உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராமதாஸ் பிளான்; பா.ம.க.,வினர் குஷி

ராமதாஸ் பிளான்; பா.ம.க.,வினர் குஷி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாமல்லபுரம் : செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பா.ம.க., சார்பில் நடந்த சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: 10.5 சதவீதம் இடஒதுக்கீடு என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் கொடுக்கிறபடி இல்லை. எனவே போராட்டத்தை அறிவியுங்கள் என்று எதிர்பார்த்து வந்திருக்கிறீர்கள் என்று தெரியும். நிச்சயமாக போராட்டத்தை அறிவிப்போம். இதுவரை நடந்திராத போராட்டம் அதுவாகத் தான் இருக்கும்.ஒரு தொகுதியில் 2000 இளைஞர்கள், இளம்பெண்கள் ஒவ்வொருவரும் 100 ஓட்டுகள் என அந்த தொகுதியில் நாம் வெற்றி பெற முடியும். 50 தொகுதிகளில் நாம் சாதாரணமாக வெற்றி பெற முடியும். அதை நீங்கள் செய்யுங்கள். ஆனால் பலபேர் என்னை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள். உழைக்கவில்லை, உழைக்காமல் வேறு எதையோ செய்து கொண்டிருக்கிறீர்கள்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6swk8sis&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தனியாக யானை சின்னத்தில் நின்று 4 தொகுதிகளில் அன்று வெற்றி பெற்றோம். இன்று கூட்டணியில் சேர்ந்து 5 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். நமக்கு வெட்கமாக இல்லையா, அசிங்கமாக இல்லையா, கோபம் வரவில்லையா. ஆனால் கோபம் வரவில்லை. நம் சமூக மக்கள் நமக்கே ஓட்டுபோடவில்லை.இனி அப்படி இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் உங்கள் ஒவ்வொருவரின் கணக்கையும் முடித்துவிடுவேன். அப்படி என்றால் என்ன அர்த்தம், உங்கள் பொறுப்புகள் உங்களிடம் இருக்காது. எம்எல்ஏ என்றாலும் பார்க்கமாட்டேன், தூக்கி வங்கக்கடலில் வீசி விடுவேன். சிலர் எங்கே கூட்டணி, யாருடன் கூட்டணி என்று கேட்கிறான்.கூட்டணி பற்றி முடிவு செய்வதற்கு நான் இருக்கிறேன், அதை நான் முடிவு செய்வேன். அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உனக்கு சீட்டு கிடைக்க வேண்டும், எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்றால் உழைக்க வேண்டும். உங்களின் கணக்கு எடுக்கப்படுகிறது. காக்கா பிடித்தால் ஒன்றும் நடக்காது.2000 இளைஞர்கள், இளம்பெண்களை சேர்ப்பேன், ஒருவர் 50 ஓட்டுகள் சேகரித்தால் 1 லட்சம் ஓட்டுகள், வெற்றி உறுதி. இதை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டு செல்லுங்கள். வெளிப்பேச்சு, வெளிக்கூட்டணி, கட்சிக்குள்ளே கூட்டணி. இனி, இது நடக்காது. நீ உன்னை திருத்திக் கொள். இன்னும் 4 அலைபேசி வைத்துக் கொள். ரியல் எஸ்டேட் பண்ணிக்கொள், பிழைத்துக் கொள். ஆனால் நீ இந்த கட்சியில் இருக்க முடியாது என பேசினார். கண்டிப்பான ராமதாஸ் பேச்சை கேட்டு பா.ம.க.,வினர் குஷியாயினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

hariharan
மே 12, 2025 19:55

வங்கக்கடலில் வீசினால் தப்பித்து வர கள்ளத்தோணி, கட்டுமரம் கள்ள ட்ரெயின் எல்லாம் இருக்கு.


மணி
மே 12, 2025 18:18

மிச்சமிருக்கும் மரங்களுக்கும் ஆபத்து வரும் போல ?


RAAJ68
மே 12, 2025 13:48

அன்புமணி ராமதாஸ் பேசியதை கேட்கும்போது அவர் பேச்சில் ஜாதி வெறி நன்றாகவே தெரிகிறது இவர்கள் ஒரு கால் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களை தவிர வேறு யாருக்கும் மந்திரி பதவி தர மாட்டார்கள் அரசு பதவிகளிலும் அவர்களே இருப்பார்கள். இவர்கள் நிச்சயமாக ஆட்சிக்கு வரவே முடியாது கூப்பாடு போட்டுக்கொண்டு இருக்க வேண்டியது தான்.


SUBBU,MADURAI
மே 12, 2025 16:22

இந்த மேங்கோ பாய்ஸ்களோட ஒரே காமெடிதான் இந்த தேர்தலோடு வைத்தியர் செல்லா காசாகி விடுவார்.


Kulandai kannan
மே 12, 2025 12:45

இட ஒதுக்கீடு என்ற ஊன்றுகோல் இல்லாமல் வாழ்க்கையை எதிர்கொள்ள உங்கள் ஜாதியினருக்கு அறிவுரை கூறுங்கள்.


Muralidharan S
மே 12, 2025 12:40

மரம் வெட்டி கட்சி...


r ravichandran
மே 12, 2025 11:15

கழகங்கள் இல்லாத கூட்டணி என்று அண்ணாமலை, அன்புமணியின் வழி தான் மிகவும் நல்லது இந்த கட்சிகளின் எதிர் காலத்துக்கு. ஆனால் குறுகிய பலனுக்கு கூட்டணி அமைந்து கொண்டால் இவர்கள் கட்சி ஆட்சி அமைப்பது என்பது பகல் கனவு.


Haja Kuthubdeen
மே 12, 2025 14:02

நீண்டகால பலன் என்றால் ஒரு 50 வருசமாவது ஆகுமே....


r ravichandran
மே 12, 2025 11:13

சீமான் போல ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து நின்று இருந்தால் பாமக இந்நேரம் ஆட்சியை பிடித்து இருக்கும். மாறி மாறி இரண்டு கழகங்களுடன் கூட்டணி வைத்து கொண்டு இருந்தால் தனி தன்மையை இழந்து இன்னும் மோசமான நிலையை அடையும். அன்புமணி ஒரு முறை தனித்து நின்று தோற்ற பின்னர், மீண்டும் கூட்டணிக்கு போனது மிகவும் தவறு. கழகங்கள் இல்லாத கூட்டணி என்ற அண்ணாமலை, அன்புமணி ஆகியோரின் முயற்சிகள் மிக சிறப்பானவை. இப்போது இல்லாவிட்டாலும் பின்னர் பலன் கிடைக்கும். ஆனால் கட்சியில் பதவி ஆசை பிடித்தவர்களால் இது முட்டு கட்டை போட பட்டுவிட்டது.


Amani
மே 12, 2025 09:18

The statement reflect the Shekesphere notes that it is for him, his family and his relatives. Vanniyar community is aware of it.


Ragupathy
மே 12, 2025 08:22

இந்தக் கட்சியினால் பயனடந்தவர்கள் ராமதாஸ் குடும்பம் மட்டுமே... புத்தி இல்லாத மக்கள் இன்னும் இவர்களுக்கு வாக்களிக்கிறார்கள்...


Ragupathy
மே 12, 2025 08:20

இந்தக் கட்சியினால் பயனடைந்தவர்கள் ராமதாஸ் குடும்பம் மட்டுமே. புத்தி இல்லாதவர்கள் இவர்களுக்கு இன்னும் வாக்களிக்கிறார்கள்...


முக்கிய வீடியோ