகப் போராட ராகுல் காந்தி வெளிநாட்டு ஆதரவை பயன்படுத்தினார் என்பதற்கு இது ஆவணப் படுத்தப்பட்ட சான்றாகும்.


ராஜா
நவ 15, 2026 03:06

நாட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்கு வேண்டி போராட்டம் செய்தால் ஆதரவு கிடைக்கும்.தான் சுயநலத்தால் தனது கட்சி வளர்ச்சிக்கும், அதற்கு ஆதரவளிக்கும் கள்ள குடியேறிகள் மற்றும் தேச விரோத சக்திகளுக்கு ஆதரவாக தேசத்தை, ஜனநாயகத்தை இழிவு படுத்தி போராடினால் எப்படி ஆதரவு கிடைக்கும்? ராகுல் இன்னமும் தன்னை ராஜா வீட்டு கன்றுக்குட்டி என்று நினைத்துக்கொண்டு இந்த மக்கள் ஆட்டு மந்தைகள் போல் ஆதரவு தர வேண்டும் என்று நினைப்பது அவர் அகங்காரத்தை தான் காட்டுகிறது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாட்டின் வளர்ச்சிக்கு, உறுதித்தன்மைக்கு தேவையானவற்றை முன் எடுத்து போராட்டங்கள் செய்தால் மக்கள் ஒருவேளை ஆதரவு கொடுக்க வாய்ப்பிருக்கிறது. பொதுவாய் இந்த மாதிரி குடும்பத்தில் வந்தவர்கள் அரசியலை விட்டு விலகி இருப்பது தான் அவர்களுக்கும், மக்களுக்கும் நலம்.மக்களோடு களத்தில் இருப்பவர்களுக்கு தான் நாட்டின் தேவை, மக்களின் தேவை புரியும். இதை பின்பற்றாமல் போனால் பாஜகவையும் கூட மக்கள் ஒருநாள் நிராகரிக்க தான் செய்வார்கள்.


Natarajan Shankar
நவ 15, 2026 02:46

எனக்கும் அவனுக்கும் ஒரே வயது தான்.என்னை குழந்தைகள் தாத்தா என்று கூப்பிடும் போது இவன் எப்படி இளைஞன் ஆக முடியும். அரசு வேலைப்பார்த்தால் இவனை இன்னும் 3 வருடங்களில் பென்ஷன் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். இவனுக்கு நல்ல சிந்தனையே கிடையாது, தேசபக்தி ஒரு துளியும் இல்லாத இவனை நம்பி எந்த இளைஞன் வருவான். காங்கிரஸ் கட்சியே நேருவின் சூழ்ச்சியால் தனது குடும்ப சொத்தாகியதின் கடைசி வாரிசு இவன் தான். இவன் காங்கிரஸ் கட்சிக்கு அந்திம காரியம் செய்ய தான் லாயக்கு ஆட்சி அமைக்க அல்ல.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ