உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இலவச பயணத்திற்கு மறுப்பு; முன்னாள் எம்.எல்.ஏ., வாக்குவாதம்; சஸ்பெண்ட் செய்யப்பட்ட கண்டக்டர்

இலவச பயணத்திற்கு மறுப்பு; முன்னாள் எம்.எல்.ஏ., வாக்குவாதம்; சஸ்பெண்ட் செய்யப்பட்ட கண்டக்டர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'குளிர்சாதன வசதி அரசு பஸ்சில் இலவசமாக பயணிக்க அனுமதி மறுத்ததால் கண்டக்டர் அபிமன்னனுக்கும், நிலக்கோட்டை தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தற்போதைய பா.ஜ., பிரமுகரான அன்பழகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இப்பிரச்னை தொடர்பாக கண்டக்டரை போக்குவரத்து கழக அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தது மற்ற ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்களில் மாணவர்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், பணிநிமித்தமாக வாரன்ட் வைத்துள்ள போலீசார், எம்.எல்.ஏ.,க்கள் என பல தரப்பினரும் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

முன்னாள் எம்.எல்.ஏ., வாக்குவாதம்

ஏப்.,24 தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து திருச்சிக்கு குளிர்சாதன வசதி அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதி முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வும், தற்போதைய பா.ஜ., பிரமுகருமான அன்பழகன், அவரது மனைவி ஆகியோர் திண்டுக்கல்லில் ஏறினர்.பஸ் புறப்பட்டதும் கண்டக்டர் அபிமன்னன் டிக்கெட் கேட்டார். அன்பழகன்,'' தான் முன்னாள் எம்.எல்.ஏ.,'' என்றார். ஆனால் குளிர்சாதன அரசு பஸ்சில் பாஸ்களுக்கு அனுமதியில்லை என கண்டக்டர் தெரிவித்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வேறு வழியின்றி அன்பழகன் பணம் கொடுத்து டிக்கெட் பெற்றார்.முக்கிய பிரமுகரிடம் வாக்குவாதம் செய்ததாக கண்டக்டர் அபிமன்னனை சஸ்பெண்ட் செய்தது போக்குவரத்துக்கழகம். ஊழியர்கள் கூறுகையில், ''குளிர்சாதன வசதியுள்ள அந்த பஸ்சில் 'இலவச பாஸ் அனுமதியில்லை' என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. சாதாரண பஸ்சில் தற்போதைய எம்.எல்.ஏ.,க்களுக்கும், அவரது உதவியாளர்களுக்கும் பாஸ் உள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ.,வை பொறுத்தவரை அவருக்கு பாஸ் உள்ளது. உதவியாளருக்கு கிடையாது என்றனர்.அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், 'முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கும் குளிர்சாதன வசதிபஸ்சில் இலவச பயணத்திற்கு பாஸ் உள்ளது. இந்த பஸ்களில் போக்குவரத்து ஊழியர்கள் பலர் பாஸில் பயணித்தால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அவர்கள் அனுமதிப்பதில்லை என்பதற்காகவே இலவச பாஸ் அனுமதியில்லை என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Gajageswari
மே 20, 2025 05:45

குட்டையில் ஊறிய மட்டை


Ramesh Kumar
மே 19, 2025 17:14

டிஸ்மிஸ் Dismiss the conductor


Ramesh Kumar
மே 19, 2025 17:12

Fantastic action by transport officers


Ganapathy
மே 19, 2025 11:21

பாஜக தனது கட்சீல ஆளுங்களை சேர்க்கும்போது கவனமா இருப்பதில்லை


சாமானியன்
மே 19, 2025 10:32

எல்லா இலவசங்களையும் ஒழித்து கட்ட வேண்டும். பென்ஷனும் கிடையாது. போனால் போகட்டுமே என ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ் வேணா கொடுக்கலாம்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 19, 2025 09:44

இதுவே திமுகவை சார்ந்தவராக இருந்தால் கண்டக்டர் டிக்கெட் வாங்கி இருப்பாரா. ஒருகால் வாங்கியிருந்தாலும் தற்போது கண்டக்டர் நிலை என்னவாக இருக்கும்


Sivaprakasam Chinnayan
மே 19, 2025 15:03

Why free pass? Its utter waste . Only dedence people and government doctors to be allowed. No difference in.party. every one is making money


R Hariharan
மே 19, 2025 09:32

இவர்களுக்கு ஏன் இலவசதி. ரயில், பஸ் போன்றவற்றில் இந்த வசதியே நீக்க வேண்டும். அவர்களுக்கு பென்ஷன் கொடுப்பதியை நிறுத்த வேண்டும்.


அப்பாவி
மே 19, 2025 09:24

ஒரு தடவை எம்.எல்.ஏ ஆயிட்டா போதும். ஆயுசுக்கும் ஓசிதான். ஏன் டிக்கெட் வாங்கிட்டு பின்னாடி reimbursement வாங்கிக்கலாம் ரூல் போடலாமே.


shyamnats
மே 19, 2025 08:27

மாதா மாதம் லட்சம் ரூபாய்களுக்கு மேல் சம்பளம் வாங்கிய மாஜி அரசியல்வாதிகளுக்கு இலவச சலுகைகள் ஏன் வழங்க பட வேண்டும், கணிசமான பென்ஷனும் வழங்க படுக்கையில்? பெரும்பாலான அரசியல் வியாதிகள் ஊழல் குற்ற சாட்டுகளுக்கு ஆட்பட்டவர்கள் என்பது பொது மக்களுக்கும் தெரியும். தன் கடமையை செய்த நடத்துனருக்கு தண்டனை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை